முரசொலி கடிதங்கள் · 3637
என் உயிரினுமேலான அன்பு உடன்பிறப்புக்களே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3637. என் உயிரினுமேலான அன்பு உடன்பிறப்புக்களே!
அராஜக அ.தி.மு.க. ஆட்சியினருக்கு புத்தி புகட்ட அணி திரள்வீர், சிறை நிரப்புவீர் என்ற இந்த எளியோன் வேண்டுகோளை ஏற்று;
கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்
எங்கே இருக்கிறது அந்த சிறைச்சாலை? அங்கே இருக்கிறதா எங்களுக்கும் போதுமான இடம்?
ஆயிரக்கணக்கில் கூட வரமாட்டார்கள் என்றார்! இலட்சக்கணக்கில் இதோ தயார் என்று அலையலையாய் அணி திரண்ட அன்புச் செல்வங்களே! வெட்டி வா என்றுரைத்தால் கட்டி வரும் கண்மணிகளே!
உங்கள் பாத கமலங்களில் நன்றி குவிக்கிறேன்
நன்றி! நன்றி! நன்றி!
[கையெழுத்துக் கையொப்பம்]
தலைவர், தி.மு.க. 05-07-2012
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 46 (சீதை பதிப்பகம்), Vol46.pdf; PDF பக்கம் 343–343. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.