கவிதை 39 / 77
பன்னீர்ச்செல்வமே!
Panneerselvam!
பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: பன்னீர்ச் செல்வமே
பன்னீர்ச்செல்வமே!
1940-ஆம் ஆண்டு லண்டனில் இருந்த இந்திய அமைச்சருக்குஆலோசகராகப் பணியாற்ற திராவிடத் தளபதி ஏ.டி.பன்னீர்ச் செல்வம்அவர்கள் விமானத்தில் லண்டன் சென்றபோது, விமானம் ஓமான்கடலில் வீழ்ந்து மூழ்கியது. மறைந்த பன்னீர்ச் செல்வம் அவர்களைப்பற்றி அப்போது திருவாரூரிலிருந்து வெளியான 'முரசொலி'யில்கலைஞர் தமது இளம் வயதில் எழுதிய கண்ணீர்ச் சித்திரம் இது.
இருட்டறையில் இரு கண்கள் மூடிக் கொண்டுஉருட்டுகின்றார் உலகத்தார் என்று சொல்வோர்அழுந்தட்டும் அறியாமை, அதையுணர்த்தமுழங்கிற்று பெரியாரின் முரச ஒலிஅவ்வழி வந்தோன்... அன்பன்... தோழன்அருமைச் செல்வன்... அறிவியக்க வீரன்ஞாயிற்றின் நல்லொளியில்ஆயிற்று காலமென்று அகன்றுவிடக் கருக்கல்அங்கே...கிழக்கினில் கிளம்பிய காலைக் கதிரவன்வெடுக்கென வீழ்ந்தான் கடலில் எனறால்வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ?இருள் நீங்கி ஒளி பெறவே இந்நாடு முந்துங்கால்மருள் சூழ்ந்த சாவு மேகம் இளங்கதிரை மறைத்ததுவே!குன்றெடுக்கும் நெடுந்தோளன் குலத்தினனே!கொன்றொழிக்கும் கொடுவாளால் குள்ளநரிக் கும்பலின்குலை பிடுங்க குகை விட்டு வெளிவந்த சிங்க ஏறே!
மலைத் தோளா! மாணிக்கக் குன்றே!பழச்சுளை உன் பேச்சு! பார்வையிலே பனி வீச்சு!நீ போய்விட்டாய்... நின்னோடு நின் புகழ் போமோ?பன்னீர்ச்செல்வமே! உன் பால்வடியும்முகமெங்கே? பாண்டியன் மீசையெங்கே?பசியேறிய வெறி கடலின் பாழலைகள்ஓய்ந்தனவா உனைத்தின்று!"தின்னட்டும்... தின்று மகிழட்டும்... என்றும்எண்ணட்டும் திருவிடத்தா"ரென்றே எங்கு ஒளிந்தாய்?பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும்பாட்டாளிக் குணத்தினை எங்ஙனம் கற்றாய்?கோமானே! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர்ஓமான் கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்!பழுதற்ற திராவிடப் பொன்னாடு! பழமைமதுவுண்ட மக்கள் எல்லாம் விழித்தெழுதல்இது காண்டல் ... நின் பணிக்குக் காணிக்கையாம்!சுற்றி எதிர்ப்புகள் சூறாவளியாய்ச் சீறிடினும்வெற்றி எமக்கென்றே வெளிக் கிளம்பிவிட்டோம்!பஞ்சைகளல்ல நாங்கள்...தஞ்சைக் காவலன் சந்ததியார்!வீழ்ந்திட நேரிடினும் நின் செயல்பாடிவீழ்ந்திடுவோம்!'