கவிதை 50 / 77

ஏற்பாரோ?

Would They Accept?

X
தருமனும் பீமனும் மற்று மூவரும் போதாதுகருணனையும் காதலித்தாள் பாஞ்சாலிஅடடா! இலக்குமியும் பார்வதியும்இசைச் செல்வி கலைமகளும்கடலைதனை வறுக்கவில்லைகற்பிழந்த காரணத்தால்!இந்திரனுக்குடன்பட்டாள்அகல்யை எனும் ரிஷி குலத்தாள்;சந்திரனைக் காமுற்றாள்தாரையாம் தவப் பெண்ணாள்;இத்தனை புராணத்தையும்இந்நாட்டுப் பண்டிதர்கள்முத்தமிழில் தீட்டித் தந்தார்முதுகெலும்பு வளைந்ததாலே!"மலை வந்தெதிர்த்த போதும் கற்புக்குலையோம்" என வீரமொழி பேசும் பெண்டீர்மேற்சொன்ன பெண்களெல்லாம் தெய்வமென்றால்ஏற்பாரோ மானமுள்ளார் உங்கள் பேச்சை?

மூலமும் சான்றும்