கவிதை 71 / 77

பதில் என்ன? பகர்ந்திடுக!

What Is the Answer? Tell Us!

X
பதில் என்ன? பகர்ந்திடுக!பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்பைந்தமிழ் நாடு! இதன்வேருக்குள்ளே வெந்நீர் ஊற்றியதால்வெந்து குலைந்தது பழம் பண்பாடு!அதுஊருக்குள்ளே நச்சு மரம் ஒன்று --உணவுக்குத்தான் பழுத்த தென்றுஓடித் தின்று உயிர் விட்டவர் போலேஓட்டளித்துக் கெட்டனரே நாட்டோர்!உத்தமராய் சிலர் வேடமிடல் எளிது - அதைஉணர்ந்து கொண்டு விழிப்பாய் இருப்பதுதான் அரிது!பத்தரை மாற்றென்று சொன்னவர் ஆட்சி இன்றுஅத்தனை பொருளையும் சுருட்டுவதே சாட்சி!தனியார்க்கே எலாம் என்று தாரைவார்த்து நாட்டைதடையின்றி வரவேற்கப் போகின்றார் கேட்டை!இனி யார்க்கும் ஏழைகட்கு வாழ்வில்லை இங்கேவெளியார்க்கு வழிவிடவும் ஊதிவிட்டார் சங்கை!சிறுத்தைகளாய்ச் சிங்கக் குருளைகளாய்சிலிர்த்துக் கிளம்பிடும் இளைஞர்களே!சீறும் எரிமலை புயலென மாறிசரித்திரம் படைக்கும் தம்பிகளே!
பொறுத்தது போதுமெனப்பொங்கி எழப் போகின்றோமா? அல்லால்;கருத்தழிந்த கழுதைகளாய் - மேலும்பொதி சுமக்கப் போகின்றோமா?

மூலமும் சான்றும்