குறள் 48 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 10 · ஸ்கேன் 43 · மூலமும் சான்றும்