குறள் 50 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 10 · ஸ்கேன் 43 · மூலமும் சான்றும்