கவிதை 60 / 77

அவர் உணர்வாரோ! யார் அறிவார்?

Will He Realise? Who Knows?

X
அவர் உணர்வாரோ!யார் அறிவார்?உடன் பிறப்பே,திட்டித் தீர்க்கின்றார் - என்னைத்திட்டித் தீர்க்கின்றார் - நான்தீயுலையில் காய்ச்சிய சொல் எடுத்துசுட்டிட மாட்டேனா என எதிர்பார்த்துத்திட்டித் தீர்க்கின்றார்!பட்டொளி வீசிடும் பதவியில் அமரப்பலவழி முயன்று - ஒரு வழி கண்டுதிட்டித் தீர்க்கின்றார் - என்னை!"எப்படித்தாக்குதல்? இன்னும் பாரீர்!தப்பிட முடியுமோ - கருணாநிதியால்? உமதுசொற்படி கேட்பேன் பாதமும்சொறிவேன்!சுயமரியாதையைக் கனவிலும் நினையேன்!தயை புரிந்து தந்திடுக பதவி!கட்டிப் பிடிக்கின்றார்தோட்டத்தார் காலை அதனால்திட்டித் தீர்க்கின்றார்தீ நாக்கு சுழற்றுகின்றார்!பதர்களுக்குப் பதில் சொல்லபுதர் வாழ் சிறுத்தைகளா தேவை?இவர்களுக்குப்பதில் சொன்னால்அதைக்கொண்டே பதவி பெற ஓர் திட்டம்!
அதனால்தான்திட்டித் தீர்க்கின்றார் என்னை;கட்டிப் பிடிக்கின்றார் அவர் காலை!பதவியல்ல பண உதவி போதுமென''பத்துத்தலையோர்" கைநீட்டுவதும் நானறிவேன்!போகட்டும் பிழைத்துப்போகட்டு மென்றும்ஆகட்டும் அவர் காரியம் ஆகட்டும் என்றும்ஏசட்டும் அதற்காக என்னை யென்றேஎதிர்த்தொரு வார்த்தை சொல்லாதுவிடுகின்றேன் நான்!வேழத்தைத் தாக்குதல் வேங்கையின் வீரம்"வெண் மூக்குக் குதிரை” யைத் தாக்குதல்வெட்கக்கேடன்றோ!எனவே தான் ஏசட்டும் சிலர் என்றேஎதிர்த்தொரு வார்த்தை சொல்லாதுவிடுகின்றேன்!விரல் கொண்டு நசுக்குகின்ற எறும்பைவேல் கொண்டு வீழ்த்துவது அறிவாமோ?கிட்டியதைத் தட்டிப் பறிக்காமல்காப்பதற்கும்எட்டி எட்டிப் பாய்ந்து ஓர் பதவிபெறுவதற்கும்திட்டித் தீர்க்கின்றார், என்னைகட்டிப் பிடிக்கின்றார் அவர் காலை!"பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்"எனும் குறட் பொருளைஅன்றுணர நான் தவறிடினும்இனும் வேதனை சூழாமல் இருந்திடவேஇன்றவர் உணர்வாரோ - யாரறிவார்?

மூலமும் சான்றும்