முரசொலி கடிதங்கள் · 3577
மூன்று மாத ஆட்சிப் பட்டியலே மூச்சு முட்டுகிறதே!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3577. மூன்று மாத ஆட்சிப் பட்டியலே மூச்சு முட்டுகிறதே!
உடன்பிறப்பே,
தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் காவல் துறை ஏவல் துறையாகச் செயல்படுகிறது - சட்டம் ஒழுங்கே இல்லை - பொழுதுவிடிந்து பொழுது போனால் கொலையும், கொள்ளையும் நடைபெறுகிறது - சாலையில் பெண்கள் நடமாட முடியவில்லை - கழுத்தில் செயின் போட்டுக் கொண்டு சென்றால் அறுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள் - ஆட்சியினரால் இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றெல்லாம் தனது ஒவ்வொரு நாள் அறிக்கையிலும் கழகம் ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா குறிப்பிட்டு எழுதியதையும், பேசியதையும் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை?
ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் மூன்று மாதங்கள் முடியவில்லை. இந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் அன்றாடம் நடைபெற்ற சட்டம், ஒழுங்கு சீர்குலைவு நிகழ்ச்சிகளை மட்டும் பொதுமக்களின் சிந்தனைக்குப் பட்டியலிடுகிறேன்.
மளிகைக்கடையில் வியாபாரம் செய்த பெண்ணிடம் பத்து பவுன் தாலி சங்கிலி பறிப்பு (தினத்தந்தி 17.5.2011)
வளசரவாக்கம் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை (17.5.2011)
தோழிக்கு நகை கொடுத்ததைக் கேட்டு அடித்து உதைத்த போதை தந்தையை கத்தியால் குத்தி கல்லூரி மாணவி கொலை செய்தார். (18-5-2001 தமிழ் முரசு)
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் - மூன்று பேர் கைது
பணருட்டியில் நள்ளிரவில் பயங்கரம் - அடகு கடை அதிபர் கொலை - 1 கோடி ரூபாய் நகை கொள்ளை.
நாங்குனேரி அருகில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், வழிப்பறி கொள்ளைக்காரர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி விட்டதாகக் கூறினார். ஆனால்
சென்னையில் திரையரங்கு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து வழிப்பறி (தினமணி 19.5.2011)
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வியாபாரிகள் சங்கத் தலைவர் மனைவியுடன் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியபோது
வழி மறித்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி பறிப்பு. (தினமணி 19.5.2011)
கோவையில் நகைப் பட்டறையில் ஊழியர்களை கட்டிப் போட்டு 1 கிலோ தங்கம் கொள்ளை (தமிழ் முரசு 19-5-2011)
கொடுங்கையூரில் அ.தி.மு.க., - தே.மு.தி.க. மோதல் 4 பேருக்கு அரிவாள் வெட்டு (தமிழ் முரசு 19-5-2011)
பீரக்கன்கரணையில் பயங்கரம் - காவலாளி கொலை -
பணம் கொள்ளை (தமிழ் முரசு)
சென்னை போலீசார் என்று கூறி கோவையில் 18 லட்சம் தங்க நகைகள் கொள்ளை (தினமணி 20.5.2011)
நீலாங்கரையில் பெண் கொலை (21-5-2011 தினமணி)
காருடன் கட்டிட காண்ட்ராக்டர் உயிருடன் எரித்துக் கொலை - சென்னை கிண்டியில் பயங்கர சம்பவம் (22.5.2011)
ஈரோடு அருகே சூரம்பட்டி நகர பா.ம.க. செயலாளர் குத்திக் கொலை (22.5.2011 முரசொலி )
சென்னையில் வழக்கறிஞரிடம் 100 பவுன் நகை கொள்ளை வழக்குப் பதிவு செய்யாமலே போலீசார்
அலைய வைத்தனர் (முரசொலி 23.5.2011)
ஓடும் பஸ்ஸில் துணிகரம் - தூக்கத்தில் இருந்த பயணிகளிடம் 16 லட்சம் நகை, பணம் திருட்டு.
