கவிதை 72 / 77
கா, கா, கா!
Kā, Kā, Kā!
கா, கா, கா!கா, கா, கா,பாட்டொன்று பராசக்தியில்கேட்டனையா தம்பி!பகுத்தறிவாளருக்கேபாடம் போதிக்கும் உடுமலையார் பாட்டு!பலன் பெறவே கூலிக்கு மாரடித்துத்தடம் மாறும் கூட்டத்துக்கு, அது வேட்டு!கா, கா, கா,பழைய பாட்டு தம்பி அது;புதிய பாட்டு கேட்டிடுவாய்!கா, கா, கா, என்றுகாக்கா பிடிக்கிறாங்க இப்போ; அதைக்கண்டுபிடிச்சு காட்டினாக்கா ரொம்ப தப்போ?"கட் அவுட்" வச்சாலும் காக்கா; மரபுகளைக்கத்தரிச்சு எறிஞ்சாலும் காக்கா!காலடியில் தள்ளி மக்களை மிதிப்பதுபோல் ஏடுகளில்,கனஜோரா விளம்பர அறிக்கை கொடுத்தாலும் காக்கா!சபாநாயகரோட ஆசனத்தை ஆக்கிரமிச்சாலும் காக்கா;சபை நடுவே; அவர், இவர் காலிலே விழுந்தாலும் காக்கா!சபையினிலே என் ஜாதி உயர் ஜாதின்னுசவால்விட்டுக் கத்தினாலும் காக்கா!மகாமகக் குளியலுக்கும் காக்கா; அங்கே,மாண்டார்கள் நூறு பேர் என்றாலும் காக்கா!
மண்சோறு மந்திரிகள் தின்றாலும் காக்கா!வெண்சாமரங்கள் வேப்பஞ்சேலை கட்டினாலும் காக்காஅங்கப்பிரதட்சணம் செஞ்சாலும் காக்கா;அரிசி விலை அநியாயமாய் ஏறினாலும் காக்கா!பஸ் கட்டண உயர்வுக்கும் காக்கா;பல விலைகள் உச்சிக்குப் போனாலும் காக்கா!கொள்ளைக்கும் காக்கா,கொலைகளுக்கும் காக்கா,கொடூரமான வழிப்பறிக்கும் காக்கா,கோடி கோடியாய்க் குவிச்சாலும் காக்கா!கொடுமையென்ன சொல்வேனடா தம்பி; இப்போகொள்கைக்கே கொள்ளி வைக்குதடா காக்கா!பெரியார் அண்ணா பேரைச் சொல்லிச் சொல்லி,பித்தலாட்டம் செய்வோரை தூக்கிப் பிடிக்குதடா காக்கா!இப்ப, ''இட ஒதுக்கீடு" மீனையும் கொத்துதடா கொக்கா;இதுக்கும் ஜே போட்டு 'ஜெ'யை வாழ்த்துதடா காக்கா!