கவிதை 61 / 77

போர்வாளாய்ச் சுழலட்டும்!

Let It Whirl as a Battle-Sword!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: போர்வாளாய்ச் சுழலட்டுமே!

X
தேன் மலரில் கூத்தாடிதெரு மணக்க வருகின்றதெற்கத்திச் செல்வமே;தென்றல் மென் காற்றே!ஊன் உயிர் உருகிடவேவான் பரப்பாய் எனைநேசித்தஉடன்பிறந்தார் ஏழுபேர்உனைத் தழுவுதல் போல்உடலிறுகத் தீப்பிழம்பைத் தழுவி விட்டார்!மொழி காக்க; விழி தெறிக்கச்சுழன்றோடும் தீயினிலேஅன்றொருநாள் எண்மர் குளித்திட்டார்;இன்றோ; தமிழர் இனியேனும் எழுவர் என்றேகுன்றாப் புகழ் பூண்டோர் எழுவர் குதித்திட்டார்!கொள்கைக் கோ" கோயிலடி பிருந்தாவன்தீர இளைஞன் திருச்சியிலே மனோகர்அயராத்தொண்டன் ஆரூர் கிட்டுஅரிமா நெஞ்சன் முத்துப்பாண்டியன்அன்னையர் குலத்துக்கொரு சென்னை மேரிகடமையில் தளரா கல்லாவி ராஜேந்திரன்வேல் பாய்ந்து வரினும் விழிஇமையாமேல் மாயில் ஜெகநாதன்இந்த இளந்தருக்கள் எரிதழலில்வெந்துசாகும் நிலை எதற்கு?
நெருப்புத் தேமல்களை தேகமெங்கும்விருப்பமுடன் அணிந்துகொண்டுநாமக்கல் வீரன் நல்இளைஞன் ராமசாமி,சிக்கலூர்ச்சீயம் ஏழுமலை, இராமய்யா,திருப்பூர் வேங்கை திருவேங்கடம், முத்துச்சாமிசிகிச்சை பெறுகின்றார் -"சிங்கங்கள் அஞ்சிடுமோசிறுநரிக் குழுவிற்"கென்றுசெம்மாந்து உரைக்கின்றார்!ஏற்கும் முறையல்ல இதுவெனினும்எரிநெருப்பைப் பனி மழையாய்ஏற்கின்றார் எனும் போதுதோற்கின்றோம் தியாகத்தில் அவர்முன்னே -தொழுகின்றோம்அழுகின்றோம் -எழுகின்றோம்; அவர் வீரம் நம் கையில்போர்வாளாய்ச் சுழலட்டும் - துரோகக்கூர்வாட்கள் உடையட்டும் தூள் தூளாய்!

மூலமும் சான்றும்