பட்டப் பகலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழ. கருப்பையா மனைவியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு.
கோயில் குருக்கள் வீட்டில் கீவளூரில் நகை கொள்ளை. (24.5.2011 முரசொலி)
திருச்சி சமயபுரம் அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை. (தினத்தந்தி 23.5.2011)
தக்கலையில் மயக்க மருந்து பயன்படுத்தி பெண்ணிடம் 24 பவுன் சங்கிலி பறிப்பு.
சென்னை மெரினாவில் சி.பி.ஐ. போலீஸ் ஏட்டு மனைவியிடம் செயின் பறிப்பு.
ஆளுநர் மாளிகை பாதுகாப்பு வீரர் மாயம் (தினமணி 22.5.2011)
ராயப்பேட்டையில் கார் டிரைவர் வெட்டிக் கொலை (மாலை முரசு 25.5.2011) விருகம்பாக்கத்தில் வீட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை (25.5.2011) சாலை விபத்துகளில்
7 பேர் பலி - கள்ளக் குறிச்சி, வாணியம்பாடியில் (25.5.2011 மாலை முரசு)
மயிலை கபாலி கோயில் அர்ச்சகர் வீட்டில் கொள்ளை - (தமிழ் முரசு 25.5.2011)
சங்ககிரி அருகே இரண்டு வாலிபர்கள் எரித்துக் கொலை (தமிழ் முரசு 26.5.2011)
ஓமலூர் அருகே நெடுஞ்சாலை அதிகாரி வீட்டில் 57 பவுன் நகை, பணம் கொள்ளை.
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம் - ஐந்து பேரை கத்தியால் குத்தி பணம் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.
பழவந்தாங்கலில் பட்டப் பகலில் பயங்கரம் - ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை. (தமிழ் முரசு)
சைதாப்பேட்டையில் தீக்குளித்த பெண், குழந்தையுடன் பலி. (தமிழ் முரசு)
வளசரவாக்கத்தில் பெண்களிடம் 26 பவுன் கொள்ளை. வில்லிவாக்கம் வாலிபர் அடித்து கொலை. ஆவடியைத் தொடர்ந்து திருநின்றவூர் நகைக் கடையில்
கொள்ளை.
அண்ணா நகரில் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செயின் அபேஸ்.
ரோட்டில் நடந்து சென்ற வாலிபருக்கு சரமாரி வெட்டு ; 4 பேருக்கு போலீஸ் வலை (தினகரன்)
திருவான்மியூரில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 15 சவரன் தங்கச் சங்கிலி வழிப்பறி.
திருவான்மியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சான்தினி என்பவரின் 15 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பினர்.
மைலாப்பூரில் காண்ட்ராக்டரைக் குத்தி பணம், வாகனத்தைப் பறித்த கும்பல்.
திருப்பரங்குன்றம் அருகே கல்லூரி மாணவி கொலை
பேராவூரணி - பனியன் கம்பெனி அதிபரைத் தாக்கி கொள்ளை - அண்ணன், தம்பி அடித்துக் கொலை
சென்னை ஐஸ் அவுசில் சினிமா கலைஞர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை (மாலை மலர்)
போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி மர்மச் சாவு. புளியந்தோப்பு பூங்காவில் வாலிபர் கொலை
சென்னையில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை (மாலை முரசு)
கோயம்பேட்டில் ஊராட்சி தலைவி கணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு. மன்னார்குடியில் விவசாயி கொடூர கொலை.
டிராபிக் போலீசாக நடித்து நகை பறிப்பு.
துபாயில் இருந்து விமானத்தில் 2.68 கோடி ரூபாய் தங்கம் கடத்தல்.
கடனைத் திருப்பிக் கேட்ட நண்பர் கொலை.
