கவிதை 43 / 77

மறைந்த மாவீரன்

The Fallen Hero

X
மறைந்த மாவீரன்
தூத்துக்குடி மாவீரன் கே.வி.கே.சாமி கொலையுண்டபோதுஇரங்கல் தெரிவித்துப் பாடியது.
"சோலையிலே தென்றலிலே இன்பம், பின்னர்-சொந்த நாட்டைக் காப்பாற்றச் சுழற்றுவேன் வாளைஎன்று முழங்குகின்ற காளை!மொட்டவிழாப் பருவ மலராயிருக்கும் போதேசுட்டெரிப்பேன் பகையை என்றுசுடர் முகந்தூக்கி நின்ற குத்துவிளக்கு! அவன்கட்டவிழா மேனிதனைக் கரந்தொட்டுத் தழுவியாடக்காத்திருந்தாள் பூவையெனும் பாவைதொழிலாளக் குலத்துக்கோர் முத்தென்பார் அவனை; எழிற்சத்து மிகும் கனியென்பார்;பனி நனைந்த மலரென்பார் அவளை!இருவருமே ஒருவராய் ஆவதெப்போது?'உருவிய வாளைச் சற்று உறையிலே போடுமே அத்தான்'என்று முரசு உறுமுகின்ற களம் நோக்கி வாள் தூக்கிப்பாய்கின்ற காதலனைத் தடுத்து நின்றாள்."விடுதலைக்குத் தாவுகின்ற என்னை உன்றன்காதலுக்குக் காவு கொடுக்க எண்ணாதே பெண்ணே!கெடுதலைக்கு ஆளாக்கிக் கீழோரால் கீழ் என்று இகழப்பட்டஎன்றன் செந்தமிழர் திரு நாட்டை வாழ்விக்க எழுந்திருக்கும்அணி வகுப்பில் நிற்பேன்மணிமாடம்-கனிப் பேச்சு - வேண்டேன்" என்றான்.
"முற்றிலுமே வெறுத்தீரோ?" என்றாள்"பற்றில்லை உன் மீது என்று உரைக்கமாட்டேன் பாம்புப்புற்றில்லை தென் தமிழர் தோட்டத்தில்என்னும் நிலை வரும் வரையில்-கற்றிட முடியாதடி காதல் படிப்பு" என்றான்;அவள் துடித்து நின்றாள்.
"இருவருமே போர்க்களத்தில் இணைந்து நிற்போம்.அணைந்து விட்டாலும் அப்படியே ஆகட்டும் இருவருக்கும்.இதற்கென்ன பதில் அத்தான்?""இஃதோர் முறை காதலர்கள் கடைப்பிடிப்பதுண்டு!ஆயின்.... எனக்கது சரிப்பட்டு வராது தங்கம்!களம் புகுந்து வருகின்ற பகையைச் சாடுகின்ற நேரம் - என்உளம் புகுந்த நேரிழையாளுக்கு ஏது நேர்ந்ததோ என நெஞ்சம்ஒருக் கணம் தயங்கும்;அதற்குள் என் படை மயங்கும்.வேண்டாமடி பெண்ணே! விடை கொட்டி என் கண்ணே!""மணத்திற்குத்தான் இசைய மறுக்கின்றீர்; மங்கையென்னைஉண்பதற்குப் போட்டு வைத்த இலை போலப்பூப் படுக்கை உண்டே அங்கு வாரீர்""பால் சோறு பானையிலே இருக்கட்டும்;பசியுண்டு இப்போது என்றாலும்உன்னைப் பாழாக்கிப் போக மாட்டேன்!அட்டியின்றி விடை தருவாய், அன்னமே!""மாம்பழக் கன்னத்தின் அழைப்புக்கும் தடையுண்டா?""தடையுண்டு; படை கொண்டு செல்கின்ற நான்பிணமாகி விட்டாலும், உனக்கு மணமாகித் தீர வேண்டும்.என் அன்பே!
