கவிதை 64 / 77

விதையாய் முளைத்து விழுதுகள் விடட்டும்!

Let It Sprout as Seed and Put Forth Roots!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: விதையாய் முளைத்து விழுதுகள் விட்டோம்

X
விதையாய் முளைத்துவிழுதுகள் விடட்டும்!உழவரது வியர்வையினால் சூல் கொண்டகழனித்தாய் வயிற்றினிலே மகளாய் வந்து,அனைவரது சீராட்டும் பெற்றுக் கொண்டகதிராம் மங்கை;நிற்கின்றாள், பொங்கல் நாளில்!மணவறையில் பெண் போல தலைகுனிந்துதமிழர் என்போர் மகிழ்கின்றார்;தைதை என்றே குதிக்கின்றார்!ஒளிவரவால் இருள் மறையும்உளிவரைந்த சிற்பங்கள் பளபளக்கும்!பொங்கல் நாளில் புதுப்புது இன்பம்எங்கணும் தோன்ற எழுந்தான் கதிரோன்!எதையும் பண்புடன் அணுகி வென்றிடஉதயசூரியன் உயர்ந்தான் இன்று!"கதையாய்ப் போனதோ தமிழ் இன வாழ்வு?"எனும் நிலைமாற்றி --விதையாய் முளைத்து விழுதுகள் விடட்டும்;நம் இனமான உணர்வு!

மூலமும் சான்றும்