முரசொலி கடிதங்கள் · 3467
36 ஆண்டுகளுக்கு முன் அன்றைய முதல்வர் கலைஞர் நீதியரசர் மகராஜனுக்கு எழுதிய கடிதம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3467. 36 ஆண்டுகளுக்கு முன் அன்றைய முதல்வர் கலைஞர் நீதியரசர் மகராஜனுக்கு எழுதிய கடிதம்!
36 ஆண்டுகளுக்கு முன்பு - தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் - அப்போதும் முதல் அமைச்சராக இருந்தபோது - உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் மகராஜன் அவர்கள் தான் எழுதிய ஒரு புத்தகத்தினை - கலைஞர் அவர்களுக்கு அனுப்பி, அந்த நூல் பற்றிய கருத்தினைத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க -
கலைஞர் அவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு 2-11-1974 அன்று தன் கைப்படவே ஒன்பது பக்கங்கள் அந்த நூலினைப் பற்றி விமர்சனம் செய்து எழுதியதுதான் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
36 ஆண்டுகளுக்கு முன்பு -
முத்து முத்தான எழுத்துக்களில் -
முதலமைச்சர் பதவியிலே இருந்த நிலையில் “டிக்டேட்” செய்யலாம் - உதவியாளர்களைக் கொண்டு விமர்சனக் கட்டுரை ஒன்று எழுதி தட்டச்சு செய்து அதிலே கையெழுத்திட்டு அனுப்பலாம் - நூலினைப் புரட்டிப் பார்க்காமலே வேறு சிலர் தற்போது மற்றவர்கள் எழுதிய அறிக்கையைப் படிக்காமலே கூட கையெழுத்திட்டு அனுப்புகிறார்களே, அவ்வாறு செய்திருக்கலாம் - அப்படியெல்லாம் செய்யாமல் - நூல் முழுவதையும் படித்து விட்டு, அதைப்பற்றி பக்கம் பக்கமாக தன் கையெழுத்தில் எழுதியதற்கு ஒரு உதாரணமாக -
மறைந்த நீதியரசர் திரு.மகராஜனின் திருப்புதல்வர் டாக்டர் சந்திரசேகர் என்பார் பாதுகாத்து வைத்திருந்த அந்தக் கடிதத்தின் நகலை - தற்போது முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் திரு.கிருஷ்ணசாமி அவர்கள் மூலமாக கொடுத்து
அனுப்பியிருப்பதை நம்முடைய வாசகர்களும் படித்திட வேண்டும் என்பதற்காக அந்தக் கடிதத்தை இங்கே அப்படியே வெளியிட்டுள்ளோம்.
(ஆசிரியர் - முரசொலி)
[கலைஞர் 2-11-1974 அன்று நீதியரசர் மகராஜனுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் ஒளிப்பட நகல் தொடங்குகிறது. கையெழுத்து மூலவடிவிலேயே அச்சிடப்பட்டுள்ளது.]
[கலைஞர் 2-11-1974 அன்று நீதியரசர் மகராஜனுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் ஒளிப்பட நகல் — அச்சுப் பக்கம் 300-இல் தொடர்ச்சி.]
[கலைஞர் 2-11-1974 அன்று நீதியரசர் மகராஜனுக்கு கைப்பட எழுதிய கடிதத்தின் ஒளிப்பட நகல் — அச்சுப் பக்கம் 301-இல் தொடர்ச்சி.]
[கலைஞர் கைப்பட எழுதிய கடிதத்தின் இறுதி ஒளிப்பட நகல். கீழ்பகுதியில் கையொப்பமும் 2/11/1974 என்ற கையெழுத்துத் தேதியும் காணப்படுகின்றன.]
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 299–303. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.