கவிதை 68 / 77
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடு
Tamil Nadu Is Being Looted
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: கொள்ளை போதும்மா தமிழ்நாடு
கொள்ளை போகுதம்மா தமிழ்நாடுஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதம்மா தமிழ்நாடு - ஒருபாழும் ஆட்சி செய்யும் கொடுமையாலே; வாழ்வில்பகலும் இருள் ஆகுதம்மா கவலையாலே!ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!ஜான்சிராணி யென்று கூறியல்லோ ஆட்சியிலே ஏறினார்அரசின்டான்சி நிலத்தை வாங்கியன்றோ சட்டம் மீறினார்!ஆணவத்தின் உச்சியிலே ஆட்டம் போடுகிறார் - இதோஅகந்தையை மாய்ப்பதற்கு மக்கள் கூறுகிறார்!ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதம்மா தமிழ்நாடுஆம்னி பஸ்களில் ஊழல் ஆறுகோடி என்கிறார்அரசின் பீர் தொழிற்சாலை விற்று இருகோடி சுருட்டுறார்.நாமினியும் விழிக்காவிடில் தம்பி;நமது நாட்டை சுடுகாடாக்கி நீட்டிடுவார் கம்பி!ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!
குண்டர் படையை வைத்து ராஜ்யமே நடத்துறார்குறை சொல்லும் ஏடுகளை வீதியிலே கொளுத்துறார்டெண்டர் விடாமலே சர்க்கார் சொத்துக்களை விற்கிறார்;அண்டர் கிரவுண்டிலே பல லஞ்சங்களை வாங்குறார்!ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!பழிவாங்க மட்டும் உச்சமன்ற அப்பீல் என்றுபலகாத தூரம் டெல்லிக்கு ஓடுறார்; ஆனால்அய்க்கோர்ட்டு தீர்ப்பே போதுமென்றுதனியார்க்கு மருத்துவக் கல்லூரியைத் தாரை வார்த்துத்தருகிறார்!ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதும்மா தமிழ்நாடு!டாமின் ஸ்பிக் பங்கு ஊழல் என்றும்அரவைமில்லு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஊழல் என்றும்டாம்பீக சுற்றுலா ஊதாரிச் செலவு ஊழல் என்றும்அத்தனையும் எடுத்துச் சொல்ல முடியுமா இன்றும்!ஊழல் பெருச்சாளிகளின் தொல்லையாலேகொள்ளை போகுதம்மா தமிழ்நாடு!