கவிதை 40 / 77

கலைத்தாயின் தலைச் செல்வன்!

Mother Art’s Foremost Son!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: கலைத்தாயின் தலைச்செல்வன்

X
கலைத்தாயின் தலைச் செல்வன்!
கலைவாணர் என்.எஸ்.கே. மறைந்ததையொட்டிகலைஞர் அவர்கள் எழுதிய கவிதை
பனிப் பார்வை, கனிப்பேச்சு, தனித் திறமைஇனிப்போடு எழில் காட்சி தருகின்ற இசைப்புலவன்!அழைக்கின்ற போதெல்லாம் மக்கட்சிரிப்பு.பணிபுரிய வருகின்ற நற்றொண்டன்!தழைக்கின்ற செந்தமிழன்! மழைக் கரத்தால்மாநாடு காக்கின்ற வள்ளல்!உழைக்கின்ற ஒருபேறே பெரும்பேறு எனக்கொண்ட தமிழேறுகலையுலகின் தனிவேந்தன் - அலைகடலாம் அவன் உள்ளம்நிலைகுலைய நமைவிடுத்து நீங்காத துயில்கொண்டகொடுமை என்னே!
"சிரிப்பொன்றே மனித வாழ்வுக்கு மருந்து - அதைச்சிந்தனைத் தேனில் குழைத்து நாள்தோறும் அருந்து-நான் உள்ளவரை குறையாது அவ்விருந்து!"என மொழிந்து வாழ்ந்திட்டான் - அந்தோ.எரி நெருப்பில் வீழ்ந்திட்டான்!
ஏழைகளைச் சிரிக்க வைத்தான்-கோழைகளை நிமிர வைத்தான்-எமையெல்லாம் கதறவைத்து இறப்புலகு ஏகிவிட்டான்!படக்கலையில் அறிவுமணங் கமழச் செய்து - நாட்டின்வலக்கரமாய் அமைந்திருந்த "நல்ல தம்பி!"முடக்கலாம் பெருநிதியை எனக் கிளம்பும் மூளி எண்ணம்முனை முறிந்து போகும் வண்ணம் 'பணம்' தந்த பாவாணன்!விதவைதனை "மணமகளா"ய் ஆக்கி வைத்துக் காதற்பறவைகளைப் புதுவானம் மேவ விட்ட கர்மவீரன்!கல்லடிக்கும் கயவர்தம் சொல்லடிக்கும் மத்தியிலேகூறிவந்த கொள்கைகளைவல்லடி வம்பர்களும் பல் இளிக்கும் விதத்தினிலேவில்லடிப் பாட்டாலே விளக்கி வந்த வித்தகனாம்!ஆடுகின்ற கோயிலுக்குப் போகின்றான் பழைய நந்தன் - அறிவுதேடுகின்ற ஆலயத்தை நாடுகின்றான் புதிய "கிந்தன்"ஓடுகின்றார் உனைக் கண்டு ஒதியமிலார்உள்ளத்தார் என மகிழ்ந்தோம்.இன்றோஉனை யிழந்து உளம் நெகிழ்ந்தோம்!இதழ்க் கடையில் புன்னகையைத் தேக்கிக் கொண்டுமலர்க் கண்ணால் வரவேற்புக் கூறுகின்ற காட்சி எங்கே?கிளிச் சிறகின் நிறம்காட்டும் இலை எடுத்துப் புதுக்கிளிஞ்சல் சுண்ணாம்பும் பாக்கும் சேர்த்துக்குதப்புகின்ற கோலச் செவ்வாய் காட்டுகின்றகுறுஞ்சிரிப்பு முகந்தான் எங்கே?புனலிலே மிதக்கட்டும் தமிழர் என்றேதணலாகிப் போனாயோ, கலைத் தலைவா!
நீரோடை நிலங்கிழிக்கும் நெடிய பெருந்தமிழ் நாட்டில்சீரோடு வாழ்ந்திருந்த கலையரசே! நீவேரோடு சாய்ந்துவிழப் புயல் வீசும் என உணர்ந்தால்கோடானுகோடி கரம் அப்புயலைத் தடுத்திருக்கும்!"எதிர்ப்புகளை இள நகைப்பால் இடறிவிட்டுஎன் தலைவன் அண்ணாவின் அருகிருப்பேன்"என உரைத்து எழுந்திட்டாய்! அதற்குள்சாவின் மடிதனிலே விழுந்திட்டாய்!
என்னுயிரே! இன்னமுதே! என்ன நினைத்து உயிர் விட்டாய்?"பொன்மலையைக் குவித்திட்டேன்; இன்று புழுதிமலைஅடிவாரத்தில் கிடக்கின்றேன்" எனச் சொல்லிப்புகழ்மலையின் உச்சிக்குப் போனாயோ?புது மணியே! புகழ் முத்தே!பொது உடைமை முளைக்கின்ற "ருசியா"வில்கலைப் பயணம் நடத்துதற்குச் சென்றாயே;அதுபோல எண்ணமிட்டோ பெரும்பயணம் மேற்கொண்டாய்;எம் மீது பெரும்பழியைச் சுமத்திவிட்டு?கலையே! கற்பனையே!அழகே! அறிவே!அன்பே! அறமே!யாருண்டு இனிமேல் உன்போல் நல்லோன்?நீயுண்டு: நின்புகழுண்டு என்றென்றும் தமிழர் நெஞ்சில்!

மூலமும் சான்றும்