கோவையில் காந்தி சிலை தலை துண்டிப்பு.
மயக்க குளிர் பானம் கொடுத்து மூதாட்டியிடம் 8 பவுன் அபேஸ்
காஞ்சிபுரம் அருகே போனில் பேசி வரவழைத்து வாலிபர் வெட்டிக் கொலை.
பாண்டி பஜாரில் நடந்து சென்றவர்களிடம் கத்தி முனையில் நகை பறிப்பு. சென்னை அரசு ஆஸ்பத்திரி முன்பு பெண் படு கொலை - சாக்கு மூட்டையில் பிணம்
வாணியம்பாடியில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை.
பூந்தமல்லியில் திருமண வீட்டில் சப் இன்ஸ்பெக்டரிடம் நகை, ரூபாய் மூன்று இலட்சம் கொள்ளை.
சேலத்தில் வாலிபர் அடித்துக் கொலை
வண்டலூர் எஸ்.ஐ.யிடம் 6 லட்சம் ரூபாய் கொள்ளை
சென்னை அருகே போலீஸ் எஸ்.ஐ.யிடம்
25 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் கொள்ளை.
சென்னையில் நடந்து சென்றவர்களிடம் கத்தி முனையில்
வழிப்பறி. சென்னை அடையாறில் மூதாட்டியிடம் 8 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளை.
அடுத்தடுத்து 3 இடங்களில் துணிகரம் - கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை கத்தியால் குத்தி நகை பறிப்பு
கேளம்பாக்கத்தில் போதையில் தகராறு; தந்தை குத்திக் கொலை. ஆண்டிபட்டி அருகே டிபன் பாக்ஸ் குண்டு வெடித்து பெண் படுகாயம். மேல்மருவத்தூர் அருகே அம்மன் கோயிலில் நகைகள், பணம் கொள்ளை. சென்னை பொறியாளர் பார்த்தசாரதி கடத்திச் சென்று எரித்துக் கொலை. மாதவரம்-மதுரவாயல் பைபாசில் கணவருடன் வந்த பெண்ணிடம் 16 பவுன் செயின் அபகரிப்பு.
ஆவடி அருகில் அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக் குத்து. திருநின்றவூரில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை.
பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையம் அருகே விவசாயி வீட்டில் 125 பவுன் தங்க நகை கொள்ளை.
வாணியம்பாடி அருகில் நிலத் தகராறில் தந்தை சுட்டுக் கொலை.
அண்ணா நகரில் இளம் வக்கீல் கடத்திக் கொலையா?
5 லட்சம் ரூபாய் கேட்டு சென்னை மாணவி கர்நாடகத்துக்குக் கடத்தல்
30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அலுமினிய கட்டியுடன் லாரி கடத்தல்.
இன்ஸ்பெக்டர் வீடு உட்பட 4 இடங்களில் கொள்ளை.
ஓட்டல் ஊழியர் தற்கொலை குடும்ப வறுமை.
ஊழியரை வெட்டி செயின் பறிப்பு.
ஓட்டலை மூடச் சொன்னதால் பிரச்சினை துணைக் கமிஷனருடன் அதிமுக பிரமுகர் மோதல்; போலீஸ் தடியடி - ஸ்டேஷனுக்கு அமைச்சர் வந்ததால் பரபரப்பு.
பென்னாகரத்தில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று தாய் தற்கொலை
மைலாப்பூரில் அம்மன் கோவில் கவசங்கள் திருட்டு.
மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் அட்டூழியம் - அரிவாளால் வெட்டி நகை பறிப்பு
வாரிய வீடு வாங்கித் தருவதாக தூர்தர்ஷன் ஊழியர்களிடம் 31 லட்சம் மோசடி.
கோவையில் மகளிர் குழுவிடம் 20 லட்சம் மோசடி.
கதவை உடைத்து செல்போன் கடையில் 3 லட்சம் ரூபாய் கொள்ளை.
