கவிதை 1 / 77

இதயத்தைத் தந்திடு அண்ணா

Give Me Your Heart, Anna

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: இதயத்தைத் தந்திடு அண்ணா!

இதே கவிதையின் மற்றொரு மூல ஆதாரப் பதிப்பும் கிடைக்கிறது. இதயத்தைத் தந்திடு அண்ணா

X
இதயத்தைத் தந்திடுஅண்ணா
இதயத்தைத் தந்திடுஅண்ணா
(9.2.69 அன்று சென்னை வானொலியில்பேரறிஞர் அண்ணா அவர்களுக்குக்கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்அளித்த கண்ணீர்க் கவிதாஞ்சலி.)
பூவிதழின் மென்மையினும் மென்மையானபுனித உள்ளம்-அன்பு உள்ளம்-அரவணைக்கும் அன்னை உள்ளம்! அவர்மலர் இதழ்கள் தமிழ் பேசும்-மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-விழிமலர்கள் வேலாகும், வாளாகும்தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!அம்மலரே எதிரிகளை மன்னித்துநெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்!மக்களாட்சி மலர் குலுங்கசமதர்மப்பூ மணக்கதாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாகஆடிவரும் தென்றல்,
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம்பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்உனக்காக எனைத் துறப்பேன்; என் -ஒரு கோடித் தமிழ் இளைஞர்,பாடி நின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்....
முரசிற் செறிந்த தமிழார்வம்முதிரா இளைஞர் ஆருயிரைப்பெருகச் செய்த செயல் மறவர்சிறப்பைப் பாடக் கேண்மினோ!தங்கு சனி வேல் செய்த புண்களைஅன்பெனும் வேது கொண்டாற்றியும்செங்கனி வாய் மருந்தாட்டுவார்சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொருதடக்கை வாளெங்கே; மணி மார்பெங்கே?போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாதபுரவலர்த் தோளெங்கே எங்கே யென்றுதம்பியரைக் கேட்டதனைக் கேண்மின்!கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்தகலவி மடவீர் கழற்சென்னிகாஞ்சியிருக்கக் கலிங்கம் தொலைந்தகளப் போர் பாடத் திறமினோ என்று
மயல் கொண்ட மாதர்தமைத் துயில் எழுப்பச்செயல் கொண்டார் பாடினார்களப்பரணி.. கலிங்கத்துப் பரணிஅளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி - யான்கவிப்பரணியேற்றி, காஞ்சிபுரப் பரணிபாடி நின்றேன் இன்றுஅவலப் பரணி பாடுகின்றேனே...!
கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்கதிரினில் ஒளியெனக் காவினில் மலரெனநிலவினில் குளிரென நிலமிசை வளமெனக்குலவிடும் அருவி குழறிடும் மொழியெனஉலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலின் ஆடிடும் நுரையெனக்கலைமணங் கமழக் கூடிய கவிஞர்தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிடநிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ!வெள்ளம்!வெள்ளம்!மாபெரும் வெள்ளம்!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்தாயகத்தில் மொழிப் புரட்சி தோன்றுதற்குவித்திட்டார் சிலபேர் என்றால்: ஈரோட்டுநாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சி பூண்டு!
இரு மூன்று திங்கள் வரை சிறையில் வாடி,தரும் ஊன்றுகோலாகத் தமிழைத் தந்துஅரு மூன்று எழுத்தாலே அண்ணாவானார்....அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்சென்னையிலே சொன்னேனேநினைவுண்டா உங்களுக்கு?
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டுமுத்தமிழ் மணமுண்டு...மூவேந்தர் முக்கொடி முக்கனியெனமும்முரசார்த்தவர் தமிழர் - அவர் வாழ்ந்ததமிழ் ‘வாழ்வு’க்கு மூன்றெழுத்து - அந்தவாழ்வுக்கு அடிப்படையாம் ‘அன்பு’க்கு மூன்றெழுத்து...அன்புக்குத் துணை நிற்கும் ‘அறிவு’க்கு மூன்றெழுத்து
அறிவாற்றோர் இடையிலெழும், ‘காதல்’க்கு மூன்றெழுத்து...காதலர்கள் போற்றி நின்ற கடும் ‘வீரமோ’ மூன்றெழுத்து...வீரம் விளைக்கின்ற ‘களம்’ மூன்றெழுத்து...களம் சென்று காணுகின்ற ‘வெற்றி’ மூன்றெழுத்துஅந்த வெற்றிக்கு நமையெல்லாம் ஊக்குவிக்கும்அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்துஅறிந்திடுவீர் எனச் சொன்னேன்!
திக்கெட்டும் தமிழ் முழக்கம்திசையெங்கும் சொன்மாரிவக்கற்றோர் வகையற்றோர்வாழ்வதற்குத் திட்டம் கோரிவண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகிறார் அண்ணா எனில்,ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்நாடெல்லாம்.... புதுமை மணக்குதங்கே....“ஏடா தம்பி எடடா பேனா....!”“கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு”கருத்துப்பேழை கற்பூரப் பெட்டகம்!
“மரக்கிளையிலே பிணம்!”“வெந்த புண்ணிலே வேல்!”மறந்திடப் போமோ! மனங்கவர் வாசகம்?“சாலை யோரத்திலே வேலையற்றதுகள்-வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள்-வேந்தே! அதுதான் காலக்குறி!”அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?அறிவு நடை!
“கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது”தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ!“இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?”“தம்பியுடையான் படைக்கஞ்சான்”....
