கவிதை 8 / 77

பிலவங்க ஆண்டு

The Pilavanga Year

X
பிலவங்க ஆண்டு
13.4.68 அன்று சென்னை வானொலியில்நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை
வணக்கம்.
‘பிலவங்க’ ஆண்டைப் பின்னுக்குத் தள்ளிஇலவங்காய் போல் வெடித்தது ‘கீலக’கலகங்கள் இன்றிக் காழ்ப்புகள் இன்றிஉலகெங்குமுள்ளோர் வாழ்க என்று வாழ்த்துவம் நன்று.வருடப் பிறப்பென்றால் ‘தை’ என்றாலும்;இது வழக்கத்தில் வந்ததனால் வாழ்த்திடுவோம்.வருடத்தில் ஒருநாள்தான் வாழ்த்துகின்றசிக்கனப் பண்பெதற்கு?வாயார மனமாரப் பல நாளும் வாழ்த்துச் சொல்வேன்வானொலியில் கவி பாட வந்திருக்கும் கவிஞர்க்குவணக்கம் சொல்வேன்.
நித்திரை கலைந்தது நீள் விழி திறந்தாள்சித்திரைப் பெண்ணாம் முத்திரைப் பொன்னாள்பத்தரை மாற்றுப் பாட்டுப் புலவர்கள்இத்தரை போற்றும் கற்றறி வள்ளுவர்இயற்றிய குறளில் இனிதே நுழைந்து
ஈந்திடும் கருத்தை இங்கே சுவைப்போம்.பிறப்பாலே புகழ் இல்லை: பெற்றசிறப்பாலே புகழ் என்றுஅறப்பாலைப் பாடி வைத்தான்.அதனைத் திறப்பாடல் புனையும் நல்லோர் -நாம் மறக்காமல் இருப்பதற்கு வழங்க வந்தார்.
பறக்காமல் இருக்கின்ற பறவை நான்இலக்கணச் சிறகு முளைக்காமல் தவிக்கின்ற கவிக்குஞ்சு நான்பறக்காமல் இருக்கின்ற பறவை நான்கூடு விட்டுக் கூடு பறக்காமல் இருக்கின்ற பறவை நான்சிறகு முளைக்காமல் இருக்கின்ற கவிதைக் குஞ்சு நான்சிலரைப் போல் வால் மட்டும் முளைக்காமல் இருக்கட்டும்என் கவிக்கென்னும் சிறு கவிஞன் நான்
அடக்கத்தால் சொல்லுவதாய் எண்ணாதீர்தளை சீர் தொடை அணி யாப்பெல்லாம்தடுக்கத்தான் செய்யுமய்யா என் பாட்டில்!அதற்கு விதி விலக்கு கொடுக்கத்தான் வேண்டும் நீங்கள்இல்லையானால் உமை விடுத்து நடக்கத்தான் வேண்டுமென்று எழுந்திடுவேன்.உறங்கும்போது ஒரு நாள் கனவொன்று கண்டேன்.பிறகென்னவிழித்திருக்கும் போதா கனவு வரும் எனக் கேளாதீர்விழித்திருந்து கனவு கண்டே விடுதலை பெற்றார் காந்திபழித்திருந்த பலபேரைப் புன்சிரிப்பால் வெற்றி கண்டுஅறிஞர் அண்ணா விழித்திருந்தே நல்லாட்சிக் கனவு கண்டார்அது நிற்க விரைவில் பெற்றார்.
அடியேன் கண்ட தூக்கக் கனா வென்ன?
அறிந்திடவே துடிக்கின்றீர்!ஆணிப்பொன் மேனி அழகு மயிலனையார்ஆறுபேர் ஆரணங்கு.அல்லிப்பூ மென்மேனிஅள்ளிப் பருகிடத்தான் யாருமே துடிக்கின்ற.தேன் பொய்கை ஊருக்குத் தெற்கேஊருணியின் நிழலோரம்காருக்குள் அமர்ந்து கண்மூடித் தூங்குகின்றேன்
“வேருக்குள் தாங்கும் பலாக்கனி நாங்களய்யாபாருக்குள் எம்போல் பாவையுண்டா?” என்றார்“கோரிக்கை யாது கூறுவீர்?” என்று நானும்கோவை இதழ்க்காரிகளைக் கேட்கு முன்னம்“அறுவரில் ஓரழகி தேர்ந்தெடுப்பீர்அவளுடன் வாழ்வெலாம் களித்திருப்பீர்அட்டியின்றி இப்போதே சொல்லிடுவீர் - நேரம்வட்டியின்றிக் கழியு” தென்றார்!
