கவிதை 62 / 77

இன்னும் யார் யார் பெயர்கள் வரவில்லை?

Whose Names Have Still Not Appeared?

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: இன்னும் யார் - யார் பெயர்கள் வரவில்லை

X
இன்னும் யார் யார்பெயர்கள் வரவில்லை?உடன்பிறப்பே,உன்னிடம் உரிமையுடன் கேட்டுநீ தருகிற நிதியைப் பெற்றுத்தான்கழகப்படகை கடும்புயல்களைத்தாண்டிஓட்டி வந்திருக்கின்றோம்!எப்போது நிதி கேட்டாலும்இல்லையென்று சொல்லாத வள்ளல்பாரியாய்இல்லாதபோதும்இருக்கவே இருக்கிறது என் தலையெனக்கொடுக்க முன்வந்தகொங்குக்குல குமணனாய்அன்புக் கண்மணியே! நீஅன்றும் இன்றும் விளங்குகிறாய்!முன்னமே தெரிந்துதான்நிதியெனப் பெயரிட்டார்போலும்முத்துவேலரும் அஞ்சுகமும்எனமூதறிஞர்முன்னால் பேரறிஞர் உரைத்துப்பதினொரு லட்சத்தைப் பெற்றுக் கொண்டாரே.ஓடியாடி நான் உன்னை நாடியபோது - நீதேடிவந்து தந்த நிதியை!நினைவிருக்கிறதா;நெஞ்சில் பசுமை குலையா அந்த நிகழ்ச்சி!
கழகக் கருவூலம் கருவுற்றிருக்கவில்லை -என்செய்வது; தேவையில்லாத இடத்தில் குடும்பக்கட்டுப்பாடு!சிலரது கருவூலங்கள் ஊடல் கூடலால் அல்ல;ஊழலால் திளைத்து மகிழ்ந்துஉப்பிக் கொண்டே போகின்றன! அவைமழலைகள் அல்ல - மகோதரக் கட்டிகள் என்றுமத்தியப் புலனாய்வு மருத்துவர்கள் உரைக்கின்றனர்.அளவுடன் பெற்று வளமுடன் வாழ்ந்திடும்அரிய நோக்குச் செயல்படஅன்றுமுதல் இன்றுவரைகறைபடாத கருவூலமாய்க் கழகம் திகழ்கிறது!உன்கையில் கிடைத்த ஐந்தும்பத்தும்உடனடியாகக் கழகத் தேர்தல் நிதியெனமாறிஉன்னை என்முன் நிறுத்துகின்றன.உளமார வாழ்த்துகின்றேன் உன்பெயரைப்பார்த்தவுடன்!இன்னும் யார் யார் பெயர்கள்மின்னிடவில்லை முரசொலியில் என்பதையும்எண்ணிடத்தவறேன்நாளைக்கொருசொல்என்னை நீ அறிவாய்!வாளைப்போல் வீச்சு கொண்டு சுழன்றால்நன்றாயிருக்காதல்லவா உனக்கு!"இவர் என்ன தந்தார்?" என்றுஇன்மொழியில் கேட்டால் கூடஇடியொலியாய்த் தாக்குமன்றோ! அதனாலேஇன்றைக்கே உடன்பிறப்பே!சாக்குப்போக்குச் சொல்லாமல்சடுதியிலே அனுப்பிவைப்பாய் கழகநிதி!
பெரியகுளம் நீந்தவேண்டும் - நின்அரிய உழைப்புடனே -அளித்திடுக கழகநிதி! இந்தக்கருணாநிதி கேட்டுக் கழகமாமணியே; நீகைமூடி இருந்ததுண்டோ? உம்!கண்மூடித் திறப்பதற்குள்குவித்திடுககுன்றம்போல்!

மூலமும் சான்றும்