கவிதை 2 / 77
தென்னவன் காதை
The Tale of the Southerner
இதே கவிதையின் மற்றொரு மூல ஆதாரப் பதிப்பும் கிடைக்கிறது. தென்னவன் காதை
தென்னவன் காதை
குறுந்தாடி; குள்ளத்தாடி; நெடுந்தாடி; வெள்ளைத் தாடி;இப்படிப் பல தாடியுடனே....புராண அங்காடி விரித்துப் புளிக்கும் பழங்காடி சுவைத்துப்போதையேறிக் கூத்தாடும் பூசுரர்கள் கூட்டம்.மாசு, மரு அற்றிருந்த மண்டிலத்தின் ஓரம்மாடுகளை, ஆடுகளை, மனிதர்களை வெட்டிப் பிணமேடுகளை வேள்விக்கெனக் குவித்துவந்த வேளை!ஆரியரின் படையெடுப்பால்... இல்லை...இடைநெளிவால்... கடை விழியால்.. இருடிகளின்இன்பரச பானத்தால் -இருண்டுவிட்ட தென்புலத்தில்-ஏற்றிவிட்ட விளக்கு போலஎழுந்து நின்றான் இலங்கைவேந்தன்!அவன் சரிதம் சொல்வதென்றால்... தசையெல்லாம் ஆடுதய்யோ!திசையெட்டும் புகழ் சேர்த்த தென்னிலங்கைக் கோமான்,திராவிடரின் மூதாதை!பழத்தமிழின் பால் பற்றுதலை வைத்த நம் பாட்டன்.கண்ணுக்குள் பாவைபோல் இலங்கைத் தீவு.கருவிழிதான் ஆழ் கடல்கள்! தமிழ்மண்ணுக்குப் புகழ் தந்த பெருவீரன்.உருவில் சிங்கம், உள்ளம் தங்கம்! யாழ்ப்பண்ணுக்கு யாரும் நிகரில்லையென வாழ்ந்தயாழ்ப்பாணத் திருநாட்டான் - மலைத் தமிழன்!
அவன் துணைவி, வண்டமரும் பூங்குழலாள்மண்டோதரி - மாதர் குல மாணிக்கம் - எதிர் வீணை மீட்டும்பேச்சுக்காரி!... இராவணனின் யாழோசைதோற்ப தெல்லாம்.... பத்தினியின் பள்ளியறைக்கனி மொழியின் முன்னேதான்!இமைக் கதவு உண்டே எழில் விழியைக் காப்பதற்கு;அப்படித்தான் - இலங்கைக்கு இராவணன்!அவனுக்கு அவள்!காடுகளில் நமதெல்லைக் கோடுகளில் ஆரியர்கள்,கடவுளுக்குப் பலிதேடும் வேலை, ஆகாதுகொடுமையென உருவினான் உடைவாளை!பர்ணசாலை அழைப்புக்கள் முத்தமிட்டன அவன்தாளை, அந்தப்பருவ மங்கையரின் சிரிப்போ விளைந்த பாளை!அட; தொடுவேனோ ஆரியத் தேளை எனஎதிர்ப்புக் குரல் கொடுத்தான் அந்தக் காளை!.....நரிகள் உள்ள காடெல்லாம், நயவஞ்சகர் உலவும்நாடெல்லாம் காவல்! காவல்! அந்தப் படைகளுக்குஇராவணன், காலம் காட்டும் சேவல்! சேவல்!தமிழரசி முத்து நகை இராவணனின் தங்கை,தண்டகாரண்யத் தவசிகளை எதிர்த்து ஊதிவிட்டாள் சங்கை!வேங்கையெனத் கிளம்பிவிட்டாள் வீரர்குல மங்கை,வேதமோதிகளின் விழிகளிலே வழிந்திடுதே கங்கை!துரோகத்தால் சூழ்ச்சியினால் தமிழர்களைத் தோற்கடிக்கத்தோள் வலியால் ஆகாதெனக் கண்டு விட்டதாலேசின்னவனாம் இலக்குவனும் சீதையெனும் மனையாளும்பின் தொடரப் புறப்பட்டான் இராமனெனும் மன்னன்,தம்பிக்குக் கேடிழைத்து முடிசூட முனைந்துநம்பிக்கைத் துரோகியென நாடெல்லாம் இகழக்காடாகி விட்டவன் அந்த ராமன் எனும் மனிதன்!
