கவிதை 67 / 77

பாமரர் நிறைந்த பட்டிக்காடு!

A Backwater Full of Ignorant Folk!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: பாமர் நிறைந்த பட்டிக்காடு

X
பாமரர் நிறைந்த பட்டிக்காடு!பாமரர் நிறைந்த பட்டிக்காடு-பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!இருக்கும் ஒன்றிரண்டு நல்லோர் பதறி;எதிர்த்துக் கூற எழுந்து நின்றால்,இழுத்துத் தள்ளுவர் எரியும் நெருப்பில்!கொழுத்துத் திரிவோர் கூட்டம் அல்லவா?பாமரர் நிறைந்த பட்டிக்காடு-பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!குட்டி நாய்கள் குரைக்குமென்றறிந்துரொட்டித் துண்டுகளை வீசி அவற்றின்வாயை அடைத்து வலையில் மாட்டுவர்!"மாயை" ஒன்று மண்டபத்து நடுவில்-உருகப் பேசும்; உண்மையை ஒளிக்கும்!கருவிலிருந்தே அது கற்ற வித்தை!பாமரர் நிறைந்த பட்டிக்காடு -பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!ஊர் வாழ உருப்படியாய்த் திட்டமில்லைசீர் மேவித் தான் மட்டும் வாழ்வதற்கு,ஊழல் விளைப்பதுதான் மாயைக்கு வேலை!உதவாது இது என்றாலோ உரித்திடுவார் தோலை!
ஒவ்வொரு நாளும் புதுப்புது சட்டம் - இன்னும்,உறக்கம் கலையா காரணத்தால் அடிக்கின்றார் கொட்டம்!பாமரர் நிறைந்த பட்டிக்காடு-பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!பத்தினிக் கண்ணகி அன்று கனன்றுமதுரையை எரித்தாளாம்; அதுபோல்பதிலுக்கு நானும் எரிக்கின்றேன் பார் என்றுபாஞ்சாலிதேவி பத்திரிகையை எரித்திட;முதுகுக்கு எலும்பை முட்டுக் கொடுத்தும்-முட்டாள் கூட்டம் கூனிக் கிடக்குதாம்!பாமரர் நிறைந்த பட்டிக்காடு-பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!"இந்தக் கிராமத்தையே இலையில் இட்டுவெந்ததும் வேகாததுமாய்த் தின்று தீர்ப்பேன்எந்தன் முடிவு இதுதான்" என்றுஅந்த மாயை சொன்ன போதிலும்ஆதரவு அளித்துக் காலில் வீழ்ந்திடஆமாம் சாமிகள் அப்போதும் தயார்!பாமரர் நிறைந்த பட்டிக்காடு -பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!முரணாகப் பேசுவதே வேதம் என நவின்றுமுருங்கைமரம் வீடுகட்டப் பயன்படுமென்பார்!அரணாக மெழுகுவத்திச் சுவர் ஒன்று வைத்தால்அக்கினியும் அஞ்சியோடி ஒளிந்து விடும் என்பார்!ஆயிரம் பாபங்கள் நான் செய்வேன் என்பார்-ஆண்டவன் என் பக்கம்!... அதுவுமில்லை; அந்த
ஆண்டவனும் நானேதான் என்பார்!பாமரர் நிறைந்த பட்டிக்காடு-பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!எல்லோரும் கைதூக்கும் பதுமைகளாய் இருந்து-இடது கை, வலதுகை இருகையும் தூக்கும்போது,பொல்லாத மாயைக்குப் பொங்காதோ பூரிப்பு?நில்லாத நெடுஞ்சுவராய்ச் சரிவதற்குள்;கல்லாரும் கற்க வேண்டும்; அறவழியில்,கயமையினை விரைவினிலே மாய்ப்பதற்கு!பாமரர் நிறைந்த பட்டிகாடு-பஞ்சாயத்து சபையில் அவர்களே பலர்!

மூலமும் சான்றும்