கவிதை 41 / 77

உன் நிழலாக அசைகின்றோம்!

We Move as Your Shadow!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: உன் நிழலாக அசைகின்றோம்

X
உன் நிழலாக அசைகின்றோம்!
அண்ணாவின் 75-வது ஆண்டு நினைவுநாளில் எழுதியது
அண்ணனே!எங்கள் உயிரே!உணர்வே!இனமானக் கோவே!எழுச்சியின் வடிவே!எண்ணங்கள் மலரும்எழிலார் சோலையே!எஃகுக் கம்பிகளாம்இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!எழுபத்துஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?அண்ணனே!அழகுதமிழ்ப் பேச்சில்அருவிகளை வென்றவன் நீ!ஆங்கிலச் சொல்மழையோ - உன்ஆற்றலுக்கு ஆலவட்டம்!எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!எறும்பென மாறி நாங்கள்அவற்றைச் சுவைத்தோம்!
எழுபத்துஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?அண்ணனே!காந்தம் உன் விழியில்!சாந்தம் உன் மொழியில்!வீரம் உன் செயலில்!விவேகம் உன் முறையில்!பாசம் உன் உடன்பிறப்பு!பரிவு அதன் மறுபதிப்பு!இதயமோ எதையும் தாங்கும்!புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!எழுபத்து ஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?அண்ணனே!நீ வருவதற்கு முன்பேவரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்நீ வந்ததற்குப் பின்தான்வகையாகத் தமிழன் வரலாற்றை உணர்ந்தான்!இலக்கியம் இருந்தது தமிழருக்கு!இருப்பினும் நீ வந்த பின்தான்இயக்கினாய் அதனைஇப்புவி அறிந்திட!தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்;
தலைவா! நீ உதித்ததால்தான்தமிழன் தமிழனானான்!எழுபத்து ஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?அண்ணனே!தந்தை பெரியாரின் தளபதி நீ!விந்தை மனிதர்களால்விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை,மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!அறிஞன் நீ!அறிவாசான் நீ!வறிஞன் செல்வன் என்றுவரையறுக்கும் வர்க்கபேதம்வளர்த்தல் தீதென்று சமதர்மவழிநின்று உரைத்தவன் நீ!எழுபத்துஐந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?எழும் இக்கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை!எம்முள்ளத்துயர் இந்நாளிலும் அடங்கிவில்லைஎனினும் நீ அகலாமல் இருக்கின்றாய்எனும் நினைவில் உன் நிழலாக அசைகின்றோம்!

மூலமும் சான்றும்