அவன் ஒரு நாள்,காட்டோரம் திரியும் போது, கரும்பனைய முத்துநகைகளைப்பினால் தூங்குகின்றாள் கனிமரச் சோலையோரம்,காமத்தால் கருத்திழந்த கசடனவன்,கமலமலர்க் கண்மூடித் தூங்குகின்ற தூயவளைத்துன்மார்க்கத்தால் கெடுத்திடவே - தம்பிதுணையோடு அருகே போனான்.காவலுக்குக் கைகாரி சீதாதேவி!காவலின்றித் தூங்கிவிட்ட முத்துநகை,கற்புக்கனல் காக்கக் கொதித்தெழுந்தாள்...கனிமரம் போல் தனியொருத்தி - இருமந்தி!என் செய்வாள்?கற்புக்கு விலையாகக் கரமிழந்தாள்! மூக்கிழந்தாள்!முத்துநகை கொட்டுகின்ற பல்இழந்தாள்! அம்மவோமுலையிழந்தாள் - ஆயினும் கற்புநிலையிழந்தாள் இல்லை!தலையிழந்து போயினும் மானங்காக்கும் தமிழச்சி,இராவணனின் தங்கச்சி!சூதறியாச் சோதரியைச் சூர்ப்பநகை ஆக்கிவிட்டகாதெரியும் செய்தி கேட்டான் - கண்ணிலே புண் பெற்றதுபோல்காட்சி தந்தான்.கடலாளும் புவி வேந்தன், முத்துநகைஅண்ணனன்றோ?படர் உறவு இல்லாவிடில்தான் என்ன?இலங்கைக்கு அவளோர் பிரஜையன்றோ?எழுந்து விட்டான் பழிவாங்க - காலைஇளம்பரிதிபோல் கண்களிலே சிவப்பு தேக்கி...!வேந்தன் வரும் செய்தி கேட்டு விழியழகி சீதாதேவி,பாந்தமுள்ள மானொன்று வேண்டுமென்றுபர்த்தாவை விரட்டிவிட்டாள்!
"அண்ணனில்லா நேரத்தில் அண்ணிக்கு வலைவீசும்நினைப்போ தம்பி?
முன்னவன் பின் ஓடு நீயும்" - எனத் துரத்தித்தென்னவன் வருகைக்குக் காத்திருந்தாள்.தீ பறக்கும் கண்ணுடனே தேர்போல வரும் வீரன்தேன்மொழி கொட்டிச் சீதை தெருவாசல் வருதல் கண்டான்."மூத்தவனும் இளையவனும் ஓடிவிட்டார் - எனக்குஏற்றவன் நீ வந்து விட்டாய் - என்னை உனக்குத்தந்துவிட்டேன்" எனத் தழுவினாள்இராவணனின் தடந் தோளில்,படர் முல்லை போலப் பைந்தொடி சீதாதேவி!என்னுயிர்த் தங்கைக்கு இடையூறு விளைவித்தவனின்மனைவி நீ!உன்னுடலைக் காக்கைக்கும், கழுகிற்கும்,காமங்கொள் கரடிக்கும் அளிப்பதல்லால்-கரம் படவும் விடமாட்டேன், கப்பலிலே ஏறென்றான்.மானத்தைக் கப்பலிலே ஏற்றிவிட்டமரபினிலே வந்தவனின் துணைவி, என் உடல்,தானத்தை ஏற்றிடுக என உரைத்தபடி-உரம்பெற்ற அவன் மார்பில் சாய்ந்திடவே - எப்படியும்வரம் பெறுவேன் என நினைத்துக்கலம் ஏறி நின்றாள், பீடுநடைச் சிங்கம்பின்,ஒரு பெண் நரி போல்!