“செட்டிமார் வீட்டுப் பெண்ணோ?” கேட்டுவிட்டேன்!“முட்டி மோதும் சாதியில்லை மதமில்லை - யாம்மனித குலம் : அவ்வளவே!” என்று சொன்னார்.ஆசைதான் எனக்கும் கூடஆனால் தேர்வில்தான் திகைத்துப் போனேன்அறுவரும் ஒரு நிறம் ஒரு குணம்பருவமும் வேறிலைபனிமலர் இரு கனி மரம் இடையிலோஎழில் நடையிலோவிழியாம் வேற் படையிலோஇதழ்க் கடையிலோமுரணிலை முறுவலும் ஒரு நிலை.பட்டென்றால் ஒருத்தி மேனிபட்டேதான் அறுவர் மேனி...பளிங்கென்றால் ஒருத்தி மேனிபளிங்கேதான் அறுவர் மேனி...கிளிமொழி ஒருத்தி பேச்சுகிளியேதான் ஆறு பேரும்.
அருள் நெறி ஒருத்தி வார்த்தைஅங்ஙனமே ஆறு பேரும்குறள் மொழி பேசுகின்றாள் ஒருத்தி என்றால்நான் கூறுகின்ற ஆறு பெண்ணும் அதனைத்தான் பேசுகின்றார்.
என் செய்வேன் எப்படித்தான் தேர்ந்தெடுப்பேன்புண் செய்தார் விழிவேலால் இதயத்தில்பண் செய்தார் நெஞ்சத்தில் காதலுக்கேமண் செய்த விந்தையாலே
மங்கையர்கள் அறுவர் ஒன்றாய் என்கண் கொய்து திகைப்பாலே தவிக்க வைத்தார்.சரி; பேர் கேட்டுத் தெரிந்து கொண்டு அதில்யார்வேண்டும் நமக்கென்று தேர்வதற்கு முன்வந்தேன்:
ஆளுக்கொரு பேர் சொன்னார்:“அருளுடைமை” ஒருத்தியின் பேர்.‘அடக்கம்’ என்பவள் இன்னொருத்தி.‘இனியவை கூறல்’ பிறிதொருத்தி,‘பொறை’ யென்றாளொரு பூங்கோதை,‘வெகுளாமை’ எனச் சிரித்தாள் வெறொருத்தி.‘இன்னா செய்யாமை’ என் பேர் என்றுமுன்னால் வந்து நின்றாள் ஆறாமவள்.
அடக்கமிருப்பின் அருளுடைமை ஆடிவரும்இனியவை கூறுமிடம் பொறையிருந் தரசாளும்வெகுளாமை கொண்ட மனம்,இன்னா செய்யாமை பூக்கின்ற தும்பை வனம்.இதில் பேர்தானே மாற்றம்; வேறென்ன மாற்றம்?‘ஒத்தவயது ஒத்த குணம் ஒத்த முகம் உள்ள நல்லீர் -உமைப் பெற்றெடுத்த தாய் யார்?” என்றேன்;“தமிழ்” என்றார்.தந்தையோ வள்ளுவராம்!
“அண்ணா” எனத் தழுவிக் கொண்டார்.“அன்புச் சோதரிகாள் உமது கரம் பிடிக்கஆறு கவி கொண்டிங்கு வருகின்றேன்அவர்கள் கூறு கவி கேட்ட பின்னர்மாலை சூடி மகிழ்ந்திருப்பீர்” என்று சொன்னேன்.சரியென்றார்; வந்து விட்டார் கவிஞர்களும்!அம்மவோ அதிலோர் கவி பெண் கவி!“ஆறாவது பெண்ணுக்கு ஆண் கவி எங்கே?” என்றார்.திடுக்கிட்டேன் விழித்திட்டேன்கலைந்திட்ட கனவோடு கவியரங்கு வந்திட்டேன்கனவு கலைத்த கவி கைலாசக் கவி சௌந்தராகைலாசக் கவி அவை நடுவே வந்துள்ளார்அவர் இனி - அவை கூறல் நன்றெனவே - அவர்“இனியவை கூறல்” நன்றெனவே - இனிஅவை கூறாது ஒதுங்குகின்றேன்.இனியவை கூறல் எனுந் தலைப்பில்அம்மை முழங்கிடுவார்:
(திருமதி சௌந்தரா கைலாசம் “இனியவை கூறல்”பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து அடக்கம்;அடக்கத்தின் விளைநிலமாய் அறிவே நிற்கும் அதுமுடக்கத்தான் துவையலைப் போல் நோயும் தீர்க்கும்ஆணவ நோயும் தீர்க்கும்
நடக்கத்தான் கால் என்போம்; உதைக்க அல்ல!மடக்கத்தான் கத்தி என்றால் தேவையில்லை - பழம்அறுக்கத்தான் கத்தி வேண்டும், உயிர் பறிக்க அல்ல.அடக்கத்தில் எழும் வீரம் உண்மை வீரம்வழக்கத்து வாய்வீரம் போலி வீரம்ஆமைபோல் ஐம்பொறியும் அடக்க வேண்டும்அதற்காக ஊமைபோல் குருடு போல் செவிடுபோல்ஊர் நடுவே திரிதல் நன்றோ?கண் அடக்கம் இமைக் கதவில்நா அடக்கம் வாய்ச் சிறையில்மூச்சு அடக்கம் காற்றினிலேமெய் அடக்கம் கல்லறையில்நல்ல மன அடக்கம் அறிவொளியில்
எனைத் தலைமை தாங்க ஆணையிட்ட அவையோர்க்குநன்றியெனல் அவையடக்கம்;எனைத் தலைமை தாங்க மன்றாடிக் கேட்டுக் கொண்ட மன்றத்தார்க்குஆசியெனல் மண்டை வீக்கம்.யாகாவாராயினும் நாகாத்தல் அடக்கத்தின் முதற்படியாம்;வாய்க்குள் ஒரு “வெறி நாய்” காத்தல் ஆணவத்தின் மேற்படியாம்!அங்கிருந்து உருண்டு விட்டால் உருவின்றிச் சுருண்டு போகும் நெஞ்சழுத்தம்இதையெல்லாம் அவை நடுவே காணிக்கை ஆக்குதற்குமாணிக்க வாசகர் வருகின்றார்.பெற்றுக் கொள்வோம்.
