கவிதை 57 / 77
கற்பனை ஊற்று
Fountain of Imagination
(1971-ஆம் ஆண்டு அமெரிக்க அரசின்அழைப்பை ஏற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதுஆர்லந்தோ ஏரியில் அழகான நீரூற்றுஒன்றைக் கண்ட கலைஞர் உடனேயே எழுதிய கவிதை )
ஆர்லந்தோ என்னும் நகரில் அரியதோர் ஏரியிலேஅழகிய மத்தாப்பூ ஊற்றொன்று கண்டேன்ஒளி விளக்குப் போடுகின்ற தாளத்திற்குஒரு லயமும் பிசகாமல் ஆடுகின்றநீரூற்று ஆட்டக்காரி நாட்டியத்தின்நேர்த்தியென்ன சொல்வேன்!பசும்புல் தரைமீது பால் நிறத்துப்பனிக்கட்டி உருள்வதுபோல் ஓர் காட்சி - அதைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே'படக்' என மாறிவிடும் மற்றோர் காட்சி!இப்படித்தான் இங்குள்ள 'அப்போலோ' கிளம்பிற்றென்றுஇருள்கிழித்து வானேறும் நீரின் கரங்கள்பொற்கொல்லர் பட்டறையில்பொன் பரப்பும் மஞ்சள் ஒளிவிற்பட்ட அம்பு போல
விர்ரென்று எழுந்து பாயும்.கற்காலக் கொள்கை மனிதர்கடவுளர்கள் சந்நிதியில்காவுக்கு ஓர் உயிரை வெட்டும்போதுபீறிட்டுக் கிளம்புகின்ற இரத்தம் போலசீறித்தான் தாவுதய்யோ சிவப்பு வண்ணம்.மார்கழித் திருநாளில் நம்மூரில்மங்கையர்கள் திருவாயில்பாவிரித்துத் தத்தம் தெருவாயில் பரங்கிப்பூவிரித்து வைக்கின்ற கோலம் போல்கண்கொள்ளாக் காட்சி கண்டேன்.நல்ல வேளை -தனியாக ரசிக்கின்ற வாய்ப்பெனக்குதப்பினேன் அதனாலே!பெண்ணொருத்தி அருகிருந்தால் நீரூற்றின்வண்ணத்தைக் கணக்கெடுத்து - மறுநாளேவகைக்கு ஒன்றாய் சேலை கேட்பாள்!