கவிதை 59 / 77

கவிதையில் ஒரு மடல்!

A Letter in Verse!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: கவிதையில் ஒரு மடல்

X
உடன்பிறப்பே! ஒன்று சொல்வேன் நினைவில் வைக்க!கடன்பட்டோம் எந்நாளும் நாடு காக்கமுரண்பட்டோர்க்கில்லை இக் கழகத்தில் வேலை.இடம் பிடித்து வாழ்ந்தவர்கள் எங்கோ செல்வர்தடம் புரளாச் சோதரர்கள் ஒன்றாய் நிற்பர்.இந்திய மண்ணுக்கோர் தீமைஎங்கிருந்து வந்தாலும், உடன்விந்திய இமயம் போல்வீரத்தோள் உயர்த்தி வெல்வோம்.தீங்கொன்று நாட்டுக் கெனிலோதி.மு.க. துள்ளி எழும் - தன்தீர்மானம், கோரிக்கை அக்கணமே தள்ளிவைத்துமண்மானம் காப்பதற்கு மார்தட்ட மறக்க மாட்டோம்.நம் கழக வரலாற்றுச் சான்று இது;நான் ஏதோ புதிதாக இன்றைக்குச் சொல்லவில்லை.நம் கடமை என்றென்றும் நாட்டுத் தொண்டு.நலமாக மக்கள் வாழ அமைதி காப்போம்நன்னெறிகள் நிலைப்பதற்கு வழிவகுப்போம்.

மூலமும் சான்றும்