"சிறையெடுத்துப் போன சீதாதேவிதனைச்-சிங்காதனத்திலேற்றிப் பட்டத்து ராணியாக்கிடுவான்,சீதைக்கோர் செல்வனுதித்தால்இலங்கைச் செங்கோலில் அவனுக்கும் பங்கு.பன நுங்கு போல ஆரியர்க்கோர் தேசம்-பாடுபடாமல் வருவதென்றால்-
பதினாயிரம் சீதை போனால்தானென்ன மோசம்!"இப்படி ஆரியர்கள் நினைத்தபடி நடக்காமல்,செப்படி வித்தைக்காரி சீதைக்குச் சிறைச்சாலைஏற்பாடு செய்துவிட்டான் இலங்கைக் கோமான்!வேதமென்றும், வேள்வியென்றும்,விளம்புகின்ற கூட்டந் தன்னை...விறகொடித்து வருதல் போல்விலா எலும்பொடித்து வருக என்றான்!வெற்றி வேந்தனுக்கோர் தம்பி வீடணன்....வேங்கை மரத்துப் புல்லுருவி,அண்ணனைச் சாய்த்துவிட்டு அரசாளக் காத்திருப்போன்.அனுமன் எனும் ஐந்தாம்படை யொன்றின் கையினிலேஅக்கினிக்கோல் எடுத்துத் தந்து,அழித்திடுக இலங்கைமா நகரையென்றான்...தென்னிலங்கைச் சீமையெங்கும் தீக்காடு பிணக்காடு!குணக்கேடன் வீடணனின் ஒத்துழைப்பால்குலம் வளர வழி கண்டார், குள்ளநரி ஆரியர்கள்!
[Line illustration occupies the lower portion of the page]
தமையனாம் வாலியெனும் தமிழ் வீரன் தன்னைத்தர்ப்பைகளின் சூழ்ச்சியினால் கொன்றுவிட்ட கொடியன்சுயமரியாதையை விலைகேட்கும் சுக்ரீவன் என்போன்-கண் சுழற்றும் ஆரியரின் காலடியில் வீழ்ந்தான்.தம்பியிடம் நம்பிக்கை வைத்திருந்த தங்கம்,தரணியெலாம் நடுநடுங்க ஆண்டுவந்த சிங்கம்,கடல் அலைமேல் எதிரிகளின் படைகள் வரக்கண்டு,உடன்பிறப்பே, விபீஷணா! உடன் கிளம்பு! என்றான்.படமெடுக்கும் பாம்போடு விளையாட்டு வேண்டாம்-கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கிடுவாய்: அண்ணாஉடன் சென்று சரணடைவோம் வந்திடுக! என்றே,மதுக் குடங்காட்டும் ஆரியர்க்குப் புகழ்பாடி நின்றான் - தம்பிகுரங்காட்டம் கண்டுவிட்ட தென்னவனும் - கண்கள்குளங்காட்ட ''குலங்கெடுக்க வந்தவனே!கோடரியின் பிடியே! கொடிய உன் நாக்கைஅறுத்தெறியாமல் இருந்ததற்கு நன்றி சொல்லிநடந்திடுக'' என நடந்தான் களம்நோக்கி ....!ஒரு கருவில் ஊறிவிட்ட உத்தமனாம் - சிந்தனைஉறக்கத்தில் வல்லவனாம், எழில்கும்பகர்ணனெனும் தம்பி, அண்ணன்இடையினிலே இருக்கின்ற உடைவாளைப் போலப்படைமோதும் இடம் நோக்கிப் பின் தொடர்ந்தான் பாய்ந்து!கடைக் குட்டித் தம்பியவன் எதிர்வந்து நின்றான்,ஜடை கட்டி வாழுகின்ற ஆரியரை ஜெயிக்கப்படை திரட்டிப் பயனில்லை - பாழாகும் என்றான்!துரோகக் கடை கட்டி வாழுகின்ற தம்பியல்ல நான்!நாசத்தின் பிறப்பிடமே! நடைகட்டு என்றேமடையுடைத்த வெள்ளம்போல் சீறிவிட்டுச் சென்றான்!