சென்னையில் கடைகளில் பூட்டை உடைத்து பல லட்சம்
பணம் திருட்டு. நகை, பணத்துடன் ஏட்டு மகள் மாயம். ஆடிட்டர் மனைவியிடம் 14 பவுன் செயின் பறிப்பு.
வீட்டின் கதவை உடைத்து 80 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை.
திருச்சியில் அழகு நிலைய பெண் கொடூர கொலை.
மணல் கடத்தல் பிரச்சினையில் மோதல்; இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி வெடித்து வாலிபர் மீது குண்டு பாய்ந்தது.
நிபந்தனை ஜாமீனில் வந்த தொழிலாளி அடித்துக் கொலை.
சென்னையில் வீடு புகுந்து ஒரு லட்சம் கொள்ளை.
கிழக்கு தாம்பரத்தில் மூதாட்டியைத் தாக்கி நகை பறிப்பு.
திருமுல்லைவாயிலில் மதுக்கடை அருகே ஆண் பிணம்.
வியாசர்பாடியில் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற இரண்டு ஊழியர்கள் கைது.
திருவொற்றியூரில் பட்டதாரி பெண் மர்ம சாவு.
பொன்னேரி சிறையில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்
செய்யூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை.
பட்டுக்கோட்டையில் பட்டப் பகலில் பயங்கரம் - தலைமை
ஆசிரியர் மனைவி கழுத்தை அறுத்துக் கொலை. ஆரணியில் ஏரியில் மண் சரிந்து தொழிலாளி பரிதாப சாவு. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பயங்கரம் - வாலிபர் வெட்டிக் கொலை
சென்னையில் வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை
பட்டுக்கோட்டையில் டி.வி., கிரைண்டரை அலறவிட்டு, பெண் கழுத்தறுத்து கொலை 6 பவுன், 87 ஆயிரம் கொள்ளை.
ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை.
மணலி, புதுநகரில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் அடித்துக் கொலை.
ரயில்வே அதிகாரி வீட்டுக் கதவை உடைத்து 2 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு.
சென்னையில் 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்.
கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை.
மூதாட்டியைத் தாக்கி தங்க நகை வழிப்பறி கடன் பிரச்சினை - தம்பதி தற்கொலை
மதுரையில் பட்டப் பகலில் பெண் கழுத்து நெரித்து கொலை;
தங்க நகைகள் கொள்ளை. ரேஷன் அரிசி கடத்தல் - 523 பேர் கைது.
லாரி டிரைவரை கொலை செய்து ரயில்வே டிராக்கில் வீசிய கொடூரம்.
வீரவநல்லூர் நகரக் கழகச் செயலாளர் வெட்டிக் கொலை. 3 இடங்களில் வழிப்பறி. தனியாக இருந்த பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு
ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் திருட்டு; நகை, பணம் கொள்ளை.
திருவண்ணாமலை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சியில் காவலாளி கொலை.
வியாசர்பாடியில் போலீஸ்காரரிடம் கத்தி முனையில் செயின் மற்றும் செல்போனை பறிக்க முயற்சி.
புளியந்தோப்பில் தங்க நகை திருட்டு - மந்திரவாதிக்கு வலை.
சைதாப்பேட்டையில் இளம் பெண் கழுத்து அறுத்துக் கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோயில்களில் அம்மன் தாலிகள் திருட்டு.
தாம்பரத்தில் தங்கையை கிண்டல் செய்த வாலிபர் குத்திக் கொலை. வியாசர்பாடியில் மனைவி, 2 குழந்தை கொலை.
மதுரையில் வறுமையின் கொடுமையால் குடும்பமே தீக்குளித்து உயிர விட்டது.
உத்தங்கரை அருகே கோவில் பூட்டை உடைத்து 70 பவுன் நகை கொள்ளை.
