கவிதை 65 / 77
சூரியனைப் பனிக்கட்டி என்கின்றார்!
He Calls the Sun an Ice Cube!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: சூரியனைப் பனிக்கட்டி என்கிறாய்!
சூரியனைப் பனிக்கட்டி என்கின்றார்!உடன்பிறப்பே.ஆட்சி போய்விடுமோ என்றுஅழுகிறேனாம் நான்!ஆனந்த விகடன் சிரிக்கிறது!அட்டா; என்ன திருப்தி அதற்கு!செங்கோல் பறிக்கப்படினும்சிறிதும் கவலையில்லை - என் கைஎழுதுகோலை எவரும்பறிக்க முடியாதென்றுமுத்தமிழ்ப் பேரவையில்முழங்கினேன் நான்! அதுமுகாரியாகத் தெரிகிறதாம்மூதறிஞர் விகடனார்க்கு!★ ★ ★"எழுதுகோல் இவர் கையில்இருக்கும்வரை;செங்கோல் போயினும்கவலையுறார் கருணாநிதி" என்று
கண்ணதாசக் கவிஞன் பலமுறைகர்ச்சித்த வாசகத்தைத்தான்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில்பீடு தமிழில் பெருமிதமாய்க் கூறினேன் நான்★ ★ ★தழுதழுத்த குரலில் பேசினேன் என்றும்-தவுலைப் போல் அடிவாங்கத் தயார் என;தண்டனிடும் தொனியிலே உவமை சொல்லிதலைதொங்கிப் போனேன் என்பது போல்-தரமுள்ள விகடனார் இந்த வாரம்;தகுதியென எண்ணி ஓர்விமர்சனம் செய்துள்ளார்!தலையங்கத்திலும் கூட எனைப் பழித்துதலையாய வீரத்திற்குஇலக்கண முரைத்துள்ளார்!★ ★ ★சென்னை டெல்லிக்கு ஆணையிட்ட நாள்சென்று விட்டதென்று;செப்பினார் பிரதமர் என்பதற்காக நான்சீறி விழவில்லையாம்!சீண்டி விடுகிறார் விகடன்!அப்படி நான் ஆணையிட்டிருந்தால் அல்லவாஎப்படிச் சொல்லலாம் இப்படி எனச்சினந்திட?★ ★ ★
ஏனோ விகடனார் மறந்து விட்டார்-எமர்ஜன்சி நேரத்தில்;என் வீட்டுக்கே டெல்லி தூதனுப்பி;எமர்ஜன்சி எதிர்ப்பைக் கைவிட்டால்-அவதிகள் எவையும் அணுக மாட்டா,அவதூறு வழக்கும் தொடுக்க மாட்டோம்ஆட்சியின் ஆயுளும் ஓராண்டு நீட்டிக்கும் எனஆசைகளை மூட்டிப்பார்த்தார்!அசைந்து கொடுத்திருந்தால்ஆண்டொன்று மிசாச் சிறையில் - என்அருமைக் கண்மணிகள் ஐநூறு பேர்அவதிப்பட்டிருக்க மாட்டார்!ஆட்சியும் தொடர்ந்திருக்கும்-ஆனால் ஒன்று; மானம் போயிருக்கும்!★ ★ ★எமை நத்துவாயெனஎதிரிகள் கோடி இட்டழைத்தாலும்தொடேன் என்றுரைத்துத்தோளுயர்த்திக் காட்டியபாவேந்தர் பாட்டை மட்டுமல்ல; அவர்பாட்டையையும் மறக்காதோர் நாம்!கேலி புரிகிறார் நமைப் பார்த்து விகடனார்!போலிக்கும் உண்மைக்குமுள்ளமுரண்பாட்டை;
சிரித்து மகிழும் அந்தப் பண்பாளர்சிந்தித்தால் உணர்ந்திடுவார்!★ ★ ★அறுபத்து ஏழாம் ஆண்டு தேர்தலிலேஅண்ணா, ராஜாஜி, காயிதேமில்லத்,ம.பொ.சி. நம்அணியில் இருந்த பி.இராமமூர்த்திஅனைவரையும் கழுதை மீது அமர்த்திக்கார்ட்டூன் போட்டுச்சிரித்தவர்தானே விகடனார்கற்பூர வாசனையை கழகத்தின் உறுதியினை,சுலபத்தில் அவரால் உணரத்தான் முடியாது!அதனால்தான்சூரியனைப் பனிக்கட்டி என்கிறார்!