உன்னை எச்சில்படுத்தி விட்டால் எனக்கென்ன லாபம்?உனக்குத்தான் பெரு நஷ்டம்!""முடியாது! ஒரு முத்தம்...!""வேண்டாம்...! திரும்பியபின் மொத்தமாக!""அழவிட்டுப் போகாதீர்கள் அத்தான்...""காலமெல்லாம் மகிழ்ந்திருப்போம்! கவலை விடு!""நீங்கள் கள வெற்றி பெற்றவுடன்,நான் காதல் வெற்றி பெற்றதாய் மகிழ்வதற்கு இசைவு தாரும்!""அசைவொன்றில் ஆயிரம் வண்ணங்கள் காட்டுகின்றபசையற்ற தென்புலத்தார்திசை கெட்டு வாடுவதை மாற்றிய பின்,அழகு மயிலே!நாம் மாலை மாற்றிக் கொள்வதில் தடையில்லை, அறிவாய்!""வெற்றி பெற்று விரைவில் வாரீர்கத்துகடல் விளைகின்ற முத்தெடுத்து மாலை தொடுத்துவைக்கிறேன்!என்றன் தென் பாண்டித் தேவா!நீர் திரும்பும் வரை இங்கேயே நிற்கின்றேன்இல்லையேல் இக்கடற்கரையே எனக்கமைந்த கல்லறையாம்!""சிப்பியிலே விளையாத சிரிப்பு முத்துக் காட்டிடுவாய்;என் சிந்தையிலே உறவாடும் செந்தமிழின் நலம்பாடித்திரும்புகிறேன்" எனப் பிரிந்தான் -கடற்கரையின் வெண்மணலில் காரிகையைத் தனியே விடுத்து!
அழகு சிப்பிகளால் முத்தளித்து;ஆடும் அலைகளால் உப்பளித்துஉயர்வளிக்கும் பெருங்கடல் நீர் - வாய்கொப்பளிப்பதற்கும் பயனில்லை என்பதற்காக வெறுப்பாருண்டோ?அஃதே போல்நாட்டிற்கு உழைக்கின்ற உத்தமனாம் பெரு வீரன் தன்னைஉடனே தழுவிடவில்லையென்று வெறுக்கவில்லை அந்தவேல் விழியாள்.விடைபெற்றுப் போன சிங்கம், தலைவனைக் கண்டு பேசிநிலைதனை அறிந்து தேர்ந்து,நீதிக்குத் தொடுக்கும் யுத்த தளபதியாக நின்றிருந்தான்.பெருஞ்சேனை முகப்பதனில்நாடளிக்கும் குணக்கேடர்களைக் கூடியெதிர்ப்பதற்குக்கூவுகிறான், நல்வீரன்! தெருவெல்லாம் பாசறைகள்;தென்பாண்டி மண்டலத்தில் பாடி வீடு அமையாத பகுதியில்லைபோருக்கு நாள் பார்க்க வேண்டியதுதான் பாக்கி.தோளுக்கு நிகரானவரில்லை. எம் வாளுக்கு வழி சொல்வீர்;எனச் சொல்லித் தொகை தொகையாய்க்குவிந்து விட்டார்.தொல்புவியில் முதன் முதலாய்த் தோன்றி நின்ற தமிழ்க்குலத்தார்தென் புலத்தார் எழுந்துவிட்ட சேதி கேட்டுத்திக்கெல்லாம். திகைப்பு காட்டும் இன எழுச்சி பெற்றவெள்ளம்இளைஞரது பட்டாளம், பாட்டாளிப் படை வரிசைஇத்தனையும் அணிவகுப்பில் சேர்ந்து கொண்டு"நாள் குறிப்பீர்" என ஓலைவிடுத்தார் தலைமைத் தளபதிக்கு.தன் வலியும் மாற்றான் வலியும் அறிந்து செயலாற்றுதலேகுறள் வகுக்கும் இலக்கணமெனக் கொண்டிருக்கும்தலைவனவன்.
