கவிதை 38 / 77
“அறிஞர் அண்ணா வழியில்”
“On Arignar Anna’s Path”
“அறிஞர் அண்ணா வழியில்”
முப்பெரும் விழாவையொட்டி அண்ணா அறிவாலயம்கலைஞர் திருமண மண்டபத்தில் 16.9.1994 மாலை நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமை வகித்து தலைவர்கலைஞர் அவர்கள் பாடிய கவிதை.
வணக்கம்!
ஆகஸ்டு 15சுதந்திரம் பிறந்த நாள்செப்டம்பர் 15 - தமிழனுக்குச்சுவாசம் பிறந்தநாள்செப்டம்பர் 17 -தமிழனுக்குச்சூடு பிறந்த நாள்அதே நாளில்சொரணையும் பிறந்ததாலேநாம் பிறந்தோம்;ஆம், கழகம் பிறந்தது.இத்தனையும் இணைத்தே இரும்புச்சத்தனைய கொள்கை விளக்கம் தரமுத்தனைய விழாமுப்பெரும் விழா எடுக்கின்றோம்.
இவ்விழாவில்,கவியரங்கம் பாட வந்துள்ளகவிஞர்க்கும், காண வந்துள்ளதமிழ்ப்பெருமக்களுக்கும் வணக்கம்.
மலர்கள் எல்லாம்ஒன்றுகூடி ஒருநாள்மாநாடு போட்டுத்தீர்மானம் நிறைவேற்றின
"கவிஞர்களே!இனியும் உமது கவிதைகளில்எம் பெயரைஉவமைக்கு அழைக்காதீர்!"
மண்ணோக்கிக்கண்ணால் கெஞ்சிவெண்ணிலவுஒரு வேண்டுகோள் வைத்தது:
"பண்ணில் எனைவைத்துப்பாடியது போதும்விண்ணில் எனைச் சுதந்திரமாய்இருக்க விடுவீர்!"
முகில்கள் கூடிப்பேரணி நடத்திமுறையீடொன்றைச்சுமந்து வந்தன.
"மோகன சுந்தரிகள்கூந்தலுக்கு இனியும்மேகத்தை உவமை காட்டல்வேண்டாம் கவிஞர்களே!"
மான்களும், மயில்களும்,மற்றும் பலவும்மறியலே நடத்திக்கோரிக்கை விடுத்தன
"கவிஞர்களே! எத்தனை காலம்எமை இழுத்துக்கவிதைக் கூண்டில்அடைத்து மகிழ்வீர்?வேண்டும் விடுதலை" என்றேதாண்டிக் குதித்தன!
எம் கவிஞர் கூட்டத்தில்எல்லோரும் திகைத்துப் போய்ஏனிப்படிக் கோரிக்கை?போராட்டம்? பேரணி? எனக்கவரிமான், கானமயில்,வான்நிலவு, வண்ணமலர்,முகம் நோக்கிக் கேட்டபோதுவந்த பதில்:
"எங்களின் புகழ்பாடிஉவமை காட்டிக் காட்டிஎங்களுக்கே சலிப்புத்தட்டிவிட்டதய்யா" என்பதுதான்!
மானும், தேனும், மயிலும், குயிலும்வானும், கடலும், கதிரும், நிலவும்மாடப்புறா, ஜோடிக்கிளி,மா, பலா, வாழைக்கனிஆடும் கொடி, பாடும் அருவி,அகில், முகில், மலை, சிலைஅனைத்துமே இனி எமது
ஒத்துழைப்பு இல்லையெனப்புறக்கணித்ததால்; சரி...சொல்லுங்கள் நீங்களேசலிப்புத் தட்டாதபெயர்தான் என்னவென்றுகேட்டு நின்றோம்!
