கவிதை 76 / 77

சில நாடுகள் இருக்கின்றன!

There Are Some Countries!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: சில நாடுகள் இருக்கின்றன

X
சில நாடுகள் இருக்கின்றன!....ஊராட்சி முதல் பாராட்சி வரையில்ஜனநாயகக் குழந்தை "ஜனிப்பதே"யில்லை!கருவில் ஒரு புழுவாய் நெளிந்திடும் போதேகலைத்து முடித்துக் களிப்பெய்திடுவர்!தப்பித்தவறி பிறந்து தவழ்ந்தால்தலையை நறுக்கிச் "சூப்பு" செய்வர்!மக்களாட்சி மாண்பு மண்ணாய்ப் போக!மண்ணாய்ப் போக! மடிந்தே போக!அல்லது மலடாய்ப் போயிடவே...இறையருள் வேண்டி இறைஞ்சி நிற்பர்!அங்கெல்லாம் ஆட்சி மாற்றம்அரை நொடியில் நடந்தேறுகிறது!ஆள்பவர் நெஞ்சில் துப்பாக்கி ரவைகளின்அணியாரங்கள்! மணியாரங்கள்!அடுத்தவர் மார்பில் அழுத்தக் கவசம்!அவரும் படுத்தால் எழுவது ஐயமே!துப்பாக்கிகளே,துரைத்தனக் கூடாரங்களைக்தூக்கி நிறுத்தும் கம்பங்களாக
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧வேலை பார்க்கின்றன! "ஜோலி" முடிக்கின்றன!பட்டாபிஷேக நிகழ்ச்சிகளைப்பட்டாக்கத்திகளே,முன் நின்று நடத்துகின்றன!மகுடாபிஷேக வைபவம் என்பதுகுருதிக் குடங்களில்கொண்டு வந்த செந்நீரால்கொலு மண்டபங்களைக்குளிப்பாட்டுவதே ஆகும்!சில நாடுகள் இருக்கின்றன!அங்கே,ஜனநாயகக் குழந்தை,"ஜனிப்பதே" இல்லை!குடை நிழலில் குஞ்சரம் ஊர்வார் -அவர்தம்,குடலுருவி மாலையாய்ச் செய்து...அடுத்த பலிக்கடாவுக்குஅழகாய்ச் சூட்டுவர்!ஏற்றிப் போற்றுபவர்! அவன்எலும்பை எடுப்பர்!எழில்மிகு செங்கோல்எமக்கு இதுவே என்பர்!அக்கோல் பிடித்தவன்வைக்கோல் போர் போலஎன்று எரிவான்? எவர்தான் அறிவார்?முடியாட்சி என்றால்;முடியடா ஆட்சியை என்று - கொடுந்தடியினால் முடிப்பதே பொருளே போலும்!
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧முடிந்து முடிந்து இன்னும் முடியாதமுடியாட்சிகளாகவே,சில நாடுகள் இருக்கின்றனஅங்கே,ஜனநாயகக் குழந்தை"ஜனிப்பதே" இல்லைசர்வாதிகாரச் சல்லாப உல்லாசங்கள்!சப்ர கூட மஞ்சத்தில்எதேச்சாதிகாரத்தின்ஏகபோகக் கேளிக்கைகள் - அந்தஇன்பக் கூத்தின் இடையே யாரும்'இம்' என்றால் சிறைவாசம்!'ஏன்' என்றால் வனவாசம்!அஃதோர் வாழைமரம்!அதன் கன்றே அதனைச் சாய்க்கும்!ஏனோ தெரியவில்லை-ஜனநாயக ஆலமரம்,அந்த மண்ணில் விழுது விடுவதேயில்லை!ஏன் தெரியவில்லை?அடிமரத்தை வெட்டித்தான்ஆணிவேரையும் பிடுங்கிவிட்டார்களே!இந்தியாவின் கங்குகளில்இரு நாடுகள் முளைத்தன!அங்கே.இரத்தக் கழனியில்தான்ஆட்சிப் பயிர்கள் விளைகின்றன!முடிந்தது வாழ்வு முஜிபூருக்கென்றுவடிந்தது குருதி நம் விழிகளில் எல்லாம்!ஆனால்விடிந்தது ஒரு நாள்! வங்க பூமி
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧மலர்ந்தது! மலர்ந்தது! மகிழ்ந்தது உலகு!வங்க பந்து என வாழ்த்தினர் அவரை -அந்தத்தங்கபந்துவின் தலையைப் பந்தாய்தரையில் உருட்டி ஆடிக்களித்தனர்!இதோ இன்னொரு பந்தாட்டம்;வங்கதேச விளையாட்டு அரங்கில்!ஜியாவுர் ரகிமானின் கபாலப்பந்து"கோல் கீப்ப"ரைத் தாண்டிசதிவலையில் சிக்கி உருண்டுஇரும்புக் கம்பத்தில் மோதி உடைந்தது!சர்வாதிகாரம்;அஃதோர் வாழைமரம் -அதன் கன்றே அதனைச் சாய்க்கும்!வங்க தேசத்தில்ஜனநாயக வாடை கொஞ்சம் வீசியதுஅதனையும் தடுத்துஇராணுவ தர்பாருக்குஇரத்தினக் கம்பளம்விரித்திடும் வேலை வேகமாய் நடக்கிறது!சில நாடுகள் இருக்கின்றன!அங்கே;ஜனநாயகக் குழந்தை"ஜனிப்பதே" இல்லை!தப்பித்தவறி பிறந்து தவழ்ந்தால்தலையை நறுக்கிச் "சூப்பு" செய்வார்!இதுவே இன்று,வங்கம் வழங்கும்வேதனைச் செய்தி!

மூலமும் சான்றும்