தாம்பரத்தில் வாலிபர் படுகொலை.
திருத்துறைப்பூண்டி - முன்விரோதம் காரணமாக விவசாயி அடித்துக் கொலை.
சென்னைக் கடற்கரையில் 3 இடங்களில் வழிப்பறி. காசிமேட்டில் பெண் அடித்துக் கொலை
ரயிலில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு.
திருவான்மியூர் கடற்கரையில் காதல் ஜோடியிடம் கொள்ளை. சினிமா ஆர்ட் டைரக்டர் மனைவியை தாக்கிக் கொள்ளை. அரசு அதிகாரி வீட்டில் பட்டப் பகலில் கொள்ளை. அண்ணா நகரில் மருத்துவரிடம் சங்கிலி பறிப்பு
டாஸ்மாக் கடையில் அச்சரப்பாக்கத்தில் கொள்ளை. ராயபுரத்தில் தாமிர கட்டிகள் திருட்டு.
பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரக் கொலை.
திண்டிவனத்தில் லாரி மீது கார் மோதி சென்னை பேராசிரியர் பலி.
தருமபுரி பகுதியில் ஒரே மாதத்தில் 15க்கும் மேற்பட்ட
வழிப்பறி சம்பவங்கள் - 48 பவுன் நகை கொள்ளை.
சென்னையில் காரில் வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் நூதன கொள்ளை.
சென்னையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடத்தல் - 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.
சென்னையில் குழந்தையைக் கடத்தி விற்பனை. மூதாட்டியிடம் நகை வழிப்பறி
பெண்ணை மிரட்டி நான்கரை லட்சம்ரூபாய் நகை கொள்ளை. பள்ளி மாணவி தற்கொலை.
வேளச்சேரி, ராம்நகரில் 27 சவரன் நகை பறிப்பு.
அதிமுக பிரமுகர் காரில் வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் அபேஸ்.
அந்தமானுக்கு டன் கணக்கில் வெடி பொருள் கடத்தல். தஞ்சை அருகே கத்தியால் குத்தி விவசாயி கொலை. சென்னையில் குழந்தையை கடத்தி விற்றதாக 3 பெண்கள்
கைது.
கூடுவாஞ்சேரியில் பட்டப் பகலில் பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகையை அறுத்துச் சென்றனர்.
அச்சரப்பாக்கத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், கைகடிகாரம் துணிகரக் கொள்ளை.
தாம்பரம் அருகே பஸ் பயணியிடம் 5 லட்சம் ரூபாய் கொள்ளை.
பட்டாபிராமில் மாணவி கடத்தல். காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை. நாகையில் அண்ணனைக் கொன்ற தம்பி படுகொலை.
குமரி மாவட்டம் - செங்கல் சூளை தொழிலாளி சரமாரி குத்தி கொலை.
வாணியம்பாடியில் தொடர் கொலைகள் - காவல் துறை அலட்சியம்.
காஞ்சிபுரம், நாகூரில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை. கொடுங்கையூரில் ஓட ஓட விரட்டி மூதாட்டி படுகொலை. வேலூரில் பிளஸ் 1 மாணவிகள் 3 பேர் கடத்தல். திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை. பைக் மீது வேன் மோதி 2 நண்பர்கள் பலி.
தூத்துக்குடியில் மாணவர் மர்ம சாவு - நரபலியா?
நாச்சியார் கோவிலில் பட்ட பகலில் நகை கொள்ளை.
கிருஷ்ணகிரியில் வாகன தணிக்கையின் போது லாரி மோதி எஸ்.ஐ. பலி.
சேலம் அருகே கழுத்தை நெரித்து தந்தை படுகொலை.
திருவண்ணாமலையில் மனைவி எரித்துக் கொலை
ஆரணியில் கந்து வட்டி மிரட்டலால் தொழிலாளி தற்கொலை. சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து வழிப்பறி
கொள்ளை - பொதுமக்கள் அச்சம், பீதி. குன்றத்தூரில் வாலிபர் கழுத்தறுத்து கொலை.