சலிப்புத் தட்டாத பெயர் ஒன்றுண்டு!நினைத்திடில்;புளிப்பு, கசப்பு, அணுகிடாத பெயர்!இலக்கியமாய் என்றும்வாழுகின்ற பெயர்!இணையிலாச் சரித்திரமாய்ஆகிவிட்ட பெயர்!
மலர் என்பீர்;வாடி விடுவோம்! அப்பெயரோவாடாமல் மணம் வீசும்,என்றென்றும்!
நிலவென்பீர்நிலையின்றிப் பிறையாவோம்!அப்பெயரோ;குறையின்றிக்குளிரொளி வழங்கும் என அறிக!
முகில் என்பீர்காற்றடித்தால்தான்கரைந்து மழையாவோம், நாங்கள்!காற்றின்றிக் கருணை மழை பொழியும்கருப் பொருளாய் உமது கவிதைக்குப்பெருமை சேர்க்கும்பெயர் ஒன்று காண்பீர்;
அப்பெயர்தான் அண்ணா எனும்அருமைமிகு பெயர் என்று;அருவியும், தென்றலும், அழகிய மலரும்பழகிய பலவும் — அகமகிழ்ந்துஒரு குரலில் எழுந்து முழங்கின!
அறியாதார்க் கன்றோஅண்ணாவை அறிமுகம் செய்ய வேண்டும்அவரைத்தான் அறியா தோரும்மெத்த அறிந்தவர் போல்நடித்தால்தான் நாட்டில்நடமாட முடியுமென்றுகருதுகின்ற கதையைத்தான்நாள்தோறும் காட்சியாகக்காண்கின்றோமே!
மலர்கள் முதல் மற்றஉவமைப் பொருள்கள் அனைத்தும்மனவருத்த முற்றுஎமது பெயரை எல்லாவற்றுக்குமிழுத்துச்சலிப்புத் தட்டச் செய்யாதீர் என்றுஎதிர்ப்புணர்வைக் காட்டும் போது;சலிப்புத் தட்டாமல் இருக்கின்ற பெயர்சரித்திரத்தில் பொன்னெழுத்தால்பொறித்த பெயர்களைப்பு போக்கிடும் பெயர்களிப்பினை வழங்கிடும் பெயர்அண்ணா — அண்ணா — அண்ணா எனும்அந்தப் பெயர்தானே!
அழுக்கான பேர்வழிகள் கூடஅண்ணா பெயரை,
மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரித்து;பழுக்காத இரும்பில்படைக்கலன் தயாரிப்போம்என்கின்றார்!ஒரு பேச்சுக்குக் கூடஅண்ணா அதை மறுப்பதில்லை!இதிலும்,எதையும் தாங்கும் இதயம் வேண்டுமெனஇருக்கின்றார் போலும், நமதண்ணா!
பெரியாரின் கருத்துக்கள்கசப்பான மருந்து என்று;பேரறிஞர் அண்ணா அம்மருந்தைஇனிப்புக்குள் வைத்துஇதமாக அளித்திட்டார்!
உடையுங்கள் விநாயகரை என்றுஉரைத்திட்டார் உடைத்திட்டார் பெரியார்!விநாயகரை வீணாக உடைக்கவும் வேண்டாம்;விநாயகர்க்குத் தேங்காய் உடைக்கவும் வேண்டாம்கழகத்தின் கொள்கையிதைக்கைவிளக்காய் ஏந்தி நின்றார் அண்ணா!
விநாயக சதுர்த்திக்கின்றுவாழ்த்துச் செய்தி தருவோரும்வித்தகராம் அண்ணாவின் பெயரைவிண்ணதிர முழக்குகின்றார்!
மண்சோறு தின்னுகின்றார் மந்திரிமார்மாரியம்மன் கோயிலுக்குள் உருளுகின்றார்வேப்பஞ்சேலை கட்டி,அம்மன் விழாக் கொண்டாடிவிட்டு
விரட்டுகின்றோம் மூடநம்பிக்கையை எனில்வெட்கம், வெட்கமெனக் கூறி விலகிவிடாமல்பக்கம் போய்ப் பாதபூஜை செய்கின்றபதவிப் பஞ்சோந்திகளும்பகுத்தறிவு ஜோதிகளாம்!
