கவிதை 77 / 77
உன் காலணியை வாழ்த்துகிறாய்
You Bless Your Footwear
உன் காலணியை வாழ்த்துகிறாய்
ஐம்பத்தி ஏழு பிறந்த நாள் இன்றுன்அன்பின் அடிமை பிறந்த நாள் இன்று!நடந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதும்நடக்கும் பாதையில் வழுவாதிருப்பதும்அரிமா நோக்கெனப் புகல்வர் அறிஞர்அடியேன் அரிமா அல்ல எனினும்கடந்த வழியைக் கருத்தில் கொண்டுதொடர்ந்து புரிவேன் தமிழினத் தொண்டு!
கோளிலி என்பது எனை விதைத்த ஊர்-திருக்குவளையூர் என்றும் தீந்தமிழ் பேசும்!நாற்றுப் பயிராய் அவ்வூர் வளர்ந்து - தென்றல்காற்றுத் தமிழை திருஆரூர் பயின்றேன்!ஈரோட்டுப் பள்ளியில் இனமானக் கல்வி - அறிவுத்தேரோட்டிக் காஞ்சியில் இலட்சியக் கல்வி!இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கமுந்திக் கிளம்பிய தமிழர் படையில்இளைஞர் அணியை அன்றே கண்டுஇரண்டறக் கலந்தேன் இயக்க நடப்பில்!அன்று முதல் இன்று வரைஅய்யா பெரியார் அணைப்பு!ஆரத்தழுவிடும்
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧அண்ணாவின் ஈர இதய நனைப்பு!அன்பு உடன்பிறப்பே! எனக்குஉனையின்றி வேறென்ன நினைப்பு!தண்டவாளத்தில் படுத்த போதும்-தனிமைச் சிறையில் வறுத்தபோதும் -கண்ட அண்ணன் வடித்த கண்ணீர் - என்களைப்பைத் தீர்க்கத் தெளித்த பன்னீர்!ஆண்டு இருபதைக் கடந்த வயதில்பாண்டியில் என்னை வதைத்த காலைதந்தை பெரியார் தடவிய மருந்தேசிந்தை குளிர்ந்த அமுத விருந்தாம்!என்அஞ்சுகத்தாய் முத்துவேலர்எனைப்பெற்ற போது-இசைபாடி மகிழ்விப்பான்இவனென்று காத்திருந்தார்!இவனோ;வசைபாடும் அரசியலின் மத்தியிலேவசமாகச் சிக்கிக் கொண்டான்!இலட்சியமென்பது:எட்டிப்பறித்திடும் மல்லிகையல்ல!ஏறிப்பறித்திடும் மாங்காயும் தேங்காயுமல்ல!எதிர்நீச்சல்! எரிமலைமேல் கொடி நாட்டல்!இடையில் தோன்றிடும் ஆட்சி என்பதுநடையில் தோன்றிடும் களைப்பு நீங்கஇயற்கை வழங்கிடும் நிழற்கொடையென்றுஇலட்சியப் பயணம் தொடர்தல் வேண்டும்!
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧அற்றகுளத்து அறநீர்ப் பறவைகள்உற்றார் உறவினர் போல நடித்துபற்றுக் கொண்ட பதவியைத் தேடிவிற்றுக் கொண்டார் தம்மை எனினும்வில்லில் கணையாய் இருப்போம் என்றும்வேலின் முனையாய் வாழ்வோம் என்றும்சொல்லில் உறுதி காக்கும் கூட்டம்கல்லில் எழுத்தாய் மின்னிடும் போதுகவலை எதற்கு எனக்கு?கழகம் தான் நமக்குக் கிழக்கு!
குதிரை, கீழேதள்ளிக் குழியும்பறித்தது என்பர்! இங்கே நம்மைக்குதிரையாக்கிச் சவாரி செய்தோர்நமக்கே குழிபறிக்க வந்தகதை!ஏறிய ஏணியை உதைத்த கதை!நன்றி கொன்ற கதை!கதையாகப் போன இத்தனை வதைகளையும்கண்மணியே! உடன்பிறப்பே!உனை நினைத்தே தாங்கிக் கொண்டேன்!வாழ்த்துக்கின்றாய் என்னை!வணங்குகின்றேன் உன்னை!நீ வாழ்த்துவது; கிரீடத்தையல்ல!கிரீடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்த்தும் பண்புகொண்ட உடன் பிறப்பு நீ!உனக்காக உழைக்கின்ற இந்தக்காலணியை வாழ்த்துகின்றாய்!
⟦முந்தைய பக்கத் தொடர்ச்சி⟧இதற்குத்தான் மெருகு போடுகின்றாய்!ஏழை எளிய உடன் பிறப்பு நீ!தேய்ந்தாலும் இந்தக் காலணியைஓய்ந்துபோ என விடமாட்டாய்!உனைவிட்டு அகலாமல்ஓய்வின்றி உழைப்பதற்கேஉறுதி சொல்வேன்;உடன் பிறப்பே இந்தப் பிறந்த நாளில்!
(கலைஞர் தனது 58-வது பிறந்தநாள்செய்தியாக எழுதியது)