கவிதை 73 / 77

பகலவனாய்க் கிழக்கில் உதித்திடுவோம்!

Let Us Rise in the East Like the Sun!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: பகலவனாய்க் கிழக்கில் உதித்திடுவோம்

X
பகலவனாய்க் கிழக்கில்உதித்திடுவோம்!நாள்தோறும் வெளியாகும் ஏடுகளைப் புரட்டும் போதுதேள்போலும் செய்திகளால் துடிக்கின்றார் தமிழ்மக்கள்வாள்போலும் ஏழைகளின் வாழ்வுதனை மாய்க்கின்ற ஆட்சி,தாள் ஏந்தும் மனிதர்கட்கோ ஒரு துளியும் மானமில்லா காட்சி!!ஆலயத்தில் கொள்ளையென்று அனுதினமும் வருகின்ற செய்திஆண்டவனின் சிலைகளையே அபகரித்தல் பக்தர்களின்நெஞ்சுக்கு செந்தீ"காலன்" பசிக்குத் தீனியாகக் காலராவும் பரவுதாம்காவல் நிலையங்களில் கற்பழிப்பு கொலைகளும் தினம் தொடருதாம்!ஆட்சியில் இருப்போர்க்கு அவசியம் தேவைதான் பாதுகாப்பு;அதனை வேண்டாமென்று கூறுகின்ற அறியாமை நமக்கில்லை!அதற்காக ஆயிரம் ஆயிரமாய்ப் போலீசார் அணி வகுத்துஅசையா நெடுமரமாய் சாலைதோறும் தவம் செய்தல்தேவைதானா?வெள்ளத்தின் பாதிப்பால் குமுறுகின்றார் குமரி மக்கள்உள்ளத்தில் கடுகளவும் கவலையின்றி - முதலமைச்சர்கார்போக மலர்பாதை அமைக்கின்றார்; நன்றாகத்தான்காக்காய் பிடிக்கின்றார் - நாடென்ன உருப்படுமா?
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧நடக்காத திட்டங்கட்கு முழுப்பக்க விளம்பரங்கள்நான் திராவிட தீபத்தை ஏந்துகின்றேன் என முழக்கம்!நந்திக் கிடக்கின்றார் பணம், பதவி, சலுகைகளை; அவரெல்லாம்நன்று நன்று, நீயேதான் திராவிடத்தின் தாயே என்கின்றார்,வெட்கக் கேடு!
பேருந்துக் கட்டணத்தால் விழிபிதுங்கி; ரேஷன்பெறுகின்ற அரிசி அளவும் மிகக் குறைந்து,பேருருவாய் விலைவாசிக் கொடுமை மிக உயர்ந்து,பெருமூச்சால் நெருப்பைக் கக்குகின்றார் தமிழ் மக்கள்!இல்லை; தணல்மக்கள்!
உரவிலையுடன் உயர்ந்து விட்ட டீசல், பெட்ரோல், சமையலுக்குஉபயோகிக்கும் எரிவாயு விலைகளாலே; கண்கள்உஷ்ணமேறி நிற்கின்றார் உழவர்களும், அவர்களுடன்உழைக்கின்ற கூட்டத்தாரும், வணிகர்களும்!
தொழில் வரி, நிலவரி, பயிர் வரி என்றுதொகை தொகையாய் வரிகளைக் கொண்டு-தொல்லை தரும் ஆட்சியாளர் செயல்களைக் கண்டுஎல்லையுண்டு பொறுமைக்குமென்று எழுந்து விட்டார் - இன்று!
லஞ்ச லாவண்ய ஊழல்களோ கோடி கோடிமஞ்சம் விரித்து மகிழ்ந்து பாடி ஆடிடவும்கொஞ்சமும் "லஜ்ஜை"யின்றி இவர்கள்கோட்டையில் அமர்ந்து பிறரைச் சாடிடவும்,
இத்தனையும் பார்த்துப் பொறுத்திருக்கஇஃதென்ன தமிழ்நாடா: அல்லதுஇடுகாடா? சுடுகாடா? எனவேதான்இனிப் பொறுப்பதில்லை என சூளுரைத்து,நமது உடன் பிறப்புகள் எல்லோரும்நாடு வாழ்ந்திடவும் நலிவு தீர்ந்திடவும்தோழமைக் கட்சி அணிகளுடன்தோள் சேர்த்துக் கிளம்பிடுவோம்!
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧நம்பி வாக்களித்த மக்களை எல்லாம்நட்டாற்றில் விட்டு விட்டநயவஞ்சகர்க்குப் புத்தி புகட்டநவம்பரில் ஆர்பாட்ட அறப்போர் முதலில்!அடுத்த கட்டம்; அனைத்துக் கட்சி முடிவின்படிதொடுத்திடும்கணை முழு அடைப்பாம்! இனியும்படுத்திருத்தல் ஆகாது மக்கள் எழுச்சி எனப்பகலவனாய்க் கிழக்கில் உதித்திடுவோம்!

மூலமும் சான்றும்