கவிதை 69 / 77
என்ன தேசமடா இது?
What Kind of Country Is This?
என்ன தேசமடா இது?என்ன தேசமடா இது? இங்கு,எத்தனுக்கு வாழ்வு தரும் மோசமடா!நீரும் எண்ணெயும் போல் பற்று பாசமடா! அட:நீலிக் கண்ணீர் வடித்தே கழுத்தறுக்கும் நேசமடா!கூளமெல்லாம் கூர்வாளாய் நினைத்துக்கொண்டு;மேளங்கொட்டி முரசுதட்டி மெலுக்காக ஆடுதடா!ஆளவந்தார் அடிக்கின்றார் கொள்ளையென்றால்;தாளம் போடும் தாசர் கூட்டம் பெருத்ததடா!கைநீட்டிக் காசுபணம் பதவிகளைப் பெறுவதற்குக்கடைக் கோடிப் பல்வரிசை காட்டியே நிற்குதடா!பைநிறைய லஞ்சத்தொகை பலலட்சப் கொட்டித்தந்துவை தலையைக் காலில் என்றால் தட்டாமல் வைப்பாரடா!என்ன தேசமடா இது? இங்குஎத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!வானுக்கோர் எல்லையில்லையடா வைகயத்தில்;வறுமைக்கோர் எல்லையில்லையடா இந்தியத்தில்!வருஷத்தில் பத்து ஊழல் வந்து வந்து போகுதடா:அர்ஷத்து மேத்தா ஊழல் அவமானச் சின்னமடா!கொள்கை உறுதியென்பார்; ஒழுக்மென்பார்;கொடி, சின்னம் எமக்கேயென்பார்!கொடுத்திட்ட பணத்துக்கு கூலிக்கு மாரடிப்பார்;கொடுக்கறுக்கும் நாள் வரையில் குதிக்கின்ற தேள்களடா!
ஆதிக்கவர்க்கத்தார் ஆட்சியிலே வந்துவிட்டார்;பாதிப்பு பலவரினும் பத்திரிகை பாராட்டுதடா!என்ன தேசமடா இது? இங்குஎத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!பெரியார் அண்ணா வழித் தோன்றல் நானே என்பார்நரியார் தன்னைச் சிங்கமென நம்பச் சொன்னால்;நாடாள்வதால் நாமம் வாழ்க என நவில்கின்றார்!நலம்பெற்றோம் அவராலே நாமார்க்கும்குடியாவோம் என்கின்றார்.குன்றிமணி மானம் சிந்திடினும் உயிர் வாழார் முன்பெல்லாம் -குன்றளவு மானம் போனால்தான் என்னவென இன்றுகுன்றனையார் சிறிதும் குன்றாமல் குனிகின்றார்!குன்றாம் தாழ்ந்து கோடு உயர்ந்த கதை தொடர்கதையா?நன்றியெனும் மூன்றெழுத்தை மலமாக்கித் தின்னும்பன்றிகளும் புரளுகின்ற சாக்கடையாய்ப் போனதடா!என்ன தேசமடா இது? இங்குஎத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!முந்தித் தவமிருந்து முந்நூறு நாள் சுமந்த தாயின்தொந்தி சரியக் குத்தீட்டி வீசும் பிள்ளையடா!அந்திப் பொழுதை விரட்டி அழகாய்ப் பூத்த நிலா தி.மு.க.; அது,மந்தி கைக்கு எட்டாததால் சந்தி சிரிக்க அலறுதடா!இந்திதனை எதிர்ப்பதற்கும் இனம் மொழியைக் காப்பதற்கும்இருக்கின்ற அரண் இதனை அழிப்பதற்குத் திட்டமடா!பந்திக்கு நான் என்றும் படையென்றால் நீ என்றும்சிந்தித்துச் செப்பியோடும் சில்லறைகள் ஓசையடா!குந்திக்குக் குழந்தை எனக்கேட்டு - வயிற்றில்குத்திக்கொண்ட காந்தாரிகள் ஆசையடா!
என்ன தேசமடா இது? இங்குஎத்தனுக்கே வாழ்வு தரும் மோசமடா!தலைவியின் பிறந்த நாள் என்றால் தவறாமல் போடட்டும் மாலை!தலங்கள் தோறும் மந்திரிகள் காவடி எடுப்பதுவோபகுத்தறிவு வேலை?தலைமொட்டை அடிக்கின்றார், தத்தோமெனக் குதிக்கின்றார்தழையுடுத்தி உருளுகின்றார் தையலர்கள் தீயும் மிதிக்கின்றார்!தன்மான இயக்கமென்றும் இனமான முழக்கமென்றும்தமிழகத்தில் விளைத்து வைத்த அறிவுக்கதிர் அனைத்துமேதாசர் புத்தி தலைக்கேறி தடுமாறிச் சாய்ந்தடா! இனித்தமிழ் மண்ணில் புது எழுச்சி எப்போதடா?தயங்காமல் புறப்படடா; தமிழா! உன்தடந்தோள் தட்டிக் கிளம்பிடடா!