ஈரோட்டில் வழிப்பறி கொள்ளை. பத்து நாளில் 35 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் இழப்பு.
வியாசர்பாடியில் ஒரே இரவில் 3 வீடுகளில் நகை, பணம்
கொள்ளை.
ஓடும் ரயிலில் தொடரும் நகை பறிப்பு - சென்னை ஆவடி மத்திய சிறப்பு காவல் படை குடியிருப்பைச் சேர்ந்தவர் நிமல். அவரது மனைவி ஆனந்தியிடம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் செயின் பறிப்பு.
பிரியா என்பவர் திரிசூலம் ரயில் நிலையத்தில் 5 சவரன் செயினை பறிகொடுத்தார்.
கடந்த மாதம் திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் ஒரேநாளில் நடந்த 2 சம்பவங்களில் பெண் காவலர் ஒருவர் நகையை பறி கொடுத்தார்.
கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் நகை பறிக்கும் வாலிபர்கள்.
தண்டையார்பேட்டையில் மின் பெட்டிக்குள் வாலிபர் சடலம்.
போலீஸ் நிலையத்தில் பிளேடால் கை, முகத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயற்சி.
குண்டா சட்டத்தில் ரவுடி கைது.
அரிசி கடத்திய ஐந்து பேருக்கு குண்டர் சிறை.
தாம்பரத்தில் நடந்த வாகன சோதனையில்
3 கொள்ளையர் சிக்கினர் - 2 லட்சம் நகை பறிமுதல்.
பேருந்தில் சென்றவரிடம் 50 ஆயிரம் அபேஸ்
வங்கி அதிகாரி வீட்டில் புகுந்து மூதாட்டியைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை.
சென்னை புறநகரில் வழிப்பறி திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்.
திருநின்றவூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு.
சங்கரன்கோவில் அருகே பயங்கரம் - பஞ்சாயத்து தலைவரின் 2 மகன்கள் படுகொலை.
உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் பஸ்சில் கழுத்தை அறுத்து பாங்க் மேனேஜரை கொல்ல முயன்ற கேஷியர்.
நாங்குநேரி அருகே திருமணமான ஆறு மாதத்தில் கர்ப்பிணி அடித்துக் கொலை.
திருப்பெரும்புதூரில் வீட்டில் விபசாரம் - 9 பெண்கள் உட்பட 30 பேர் கைது.
திருத்தணி அருகே சென்னை வங்கி ஊழியர் அடித்துக் கொலையா?
குரோம்பேட்டையில் தூக்கிட்டு இளம்பெண் சாவு.
பட்டாபிராமில் வியாபாரி வீட்டில் 35 சவரன் கொள்ளை.
ஊரப்பாக்கத்தில் பைக் திருட்டு.
கோயில் அறையில் விபசாரம் - 2 பெண்களுடன் பூசாரி சிக்கினார்.
அசோக் நகர் உதவி கமிஷனரைக் கண்டித்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு.
வாடிப்பட்டி அருகே காவலாளியை கட்டிப் போட்டு வங்கியில் கொள்ளை முயற்சி.
மதுரையில் 320 சவரன் நகை மோசடி.
உளுந்தூர்பேட்டையில் அரசு டாக்டர் வீட்டில் 5 லட்சம் நகை கொள்ளை.
100 பெண்களை சீரழித்த போதை சாமியார் நெல்லையில் கைது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் வெட்டிக் கொலை.
பொன்னேரி அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்.
மோட்டார் சைக்கிளில் வந்து நகையை பறித்த சுடிதார் அழகி.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் மோசடி.
எம்.ஜி.ஆர். நகரில் மனைவி உயிரோடு எரித்துக் கொலை. சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது.