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்மனோன்மணியம் எனினும் - நம்மனத்தில் பதித்தவர் அண்ணாவன்றோ!“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்”அரசியல் பண்பினைப் போதிக்கும் அழகே!“மறப்போம் - மன்னிப்போம்”மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!எவர் கற்றுத் தந்தார் இதனை?சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல் போல்நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்நன்றென்றார் அண்ணா -அதை மறந்துநாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா!அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்கவயிறு தாங்காத காரணத்தால்தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே! என அழைத்துக்கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டிப்பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக் கொண்டார்.சொலல் வல்லார் சேதுப் பிள்ளைதனைச்சோமசுந்தர பாரதியைச் சொற் போரிலேசொக்க வைத்தார் - பாவம்; சிக்க வைத்தார்!நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே - பணச்சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும்கொள்கையாலே - அதனைவீதிக்குக் கொண்டு வந்தார்!வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்றுசேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார்- அண்ணாவின் போர்க்கோலத்தை எதிர்க்க மாட்டாமல்
கோலற்ற குருடர் போலக் கொள்கையற்றோர்வீழ்ந்து போனார்!தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும்பெயர் மாற்றத் தீர்மானம்வீரர் கூடிய மாநாட்டில் கொண்டு வந்தார்!அண்ணல் காந்தியார் அறவழி கண்டுஆங்கில ஆட்சியை அகற்றியபோதுதுன்ப நாளென்னும் பெரியார் அறிக்கையை மறுத்துத்தொடங்கினார் போரை!
இன்ப நாளிது! இனிய நாளிது!என்பு தோலாய் ஆன இந்தியர்அன்புறு காந்தியின் அருளால் இன்றுஎழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து!முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்துஎன்றே அண்ணா, அன்றே சொன்னார்....
அன்று முதல் அண்ணன் - அய்யா - உறவினிலேகீறல் விழஅது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய்மாறிமுகில் கிழித்து வெளிக் கிளம்பும் முழு மதியாய்முன்னேற்றக் கழகத்தை முகிழ்க்கச் செய்தார்!
தலைவருடன் கூடி வாழ முடியாமல்பெரும்பான்மைத் தோழருடன் வெளியே வந்தவுடன்,நிலைகுலையா நம் அண்ணன் அன்று சொன்னார் அது.நேற்றுச் சொன்னது போல் இருக்குதம்மா!தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு- என்தலைவர் இருந்த நாற்காலி, காலியாக இருக்கும்! அதில்
தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்....அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.
பூத்திருக்கும் மலர்த் தோட்டம்காலை பனிநீர் வடிப்பது போல்காத்திருந்து கூட்டம் கேட்டோர்கண்ணீர் வடித்தார்.கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! -என அழைத்துச்செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்!யாரேனும் கேட்டதுண்டா?பாரேனும் பகர்ந்ததுண்டா?பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்பதுங்கிப் பாயும் வேங்கையெனப் - பாராள வந்த கதை?ஈராண்டு முடியவில்லை என் அண்ணா ஆட்சியேற்று-சீரார்ந்த செயல் பலவும் செய்கலுற்றார்!ஏரார்ந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்துஎழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி.உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்தஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவரவர்இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை'யெனஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!ஆந்திரத்துப் பிரம்மானந்த ரெட்டிகாரும்ஆகா-நீர் தானே அசல் காந்தீய வாதியென்றுஆராதனை செய்திட்டார் - ஆண்டொன்று முடியவில்லை!மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல மாநிலத்தில்கை கழுவிக் கலயம் கட்டிவிட்டார்மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்றுகிரியென்றால் மலையன்றோ - அந்தமரங்களிலே!மலைதழுவும் முகிலானார் நம் அண்ணா!
வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.
பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் - அன்றுதென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர்அண்ணன் பற்றிஎன்ன சொன்னார்-?பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் - அண்ணா,பழத்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார். அந்தமறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்.பசுமலை பாரதி - பாண்டியன் தோற்றம்நாவலர் என்று நாடே அழைக்கும் - அவர்சழக்கரால் வீழ்ந்த தமிழ் நிலம் காக்க மனஅழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றேஅண்ணன் பெருமை சொன்னார் அன்று!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னைநூறாயிரம் கோடி என ஆண்டுபல வாழ்வதற்குநூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரைதான்மன்னன் என்றால் கரிகாலன்நூல் என்றால் திருக்குறளேஎனப்போற்றும் அறப்பனுவல்அளித்திட்டான்; மாந்தரெல்லாம்களித்திட்டார்!விண்முட்டும் மலையோரம் - நம்கண்பட்டும் படாமலும் எழுகின்றநச்சுமரம் போலப் பண்பட்ட தமிழர் வாழ்வில் - முதுகில்புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ!
