கவிதை 66 / 77
நடையை நிறுத்தாதே!
Don't Stop Your Stride!
நடையை நிறுத்தாதே!உடன்பிறப்பே.நாய்கள் குரைத்துக் கொண்டேயிருக்கும்அதற்காக நீ உன் நடையை நிறுத்தாதே!நடுங்கி, ஒடுங்கி, ஓரம் ஒதுங்கத் தேவையில்லைநாம் போவது கொள்ளையடிக்க அல்லவே; கொள்ளைகளைதடுத்து நிறுத்தத்தானே!கொள்கை பரப்ப - குறிக்கோளை எட்டிப்பிடிக்க - வெற்றிக்குன்றின் மீது ஏறிக் கொடி நாட்ட!தூவப்படும் எதிரிகளின் கலக விதைகள் முள்ளாக விளைந்துதூயவனே! உன் கால்களில் குத்தும் உன்னைத்தொடர்ந்து வருவோர் பாதங்களைக் காயப்படுத்தாதிருக்கஅதைத்தூக்கி, முனை முறித்துத் தொலைவில் போட்டுவிடுக!பாதையில் குறுக்கிடும் காட்டாறு கண்டு பதறத் தேவையில்லைஉன்பாட்டன், பூட்டன், தாய், தந்தையர் கடந்தது எப்படி எனக்கணக்கிட்டுப்பாலம் அமைத்தோ. தோள்பலம் காட்டி நீந்தியோபாதியில் பயணம் தடைபடாமல் ஏறுக கரையில்!ஊளையிடும் நரிகளின் கூட்டம் ஒன்று வலப்புறம் போகும்மற்றொன்று இடப்புறம் போகும் அவைவலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலேவிழுந்து பிடுங்காத அளவுக்குப் பார்த்துக் கொள்க!புதர்களில் விலங்குகள் மலைப்பாம்புகள் புரளும் - அந்தஇடர் களைய மட்டுமே கையில் ஆயுதம் தேவை!பதர் என மண்டும் மனிதப் பகையினை மாய்க்க
பண்பெனும் வாளும் அன்பெனும் கவசமும் ஏந்திச் செல்க!உறைபனி மூடிய முகடுகள் மீதுஊக்கமுடன் நீ ஏறிடும் போது;உட்பூசலற்ற காலணி இருந்தால் தோது.ஒருக்காலும் வழுக்கவே வழுக்காது!ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்க் குவிந்தஅழுக்குச் சிந்தனை. ஆதிக்கச் சுமைகள்அகற்றிடவே உன் பயணம்; அதனை மறந்துஅகதியாய்த் தமிழனை விட்டு விடாதே!பாயிரம்பாடி உனக்குப் பாராட்டு படித்து,பதவியைக் காட்டிப் பல்லக்கும் சுமந்திட,பகைவர்கள் நண்பராய்க் காட்சி தருவர் - அந்தப்படுகுழியில் விழாமல் உன்னையும் காத்து இனத்தையும்காத்திடுஅய்யா பெரியார் வாழ்க என முரசறைந்து பாடு!அறிஞர் அண்ணா வாழ்க என சங்கொலித்து ஆடு!களைப்பின்றித் தொடரலாம் கடும் பயணம் அனைத்தும்;உழைப்பின்றி இருப்போரைச் சிற்றெறும்பும் பழிக்கும்!கடமையினை உணர்ந்து, கண்ணியத்தில் மலர்ந்து வெல்க;கட்டுப்பாடு குலையாமல் கழகப் பயணம் செல்க!கணநேரமும் ஓய்வில்லை என்று சபதம் செய்க! உடன்பிறப்பேவளம் பரப்பத் தமிழகத்தில் மழையாய்ப் பெய்க!எலிகளுக்கும் கரையானுக்கும்இடையிடையே உன் வழியில்தீனி போட்டாலும் போடு; ஆனால், சிலஏடுகளுக்கு மட்டும் தீனி போடாமல் எச்சரிக்கையாய் இருந்திடுநூறாயிரம் காலத்துப் பயிரப்பா கழகம் - இதனைவேரோடு வீழ்த்திட எத்தர்கள் சிலபேர்தேனோடு விஷம் கலந்து தருகின்றார் கவனி! நம்ஊனோடும் உயிரோடும் இணைந்த கொள்கைக்குநடத்திடுவோம் வெற்றி பவனி!