குறள் 43 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 9 · ஸ்கேன் 42 · மூலமும் சான்றும்