கவிதை 74 / 77

திசை திருப்பல் நியாயம்தானா?

Is This Diversion Justified?

X
திசை திருப்பல் நியாயம்தானா?
பூமிதனைப் பாயாகச் சுருட்டிக்கொண்டுபொல்லாத இரண்யாட்சன் கடலுக்குள் ஒளிந்துகொண்டான்!தேவர்களும் துணுக்குற்றுத் திருமாலை வேண்டி நின்றார்.திருமாலும் பன்றி உருவெடுத்து திரைகடல் புகுந்து சென்றார்!உலகப் பந்தை மீட்டு வந்தார் ஒழித்துவிட்டு அசுரனையே!உவகையால் பூமி தேவி உறுமிடும் பன்றிக்கு நன்றி கூறி,உன்மீது காதல் கொண்டேன் என்றாள் உருக்கமுடன்.உடன் பன்றியுருப் பெருமாளும் ஒப்புக் கொண்டார்.பிறகென்ன....?"வெள்ளத்தினோடொரு வெள்ளமுமாய் இருவரும்வீணையும் நாதமும் ஆகிவிட்டார்"
தேவாதி தேவன் திருமாலுக்கும்திருமகளாம் பூமா தேவிக்கும்போராடும் குணம் படைத்த அசுரன் பிறந்தான்! அவன்நாமகரணம்தான் நரகாசுரன் என்கின்றார்.ஆணும் பெண்ணும் தேவகுலம் -அவர்கட்குப் பிறந்த மகனோ அசுரகுலம்!"எப்படி இது?" என்று கேட்கத் தோன்றும்.இப்படியெல்லாம் கேட்கத் தொடங்கி விட்டால்,இப்புவியைப் பாயாகச் சுருட்டிடத்தான்எவரால் இயலுமெனக் கேட்டிடவும் வேண்டும்தானே!காசினியைப் பாயாகச் சுருட்டும்போது - ஏழ்
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧கடல்களுமே இப் பூமிக்குள்தானே இருந்திருக்கும்?ஏழ்கடலுடன் பூமியைத் தூக்கிய அரக்கன்எந்தக் கடலில் இந்தப் பூமியை ஒளித்தான்?எழுத்தறிவித்தவன் இறைவன் என்கின்றோம் -ஏன்? எப்படி? எனும் வினாக்கள் எழுப்புவதேஇறைவனுக்கு எதிர்ப்பு என்றால்;ஐயப்பாட்டுக்கு விளக்கமளிக்கத் தெரியாதவர்ஆசிரியப் பெருமகனாய் இருக்கலாமா?
அசுரர்க்கும் தேவர்க்கும் போராட்டமெனில்; அதுஆரிய திராவிடப் போராட்டமே என்றுஅய்யா பெரியார், அறிஞர் அண்ணா மட்டுமல்ல -ஆசிய ஜோதி நேருவும் எழுதியதைபண்டிதர்கள் மறுக்கின்றாரா? அவ்வாறாயின்பழைய வரலாற்றையே மறுப்பதாகுமன்றோ?வரலாற்றுப் புகழ் மேதை சீனிவாச அய்யங்கார்வரைந்திட்ட ஆய்வு நூலும்ஆரிய திராவிட போராட்டமே அன்றெழுந்ததேவா சுர யுத்தமென்றுதிரும்பத் திரும்பச் சொல்லுவதைதிசை திருப்பல் நியாயம்தானா? எனவேதீபாவளிப் புராணத்தை ஏற்கலாமா?

மூலமும் சான்றும்