"விரைவில் போர் துவங்கும், பொறுத்திருங்கள்" எனப்பதில் இறுத்தான்படைகொண்டு செல்வதற்கு இன்னும் சில நாட்களேஎனக் கண்டு சிந்தை மகிழ்ந்தான்... அதற்குள்கொடும் விந்தையொன்று உருவாகும் என யார் கண்டார்?...பாசறைக்குப் பக்கத்தே படை நடத்தும் விதம் பற்றித்தனிமையிலே நின்று யோசனைக்கு அடிமையானான்அப்போது-ஆறேழு நரிக் குணத்தார் அவன் மீது பாய்வதற்கு ஓடி வந்தார்ஓதிய மிலார்களே! ஒன்றுக்கும் பயனற்ற பிறவிகளே!என்ன வேண்டும்?" எனக் கேட்டான்.'உன் உயிர் வேண்டும்" எனச் சொன்னார்-"உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற நாய், நரிகள்,கழுகுக்கும், பருந்துக்கும் இவ்வுடலைக் கொடுப்பதற்கேகளம் செல்ல இருக்கிறேன்.அதற்குள்ளே உமக்கு 'முடை' என்றால் எடுத்துச் செல்வீர்ஆயின் ஒன்று; என்னொருவன் உயிர் பறித்தல் மட்டுந்தான்உம்மாலே ஆவதன்றிநான் வளர்த்த உணர்ச்சிகளை - உண்மை வீரர்களை -அழித்துப் போடல் ஆகாதென அறிவீர்" என்றான்.தமிழ் கேட்கும் செவியில்லாப் பாம்பு மனிதர்"படபட" எனச் சுற்றிக் கொண்டார்.படைவீரன் அங்கங்களை ஆலமரத்து விழுதுபோல்அறுத்தெறிந்தார்.வாள் தடுக்க எழுந்த கரத்தினிலே விரல்களெல்லாம்'பொல பொல' வென உதிர்ந்தன தரையில்,மலை பிளக்க வெடி வைத்தது போல் மாவீரன்மண்டையைப் பிளப்பதற்கும் துணிந்து விட்டார்.தலை நொறுங்கித் தரையில் சாய்ந்தான்.அத்தை மகள் முத்தமிடத் துடித்த இதழில்
தேர்ந்தெடுத்த மணிமார்பில்அரிவாள் வீச்சு! மலர்முகம் புதைத்திருக்க அவள்உதிர வெள்ளம்ஓடிவிட்டார் உயிர் எடுக்க வந்த கொடியோர்;உத்தமனும் கடைசி மூச்சை நாட்டுக்கே அளித்து விட்டுதுயில் நீங்காத் தொட்டிலில் படுத்துக் கொண்டான்.சித்திரம் சிதைந்தது எனக் கேள்வியுற்றாள்;முத்து மாலை கட்டிக் கொண்டுகடல் அலையின் ஓரம் நின்ற கட்டழகி!மாலைதனை அறுத்து விட்டார் மாபாவிகள்;சேனைதனை நடத்திச் செல்லும் சிங்கம்-அங்கம் அறுபட்டுத் துரோகிகளால் துடித்து வீழ்ந்த காட்சி-அம்மவோ! 'கேட்பதற்கு இத்தனை நாள் வாழ்ந்தேனோ?""வெண்மணலில் நின்றிருப்பாய் பெண்ணே!விரைந்து வந்து மணந்திடுவேன் உன்னை"எனச் சொன்ன வாய் மூடிற்றாமே?கம்பீர நடைபோடும் கால்கள் சோர்ந்து விட்டனவோ?கனல் பொழியும் கண்களிலே எனை மணக்கும் போதுகுளிர் பொழியும் எனச் சொல்லி வாழ்ந்தேனே,என் நறுந்தேனே!உன்னை சாவுச் சகதியில் ஊற்றி விட்டார்களாமே சண்டாளப்இனி எனக்கேன் வாழ்வு?" என்றாள்முத்து மாலையைக் கடலில் வீசி எறிந்தாள்அதைத் தொடர்ந்து, தானும்பிறவிகள்அத்தானை நினைத்தவாறு ஆழ்கடலின் அடியிற் சென்றாள்.

மூலமும் சான்றும்