"என்னருமை வீரர்களே! ஏற்றங்கொள் தோழர்களே!இன்றிந்தத் தென்னிலங்கை ஆண்டிருக்கும் இராவணன் நான்-இழிதொழிலோர் -பண்பிழந்தோர் -எத்திப் பிழைப்போர்-அவரை நத்திக் கிடப்போர்அனைவரையும் அரை நொடியில் அழித்துவிடப்போர்க்கோலம் பூண்டு விட்டேன்!புலிநிகர் நண்பர்களே! பொல்லாத புரோகிதர்கள்,படை இல்லாதவர் என்றிருந்தேன்!பாவையரைப் பாசறையாய் ஆக்கிக் கொண்டுதேவையுள்ள படைகளெல்லாம் குவித்து விட்டார்,கோவை இதழ், கொய்யாக் கன்னம்,போர்வை உடல் கொண்டுவிட்ட இளங் குமரிகளால்,இனத்திலுள்ள மன்னரெல்லாம் இருடிகள்பால் சாய்ந்து விட்டார்!முழு நிலவு முகங்காட்டி, முனிவர்களின் பெண்டாட்டிமுடி மன்னர்களை வாட்டி விட்டார் - தமிழ்க்கொடி பறந்த கோட்டை யெல்லாம்மடியேந்தும் ஆரியர்க்கு மடங்களாய்ப் போனதய்யோ!அருமைத் தம்பிக்குத் தீமை சூழ்ந்து ஆரண்யம் ஓடி வந்தஎருமைக்குமில்லாத தடித்த தோலன்,இழி சுக்ரீவன் இவனுக்குத் தோழன்,அண்ணனுக்கு மரணம் தந்தோன்!இன்னொருவன், அனுமன் எனும் துரோகியுடன்இலங்கைக்குத் தீ வைத்த என்றன் தம்பி!இராமன், இவர்கள் எல்லாம் எதிர்க்கின்றார் என்னை யென்றால்,இதிலேதோ மர்மம் இருக்கத்தான் வேண்டுமன்றோ?நான்,சீதைக்கோர் மகன் தந்து, இலங்கைச் செங்கோலும்அந்த மகனுக்கே தந்துவிட வேண்டுமென்று,தீப்பந்தனைய நிபந்தனைகள் போடுகின்றார்.தீய இராமனது கூட்டத்தார்!பூப்பந்தனைய பொன் மகளாம் - என் துணைவிபாப்புனையும் புலவர்க்கும் கிட்டாத பைந்தமிழாம்-
கோப்பெருந் தேவியவள், குளிர் நிலா! வைரக் கட்டி! இந்தயாழ் மீட்டும் பாணனுக்கு, சீதையெனும்பாழ்பட்ட வீணை ஏன்? சிறிதுநாள்பட்டேனும் நம் நாடும் ஆரியரின் தாள் தொட்டுவணங்குதற்கு வழி திறவேன்!விழி மூலம் வீரத்தைக் காட்டுகின்ற வீரர்காள்!மொழி மீது ஆணை தந்து புறப்படுவீர் - முள்ளம் பன்றிகளைப்பழி தீர்த்துத் திரும்பிடுவோம்!"என முரசறைந்தான், முதுகுன்றத் தோளுடையோன்!அது கேட்டு அனைவருமே ஆர்ப்பரித்தார்!....கொலை மணக்கும் போர்க்களத்தில்இரு தரப்புப் படைகளுமே ரத்தங் கொட்டும்!தலை நொறுங்கிச் செத்தவரும், குடல் கிழிந்து போனவரும்தமிழினத்தார் - ஒரு குலத்தார்!மலையோரம், மரத்தோரம் மறைந்திருந்துஎலிபோலப் போரிட்டான் எதிரி இராமன்!