அண்ணாவின் பேரைச் சொல்லிஇப்படி அழகாக முடிச்சவிழ்க்கின்றார்;நியாயந்தானா?
பாலப் பருவ முதல் காஞ்சியிலேபல காலம் வாழ்ந்த அண்ணன்பக்கத்துத் தெரு மடத்துப் பெரியவரைபார்த்ததில்லை என்பதுதான் வரலாறு — இன்றோசின்னவரை தெரிசிக்கச் சென்று வந்தசெய்தியினை எட்டுக்காலம் போடுகின்றார்!பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சிபடுகின்ற பாட்டையும் நீ பாரண்ணா!
அண்ணாவைப் பார்த்தோர்க்கும்அவருடன் பழகியோர்க்கும்இருக்கின்ற வேறுபாட்டை;அன்றொரு நாள் நாவலர்விளக்கக் கேட்டோம்;இன்றவரே — பார்த்தோர் பக்கம் சாய்ந்துபாயிரம் பாடக் கேட்டோம்!
என் முகத்தருகே தன்முகம்வரவேண்டும்; படத்தில்விழவேண்டுமென்று நேற்றுத்தவங்கிடந்து தவித்தோர் எல்லாம்இன்று; அண்ணாஉன்னருகே நான் அமர்ந்திருக்கும்
புகைப்படத்தினிலேமைதடவி மறைக்கப் பார்க்கின்றார் — இந்தஅற்பரெல்லாம் அரசாளத் துடிக்கின்றார்;அடடா; உன்சிரிப்புக்கு அர்த்தம் புரிகின்றதண்ணா!
"பரந்த மனம், நன்றிகெட்ட பாவிகளைமன்னிக்கும் குளிர்ந்த மனம்வேண்டுமடா தம்பி" என்கின்றாய்ஆம் அண்ணா; அதனால்தானேஉன் இதயத்தை இரவலாகக் கேட்டுப் பெற்றேன்!
பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம்,இன உணர்வு, சமூகநீதி, மொழிப்பற்றுஇவற்றுக்கெல்லாம்;பாராள வந்த காரணத்தால் — புதுப்புதுபாஷ்யங்கள் சொல்லுகின்றார்!அவர் பால்: பதவி பெற்றோர், பல் வகைசலுகை பெற்றோர்,"ஆம்... ஆம்" எனத் தலையாட்டுகின்றார்!
பாரதத்துப் பகாசூரனுக்குப்பல்லுக்குப்பல் இருகாதம்பல்லிடுக்கு முக்காதமெனில்ஆம் ஆம் எனப் பம்பை அடிக்கும்படவேட்டம்மன் கோயில்பூசாரிச் சீடனுக்கும்இவர்களுக்குமென்ன வித்தியாசம்?
சிலையாக நிற்கின்றாய், சிரித்துக்கொள்கின்றாய்கொலைவாளால் கொள்கை அழிக்கின்றார்;பொறுத்துக் கொள்கின்றாய்!ஏன், என்று எமக்கும் புரிகின்றதண்ணா;அண்ணா வழியில் அயராதுழைப்பதற்குச்
சூளுரைத்து, சுயமரியாதைச் சுடரொளியாய்த்தம்பியர்கள் இருக்கின்றார் — அவர்கள்சோரம் போகமாட்டார்போலிகளைக் கண்டு ஏமாறும்பொதுமக்களுக்கு,உண்மைகளை உணர்த்திப்பொய்மைகளைப் புறக்கணிக்கச் செய்திடுவார்என நம்புகிறாய் அண்ணா — உன்நம்பிக்கை வீண் போகாமல்நடந்திடுவோம் அண்ணா!