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!
அறிவு மணங்கமழ்கின்ற ஆலயங்கள் அற்றுப்போய்ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோயில்கள் கண்டுவிட்டார்.மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் - தமிழ்அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட பெருநிலத்தில்பிறநெறிகள் பயிர் செய்தார்; பிழை குவித்தார்.மழையற்றுப்போன வயல்போல மாறிற்றுத் தமிழர் மனம்அழுக்காறு அவர் வெகுளி - இன்னாச் சொல் நான்குமின்றிநடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்!பொருளிலார்க்கு இவ்வுலகமில்லையென்றுபொருள் குவித்து வளம் செழித்த நாட்டில் - இன்றுஇருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே.வாடினாள் தமிழன்னை சோகப் பாட்டுப் பாடினாள் தமிழன்னை;சுடுநெருப்பில் ஆடினாள் தமிழன்னை...ஓடினாள்...ஓடினாள்... ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்கவியூரின் பெருவேந்தன் குறளாசான்!ஆண்டு சென்று, 'அருமை மகனே!வேண்டுகோள் ஒன்று விடுத்தேன்' என்றாள்.'என்னம்மா?' என்றான் குறளோன்.'தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்மீண்டும் நீ பிறந்திட வேண்டு'மென்றாள்.'தங்கம் எடுக்கவா?' என்றான்'தமிழர் மனம் வாழ்வெல்லாம்தங்கமாக ஆக்க' என்றாள்.'இன்றென்ன ஆயிற்' றென்றான்.குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;சென்றமையக் குடில் இல்லை ஏழைக்கென்றான்;கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறுஅமுத மொழி வள்ளுவனும்அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்;தொழுத மகன் உச்சிமோந்துஆல விழுதனைய கைகளாலே.. அணைத்துக் கொண்டுஉழுத வயல் நாற்றின்றிக் காயாது.இனிமேலே என எண்ணிமனமகிழும்உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழகாய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவேகற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.
பிறந்திட்டான் நம் அண்ணனாக;அறிவு மன்னனாக.பொதிகை மலைத் தென்றலாய்ப்போதாகி மலர்கின்றபதிகத்துப் பொருளாய்ப்பழந்தமிழர் புறப்பாட்டாய்தமிழ் உணர்வின் புதுமணமாய்ப்வந்துதித்தான் அண்ணன் - கீழ்வானுதித்த கதிர்போல-அவன் புகழைப் பாடுதற்குஅவன் வளர்த்த தம்பி நானும்அவன் தந்த தமிழ் எடுத்துஇவண் வந்தேன் இதுதான் உண்மை-தலைவரென்பார், தத்துவமேதை என்பார்,நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார்சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்துஅமைச்சரென்பார்,அன்னையென்பார், அருமொழிக் காவல் என்பார்,அரசியல்வாதி என்பார் — அத்தனையும்தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து'அண்ணா' என்ற ஒரு சொல்லால்அழைக்கட்டும் என்றே - அவர் அன்னைபெயரும் தந்தார்
அந்த அன்னைக் குலம் போற்றுதற்குஒளவைக்கோர் சிலைஅறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலைவளையாத நெஞ்சப் பாரதிக்கும்,வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலைவீரமா முனிவருக்கும் சிலைகால்டுவெல் போப்புக்கும் சிலைகம்பர்க்கும் சிலைதீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலைஅன்பாலே திக்கெட்டும் குறள் பரப்பத் திருவள்ளுவர்க்கும் சிலைபத்து சிலை வைத்ததனால் - அண்ணன் தமிழின் பால்பற்றுதலை உலகறிய; அந்தஅண்ணனுக்கோர் சிலைசென்னையிலே வைத்த போது..வைத்துள்ள ஆள்காட்டி விரல் மட்டும்காட்டி நின்றார்...ஆணையிடுகின்றார் எம் அண்ணா என்றிருந்தோம்அய்யகோ, இன்னும்ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்ஒரு விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!எம் அண்ணா... இதயமன்னா ....படைக்கஞ்சாத் தம்பியுண்டென்றுபகர்ந்தாயே;
எமை விடுத்தும் பெரும்பயணம் ஏன் தொடர்ந்தாய்....?உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே!எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்; நியாயந்தானா?கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?விரல் அசைத்து எழுத்துலகில்விந்தைகளைச் செய்தாயே; அந்தவிரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்இன்று மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை!கொடுமைக்கு முடிவு கண்டாய்; எமைக்கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்;இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்!கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா!எழுந்து வா எம்மண்ணா!வரமாட்டாய்; வரமாட்டாய்;இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா... நீஇருக்குமிடந் தேடி யான் வரும் வரையில்இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா ....நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதைஉன் கால் மலரில் வைப்பேன் அண்ணா......
[Decorative printer's ornament centered below the closing verse]

மூலமும் சான்றும்