திருத்துறைப்பூண்டியில் டாக்டர் வீட்டில் 220 பவுன் கொள்ளை.
கடலூர் மாவட்டத்தில் நகைக் கொள்ளை கும்பல் சங்கிலி
பறிப்பு வீடுகளில் கொள்ளை தொடர்கிறது.
நாகர்கோவிலில் வாலிபர் கொடூர கொலை - கழுத்தை நெரித்துக் கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
ஆவடியில் குழந்தையுடன் பெண் மாயம்.
ஆந்திராவில் இருந்து இரண்டரை லட்ச ரூபாய் போலி மதுபானம் கடத்தி வந்த வாலிபர் கைது.
பட்டுக்கோட்டையில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 22 லட்ச ரூபாய் தங்கம் வெள்ளி நகைகள் கொள்ளை.
போலீஸ் ஏட்டுக்கு சரமாரி வெட்டு.
அண்ணா நகரில் 2 பெண்களிடம் கத்தி முனையில் நகை, பணம் கொள்ளை.
திருவையாற்றில் ராணுவ கேப்டன் வீட்டில் நகை, பணம் கொள்ளை.
ஒசூரில் 106 பவுன் நகையுடன் மந்திரவாதி ஓட்டம். ஆவடியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு.
கோவை - சாலையில் பட்டப் பகலில் ஒருவர் படுகொலை - போலீசார் வேடிக்கை.
கோவையில் பிளஸ் 2 மாணவி குத்திக் கொலை நகைகள் கொள்ளை.
கூடுவாஞ்சேரி அருகே 5 லட்சம் ரூபாய் கேட்டு வியாபாரி கடத்தல்.
பள்ளிப்பட்டில் டியூஷனுக்குச் சென்ற மாணவி கொலை.
எழும்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 3 ரவுடிகள் கைது. ஆதம்பாக்கத்தில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு.
மதுரையில் பட்டப் பகலில் வீடு புகுந்து 32 பவுன் நகை கொள்ளை.
தென் சென்னையில் பெண்களிடம் செயின் பறித்த
கொள்ளையர்கள் கைது.
கிழக்கு தாம்பரத்தில் மார்வாடியை கத்தியால் குத்தி ஒரு
லட்சம் கொள்ளை.
கொருக்குப்பேட்டையில் போலீஸ்காரரைத் தாக்கி 2 பேர் கைது.சென்னையில் பட்டப் பகலில் வங்கி பெண் அதிகாரி படுகொலை நகைகளுடன் மர்ம ஆசாமி ஓட்டம்.
திருவொற்றியூரில் பட்டப் பகலில் 50 சவரன் நகை, பணம் கொள்ளை.
கடலூர் பா.ம.க. பிரமுகர் வெட்டிக் கொலை. பட்டினப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் 12 லட்சம் தங்க, வைர நகை கொள்ளை.
திருவண்ணாமலை அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் படுகொலை.
அதிகாலையில் லாரியை மறித்து, டிரைவரை கொலை செய்த பெண் வேடமிட்ட கும்பல் 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை.
அம்பத்தூரில் நள்ளிரவில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் கொள்ளை.
கடந்த மாதத்தில் மட்டும் 178 கொள்ளை, திருட்டு - திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளை
சம்பவங்கள்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு.
மதுரை திருமங்கலம் அருகே தனியார் பள்ளி மாணவன் படுகொலை.
ரயிலில் பெண் பயணியிடம் 4 லட்சம் நகை திருட்டு.
ரேஷன் அரிசி கடத்தல் - இதுவரை 50 பேருக்கு குண்டாஸ்
கோவையில் தொழிலதிபர், வியாபாரி வீட்டில் 65 பவுன் 11 லட்ச ரூபாய் கொள்ளை.
பால் வியாபாரி வீட்டில் நகை, சிலிண்டர் திருட்டு.
பட்டப்பகலில் பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு.
