கவிதை 42 / 77
வாழ்க ஜீவா
Long Live Jeeva
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: வாழ்க ஜீவா!
வாழ்க ஜீவா
நாமணக்கும் நல்ல தமிழ் மணக்கும்நாஞ்சில் என்ற பேர் மணக்கும்பாமணக்கும் பூதப்பாண்டி யெனும் ஊர் மணக்கும்பண்பாளர் ஜீவா புகழ் பாடுகின்ற வாய் தேன்மணக்கும்!ஆட்டம் போடும் வாலிபத்தின் - பனிமூட்டம் கலையா வயதினிலேநாட்டம் கொண்டார் பொது வாழ்வினிலேநாட்டை நினைத்தார் முதலிடமாய்!தோட்டம் நிறையப் பூ இருந்தும்தொலைவில் பறந்த வண்டினைப் போல்தொண்டே என்றன் வாழ்வென்றுசுற்றிப் பறந்தார் நாட்டினிலேவீட்டில் சிலநாள் தங்கிடுவார் - சிறைக்கூட்டில் பலநாள் வதங்கிடுவார்!மேடையில் முரசு கொட்டிடுவார் - வாழ்வின்கோடையில் பயணம் சென்றிடுவார்!'தாமரை' மலரைத் தந்திடுவார் - அதில்தமிழாம் அமுதை உண்டிடுவோம்!
கையை ஓங்கிப் பேசிடுவார் - அங்கேகடும்புயல் வீசக் கண்டிடுவோம்!வாரீர் என்று அழைத்திடுவார் - அந்தவாஞ்சை கண்டு சிலிர்த்திடுவோம்!குன்றாம் அவர்தம் தோளெங்கே?குன்றா அவர்தம் திறமெங்கே?நன்றாம் அவர்தம் குணமெங்கே?நாட்டுக் குழைக்கும் பண்பெங்கே?வீரம் செறிந்த முகம் எங்கே?விழிகள் கொட்டும் ஒளி எங்கே?குருதியெலாம் புரட்சி மணம்கமழுகின்ற வரிப்புலியைகொள்கையிலே உறுதிகொண்டதமிழ்க் கவியைகொள்ளையடித்து மகிழ்ந்ததோகொடுஞ்சாவு எனக்கேட்டுக்குமுறுகின்றார் நாட்டுமக்கள்!வாழ்க ஜீவா! வாழ்க என்றும்!
'நம் நாடு' 21.3.1963