கவிதை 63 / 77
ஒரு சொட்டுத் தேன்!
A Drop of Honey!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: ஒரு சொட்டுத் தேன்
உடன் பிறப்பே,''பசி நோக்கார் கண் துஞ்சார்கருமமே கண்ணாயினார்"பழைய பாடல் இது -பதிந்திருக்கும் உன் மனதில்!புதிய திருப்பம் காண்பதற்கும்'புனிதர்' வேடம் கலைப்பதற்கும்பொல்லாச் செயல்கள் வீழ்வதற்கும்போர்க் கோலம் பூண்டுள்ளோம்!அதில் ஒரு கட்டமே இந்தத் தேர்தல்!அள்ளிப் பொழிகிறார் பணத்தோட்டாதுள்ளியாடுது தோரணமாய்கண்ணைப் பறிக்குது வண்ண விளக்கு!கருப்புப் பணத்தால் "குளத்தையே' மூடுவர்!கண்மணி நீயோ கவலைப்படாமல்கழகக் கொடியைக் கையினில் ஏந்து!உதயசூரியனை உடையினில் பொறித்திடு!
வீதிக்குவீதி சென்றிடுக!வீட்டுக்குவீடு வாக்குத் திரட்டிடுக!★ஒருவருக்கொருவர்உங்களுக்குள்ளேஒரு துளி கசப்பும் வேண்டாம் - அந்தச்சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமன்றோ!★ஏன் காத்து இருக்கின்றாய்?எவர் வருவார் என எதிர்பார்த்து இருக்கின்றாய்?வந்தாலும் ஒரு சொட்டுத் தேன்தானேதருவார் - அதுவரவில்லையென நினைத்து வளைத்திடுக உடலைவில்லாய்!★வகை வகையாய் குடம் குடமாய்த் தேனும் பாலும்தொகை தொகையாய்க் கொள்ளை கொண்டோர்கூடாரத்தில்கண்ணாலே கெஞ்சுகின்றாய் அன்பே!இங்கேது அந்தக் குடம்?அண்ணாவின் தம்பியென்ற 'மகுடம்'தான் உண்டு!★புண்ணான தமிழகத்தின் துயரம் போக்கி-மண்ணாளும் மமதையாளர் கொடுமை நீக்கிபுதியநிலை உருவாக்கப் புயலே! எழுக!புலிப் போத்தாய்ச் செயல்பட உடனே எழுக!★
இடையில் இருக்கும் நாட்கள் குறைவுபடைக்கலம் போலே பாய்ந்திடு கண்ணே!கடையில் விற்கும் பண்டமோ வெற்றி? தளராநடையுடன் விரைந்திடு தொகுதியைச் சுற்றி!அயர்வை உதிர்த்திடு! ஆற்றலைக் காட்டிடு!வியர்வை துடைத்திட நேரமும் இன்றிஆல்போல் தழைத்த கழகத்தின் உயிரே! நீவேல்போல் பறந்து வெற்றி பறித்திடு!