கவிதை 75 / 77
நடந்து முடிந்ததம்மா; ஒரு நகைச்சுவை நாடகம்!
It Is Over—a Comedy Drama!
நடந்து முடிந்ததம்மா;ஒரு நகைச்சுவை நாடகம்!
அதிர்வேட்டுகள் ஆயிரம் முழங்கிட, முழங்கிட - அடஅணிவகுப்புகள் முரசறைந்து நடந்திட, நடந்திடவரவேற்பு வளைவுகள் முதுகொடிந்த கூனன்போல்-நகரின்வழியெங்கும் வணக்கமும் வாழ்த்தும் கூறிட, கூறிடகொடிகள், தோரணங்கள் முகில்களை மறைத்து - மேலேகுடை பிடிப்பது போல் மெல்ல அசைந்திட, அசைந்திடஒன்பது யானைகள் மாலைகள் தூக்கி நின்றிட, நின்றிட.- பாகன்உத்திரவை ஏற்றுக் கழுத்தில் அணிந்திட, அணிந்திடபுதிய மண்டபம் மேலும் பல பொலிவுகள் கொண்டிட,கொண்டிட-விண்மதியொத்த ஒளிவெள்ளம் எங்கணும் பரவிட, பரவிடவாலிபர்க்கென தயாரித்த உரையை ராணி படித்திட, படித்திட-அங்குவந்திருந்த கூட்டமோ விழுந்து விழுந்து சிரித்திட, சிரித்திட"இளைஞர்காள்! இளைய தலைமுறையின் ஈட்டிகாள்!இன்றே நீவிர் சூளுரைத்துப் புறப்படுவீர்!வாழ்க்கை எனும் வசந்தத்தை அனுபவிப்பீர் - உம்வாலிபத்தை நாட்டுப் பணிக்கும் சிறிது அர்ப்பணிப்பீர்!"இக்கட்டுரையைக் கேட்டவுடன் மண்டபம் அதிர்ந்திட,அதிர்ந்திட - பெரும்கெக்கலியும் செய்து கூட்டம்; எழுந்திட, எழுந்திட
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧அதிர்ந்து போன ராணியார் என்னவென்று கேட்டிட, கேட்டிடஆங்கொருவர்"அம்மணீ; தாங்கள் படித்த உரை தவறு" என நவின்றிட.நவின்றிட - ராணியோ,ஏன் என்றும் எப்படி என்றும் சீறி வினவிட, வினவிட - அவரோமான் மருண்டாற்போல் அஞ்சி நடுங்கிட, நடுங்கிட"வருந்துகிறேன் தாயே! தங்கள் உரையோவாலிபர்க்கு வாழ்த்துரைக்கத் தயாரித்தது!வரச்சொல்லி தர்பாருக்கு வந்திருப்போரோ;வயதேறி நரைவிழுந்த கூட்டத்தார்!அவரை நோக்கிஇளைஞர் ஏறுகளே! இந்திரஜித்துக்களே!என்று நீங்கள் அழைத்துரையாற்றியதாலேஏளனமும் ஏகடியமும் மிஞ்சியது - இதில்எவருக்கும் சிரிப்புத்தானே வரும் தாயே!"எனப் பதிலுரைத்த பிரமுகரும் நழுவிட, நழுவிட - பாவம்சினங்கொண்ட சீமாட்டி சோகத்தைத் தழுவிட, தழுவிடநடந்து முடிந்ததம்மா - ஒருநகைச்சுவை நாடகம்!