கவிதை 58 / 77
வானமே பொழிக நீ!
O Sky, Pour Down!
வானம் பொய்த்துத் தமிழகத்தில் வறட்சிமூண்டபோது மழையிரந்து 23.3.1975அன்று முரசொலியில்கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்எழுதியது.
வறட்சியின் நெருப்புக் காட்டை - நீவடித்திடும் கண்ணீரால் அணைத்துவிடு!மின்னிடும் உன் சிரிப்பெங்கே?முழங்கிடும் இடிப் பேச்செங்கே?பன்னெடும் நாளாய் நின்றன்பன்னீர்க் குளியலின்றிஎன்னருந் தமிழகம்தான்ஏங்குதல் உணர்ந்திடுக!வானமே பொழிக நீ! எம்மனோர்வாட்டம் துடைத்திடவே-மானமே பெரிதென்றெண்ணும்மறத் தமிழ் குலத்தார் மீதுமாசுகள் கற்பித்தேனும்மகுடத்தைப் பறிக்கலாமென்று
மத்தியில் உள்ளோர் சிலர்அவதூறுக்கத்தியை வீசுகின்றார் - அவர்தம்புத்தியைத் தீட்டிடவேபொழிந்திடுக வானமே நீதான்!இந்துக்கள் முஸ்லீம்கள் இங்குள்ள கிறித்தவர்கள் -பந்துக்கள் வேண்டுகின்றார்.முந்துத் தமிழ்போல் மும்மாரி பொழிக என்று!நல்லவர்கள் அழைக்கின்றார்நன்றியற்றவரோ நீ கருணைகாட்டாமல்இருக்க வேண்டுமென நினைக்கின்றார் - அவர்தம்அனல் நெஞ்சம் குளிரடைய உன்புனல் கரத்தை நீட்டிடுக!வானமே பொழிக நீ - தமிழ்வையகம் வாழவே!