கவிதை 70 / 77

முகமூடி கிழித்தெறிவோம் வாரீர்!

Come, Let Us Tear Off the Mask!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: முடியுமா? கிழித்தெறிவோம் வாரீர்!

X
முகமூடி கிழித்தெறிவோம் வாரீர்!சடை வளர்ப்பார் - பக்திக்கடை விரிப்பார்; வலியபடைகொண்டு பாராளும் அரசினையும்பணிய வைப்பார்! மின்னல்இடைகொண்ட மாதர்களும்; தங்குதடையின்றி அவர் மாயை வீழ்ந்திடுவார்!முடிகட்டிக் குடில்கட்டிமுனிவர் என வாழ்ந்தார் அந்நாள்அவர்கள்கூட முற்றும் துறக்காத நிலையில்பற்றுண்டு மங்கையர் மேல் என்று பெற்றிட்டார் பிள்ளைகளை!போதி மரத்துப் புத்தர் என்றும் மகாவீரர் என்றும்.ஆதிசங்கரர் என்றும் இராமானுஜர் என்றும்;ஓதினார்கள் உயர்கொள்கை எனினும்; அவர்தம்வழி வந்தோர் எனச் சொல்லிக்கொண்டுவன்முறையில் வழுக்கி விழுந்தோரும்வருணாசிரமச் சகதியில் விஷவிதையை நட்டோரும்பெருகிவிட்ட காரணத்தால்கருகிவிட்ட தளிர் மரம்போல்ஒழிந்துவிட்டதந்தோ அறவொழுக்கம் துறவொழுக்கம்வழிந்துவிட்டது தரையில் பால்போல சமுதாய முன்னேற்றம்!கடவுளைக் காட்டுகிறேன் வா என்றுகட்டிலுக்கு அழைப்பவனெல்லாம்கடைந்தெடுத்த துறவியாம் சாதுவாம் சாமியாம்காமன்கணை தொடுக்கும் தயவனெல்லாம்காட்டுகிறேன் சொர்க்கமென்று பெண்களையேமீட்டுகின்றான் வீணையாக!ஆன்மீகத்தில் அஃதோர் அத்தியாயம் போலுமெனஆட்சேபணை ஏதுமின்றி ஆரணங்குக் கூட்டம் - அவன்ஆசையைப் பூசையென நம்பி;ஏமாறுவது அத்தியாயமா? அநியாயமா?எத்தனை மகாத்மாக்கள் சாயிபாபாக்கள்எத்துணை அற்புதம் புரிந்து காட்டிவிட்டார்அத்தனையும் ஓர் நொடியில் ஒரு மாஜிக் நிபுணன்அரங்கொன்றில் காட்டுவதை அறிந்திருந்தும்அடி முட்டாள்களாய் மக்கள் ஆவதென்ன கொடுமை!ஆண்டவனுக்கும் மனிதனுக்குமிடையில்அவன் என்ன தரகன்?தெய்வத் திருவருள் பெற்றவனுக்கேன்தட்சணை, காணிக்கை, தினந்தோறும் பூஜை?அனைத்தும் துறந்தவனின் அங்கமெலாம்நனைத்துக் குளிப்பாட்ட பன்னீர் ஏன்? பாவை ஏன்?நிர்வாணநிலை பெற்றோன் என்பதற்கறிகுறிதான்நிர்வாணமாய்ப் பெண்கைளப் படமெடுத்து ரசிப்பதுவோ?தண்டு கமண்டலத்தில் முறையேதகதகக்கும் வாளும் மதுவும்
உண்டு கொழுத்து உப்பிக் கிடக்கின்ற உருவும்பெண்டுகள் பலர் உடலமுக்க உல்லாசம் புரிகின்ற குருவும்கண்டு கண்டும் இன்னும் அறிவுத் தெளிவில்லாமண்டுகளாய் மக்கள் கூட்டம் - இருப்பதேனோ?கள்ள நோட்டு அடிப்பதற்கோர் ஆசிரமம் - தங்கத்தைப்பள்ளம் தோண்டி புதைத்து வைப்பதற்கோர் ஆசிரமம் - இந்தக்குள்ளமனத் திருடர்களை நம்பிக் கும்பிட்டுத் தொழுகின்றவெள்ளைமனப் பெண்டிரையோ திருத்துவது மகா சிரமம்!ஊரை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதிலே ஆண் என்ன; பெண் என்ன?
கூரை வீட்டில் கொள்ளி வைப்பவரைத்தேரில் வைத்து திருவிழா நடத்துகின்ற கூட்டத்தார்சாரைப் பாம்புக்குச் சால்வை போர்த்திச்சாக அடிக்கின்றார் பகுத்தறிவுச் சிந்தனையை!பதவி உயர்வுக்கென்றும், பணமலை குவிப்புக்கென்றும்பற்பல அதிகார வர்க்கத்தார் சாமியாரின் பொற்பாதம் கழுவுகின்றார்!பிள்ளையில்லாக் குறை நீங்க அரசமரம் சுற்றிவிட்டுகிள்ளைமொழிப் பேதைகளும் இந்த ஆண்டிமடம் செல்கின்றார்;கையருள் பாலித்து அவள் மெய்யது போர்த்திக்கணவனாய் மாறிக்கொண்டு தருகின்றான் தையலர் கேட்டவரம்!கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்புச் சேட்டை எனஅலை அலையாய்ச் செய்திகள் அன்றாடம் வந்தாலும்ஆசிரமத்துச் சடாமுடியில் ஒரு மயிர்கூட உதிராதபடிக்குஅரவணைத்துப் பாதுகாக்க அரசுகள்தான் இருக்கின்றனவே!அமைச்சர்களே சாமிகளின் அடிமைகளாய் மாறி; - ஊரின்புகைச்சலுக்கு அஞ்சாமல் வீற்றிருப்பின்நெருப்பின்றிப் புகையாது என்பதை நிரூபிக்கத்தீ பரவும்! திக்கெட்டும் பரவும்!தெய்வீகத் திரைமறைவில் வாழ்கின்றதிருடர் செயல் தீய்ந்து போகும்புரட்சிக் கவிஞருக்கு விழா எடுத்துபுதிய புதிய நூல்கள் ஆய்வு செய்துஎழுச்சிமிகு நிகழ்ச்சிதனை நடத்தினால் மட்டும் - போதாதய்யா''உழைக்காத வஞ்சகர் தம்மை மிகஉயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?" எனஉணர்ச்சியோடு கேட்டாரே; அக்கவிஞர்! அந்தக்கிளர்ச்சிகொள் நெஞ்சுடனேகிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டமெனமுரசறைந்து புறப்படுவோம்; மோசடித் துறவிகளின்முகமூடி கிழித்தெறிவோம்! வாரீர்!

மூலமும் சான்றும்