கத்தி முனையில் மிரட்டி மூதாட்டியிடம் நகை பறிப்பு.
திருப்பூரில் இளம்பெண் கற்பழித்துக் கொலை.
சென்னை விமான நிலையத்தில் 37 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்.
ஆம்பூர் தொழிலதிபர் வீட்டில் 200 சவரன் திருட்டு.
திருவொற்றியூரில் வீட்டிற்குள் புகுந்து 10 சவரன் நகை, பணம் திருட்டு
செங்கற்பட்டு அருகே தே.மு.தி.க. தொண்டர் சரமாரி வெட்டிக் கொலை.
மின்சாரம் பாய்ச்சி கணவர் படுகொலை.
மீனம்பாக்கத்தில் உதவி ஆய்வாளர் மனைவியிடம் 10 சவரன் நகை திருட்டு.
சென்னை கோட்டூர்புரம் போலீஸ் பூத் அருகே தேமுதிக நிர்வாகி துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 14 வயது மகன் கண் முன்னே பயங்கரம்.
கார் மீது மணல் லாரி மோதி சினிமா டைரக்டர் மகள் உட்பட சாப்ட்வேர் இஞ்சினியர் மூன்று பேர் ஈ.சி.ஆர் சாலையில் பலி.
நாகர்கோவிலில் பட்டதாரி பெண் எரித்துக் கொலை - குளியல் அறையில் கருகிக் கிடந்தார்.
ஆரணி அருகே பரிதாபம் - கார் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் ஆறு பேர் பலி.
தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி.
மதுரையில் பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இளஞ்செழியன் கொடூரக் கொலை - 6 பேர் கும்பல் வெறிச் செயல்.
தூத்துக்குடி அருகே தங்கைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய பெயிண்டர் கழுத்தை அறுத்து படுகொலை.
உசிலம்பட்டியில் நள்ளிரவில் பெண்ணை கட்டிப்போட்டு காண்ட்ராக்டரை கொலை செய்து ஐந்து லட்சம் ரூபாய் கொள்ளை.
குமரன் நகர் துணை ஆய்வாளரின் ரோந்து பைக் மாயம்.
சேலத்தில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி உயிருடன் எரிப்பு.
அசோக் நகரில் தம்பதி, குழந்தைகளைக் கட்டி போட்டு, நகை பணம் கொள்ளை.
இஞ்சினியர் வீட்டில் நகை, பணம் அபேஸ். எம்.எல்.ஏ. காரில் 50 ஆயிரம் அபேஸ்
திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் 147 பவுன் கொள்ளை.
தென்காசி அருகே போலீஸ் ஸ்டேஷனில் குண்டு வெடித்தது.
2 பெண்களிடம் தண்டையார்பேட்டையில் பத்து பவுன் மோசடி.
உடன்பிறப்பே, அ.தி.மு.க. ஆட்சி அமைந்து கடந்த இரண்டே மாதங்களில் நடந்த சம்பவங்கள் - சில நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்துள்ளவற்றை மட்டும் என் கண்ணிலே தென்பட்டவைகள் இங்கே தொகுத்துள்ளேன். சட்டம், ஒழுங்கைப் பற்றி தி.மு. கழக ஆட்சியின் போது குறை கூறி வாய் கிழியப் பேசி, அன்றாடம் அறிக்கை விட்ட அம்மையாரின் ஆட்சியிலே நடைபெற்ற இந்தக் கொலை, கொள்ளைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? காவல் துறையினரைக் கேட்டால், “அ.தி.மு.க. ஆட்சியினர் அறிவுரைப்படி நாங்கள் தி.மு. கழகத்தினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை” என்பார்கள்! பொய் வழக்கு போடும் புனிதவதி இந்த உண்மைச் சம்பவங்களுக்கு விளக்கமளிப்பாரா?
அன்புள்ள, மு.க. 3-8-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 45 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065831_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_45.pdf; PDF பக்கம் 290–305. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.