அம்புவியில் கண்டதில்லை இந்த முறைஅம்பு வில்லை எட்டா என்றுகும்பகர்ணன் கொதித்தெழுந்தான்! அது கண்டுகுதித்தோடும் இராமன் தன்னைக் கோழையே திரும்பு என்றான்!கரும்போ உயிரென்று களிறு போல் முழங்கி நின்றான்!முடிக்கவில்லை அவன் பேச்சை... முதுகுப் புறத்தினிலே,சரமாரி பொழிந்து விட்டான் இலக்குவனும்!ஆனையெனச் சாய்ந்துவிட்ட அன்புத் தம்பிதனைச்சேனைதனை நடத்தி வந்த செந்தமிழன் கண்டுவிட்டான்!சிந்தையெலாம் அணுவெல்லாம் தழல் பறக்கப்பூனைகளே!... நில்லுங்கள் எனச் சொல்லிப்பூட்டி விட்டான்... போர்க் கணையை!குளிர் மேகம் கொட்டுகின்ற மழைதானோ?கோடையிலே அதிர்கின்ற இடிதானோ? எனப்புயல்வேகம் - புதுவேகம் கொண்டு விட்டான்!
வேல்பட்ட புலி போல - விடுபட்ட கணைபோல-அணை விட்ட வெள்ளம் போல - ஆயிரம் வாள்பட்ட மார்புடையான்,போரிட்டான்!...கால்பட்ட பிடரியுடன் கயவர்களும் மறைந்து போனார்!ஒழிந்ததடா பகையென்று, நகை முழக்கம்செய்து விட்டுத் திரும்புகின்ற வழிதனிலேஒளிந்திருந்து ஆரியர்கள் ஓரம்பு வீசி விட்டார்.மார்பினிலே பட்ட கணை வெட்டித் தள்ளி,யாரடா கோழையென்று வாள் ஓங்கித் திரும்பிவிட்டான்!ஓடுதற்கு வழியின்றிச் சிக்கிவிட்ட இராமன் கூட்டம்தேடுதற்கும் தசையின்றிப் பஞ்சாய்ப் போகும்!....கன்னலடா என்றன் நாடு, அதைஇன்னலிலே மாட்டிவிட்ட உங்களுக்கு-இந்த வாள்வீச்சுமின்னலடா எனக்கூறிச் சுழற்றி விட்டான்.சூறாவளிதனையும் சூழ்ந்தெதிர்க்கும் கீர்த்தி பெற்றோன்!இனி நிலைமை மோசமென்று, ஆரியக்கனி சுவைக்கும் வீடணன் கண்டு விட்டான்!ஈட்டியொன்று அவன் கையில்!... எறிந்து விட்டான்அண்ணனது முதுகின் பக்கம்!மறைந்திருந்து பறந்து வந்த அந்த ஈட்டி - அவன்மலைப்பாறை முதுகினிலே ஊடுருவி, மார்பகத்தில்தலைநீட்டிக் - கண்ணீர் கொட்டும்!இமயமலை சாய்வது போல், இராவணனும் வீழ்ந்து விட்டான்!"எனைக் கொன்றவன் என் தம்பி,பனைமரத் தோளுடையான் பார்ப்பனத் தாளுடையான் - கையிலேஉயிர் பிழைக்க மருந்துண்டு! - ஆனால் என்றன்உடன் பிறப்பு ஒளிந்திருந்து போரிட்டான்எனக் கேட்டுச் சாகின்றேன்"இது கேட்டுச் செத்தது போல் ஆகிவிட்டார்இலங்கை மாந்தர்!
[Decorative printer's ornament centered below the final verse]