(கவிஞர் மாணிக்கவாசகம் “அடக்கம்” பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து பொறை;பிறையொன்று பொறுத்திருந்து நிலவாகும்பொறை கொண்டார் பொறுத்திருந்து நிலமாள்வார்இரையொன்று வருமட்டும் காத்திருக்கும் கொக்கு;அதனைப் பொறை யென்று சொல்லாதீர்தரைமீது அப்பறவை கற்ற சூழ்ச்சிஇகழ்வார்ப் பொறுத்தல் தலையாய்க் கொண்டோன்அகழ்வார் தாங்கும் நிலமென நவின்றார்இகழ்வார்க்கிருப்பது தலையும் அல்லஏசிக் கிறுக்குதல் கலையும் அல்லபுகழ்வார் பின்னே போதலும் தீதுஇகழ்வார் எதிர்த்தல் அதனிலும் தீதுபொறையுடை மேலோன் திரை கடல் இதயம்கறை படு விதமாய்த் தாக்கி மகிழ்வோர்தரை படு மீனாய்த் தவிப்பது உண்மை.குறை படு சொல்லால் குத்துதல் எளிது;அதை நிறை படு மனத்தால் தாங்குதல் அரிது;இதனைப் பொறை யெனுந் தலைப்பில் பொழிந்திட வந்தார்ஆற்றல் அரசெனும் ஆர்வக் கவிஞர்:
(கவிஞர் ஆற்றலரசு ‘பொறை’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து வெகுளாமை;தன்னையே கொல்லும் சினம் என்றுதமிழ் மேதை வள்ளுவரும் குறள் தந்தார்சினந்தவர்கள் ஆர்த்தெழுந்து, கண் சிவந்தவராய் ஆடுவதும்,குடியில்
மிதந்தவர்கள் தடுமாறிக், கண்சிவந்து தள்ளாடுவதும் ஒன்றேயாம்ஆமையிலே பொறாமை நல்லதல்லஇயலாமை ஏற்றதல்லஅறியாமை நாடழிக்கும்கொல்லாமை போல நல்லாமைவெகுளாமை -வேறாமை புகுந்துவிட்டால் வீடு நாசம்; நாடு நாசம்;வெகுளலுக்கு முகம் நூறுபல் நெறித்தல்உதடழுத்தல்கண் பிதுக்கல்இப்படி நூறு விதம்வெகுளலுக்கு முகம் நூறுநூறு முகம் மதுவெறி போல் மாறிவிடும்நூரு முகம்மது ஒளிப்பாட்டு அதனை ஆறவிடும்:
(கவிஞர் நூர் முகம்மது “வெகுளாமை” பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து இன்னா செய்யாமை;இஃதுமோர் ஆமை ஆனால் நல்லாமை:இதனைக் கல்லாமை; பெரிய தீமை!கன்னமொன்றில் அடித்திட்டால் இன்னுமொன்றைக் காட்டென்றார் ஏசுஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்துவிடல் நலமென்றார் குறளார்இந்நா, சொல்வதெலாம் இன்னா....என் நா அவ்வாறே பழகிற்றென்றுகன்னா பின்னா சொல் இறைப்போர் அறிவு அணியில்
முன்னா? பின்னா? எதிலும் இருக்க மாட்டார்-மூலையில்தான் கிடப்பார்.இதனையெல்லாம்சுரதாவாம் சுவைக் கவிஞர்சொல்லடுக்கி விளக்கிடுவார்:
(கவிஞர் சுரதா “இன்னா செய்யாமை” பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து அருளுடைமை;பொருளுடையார்க் கிவ்வுலகம்அருளுடையார்க் கவ்வுலகமென்றுஇருளுடையார் நெஞ்சத்தில் விளக்கேற்றி வைத்தார்அவ்வுலகம் எவ்வுலகம் என்பதிலே ஆராய்ச்சி பல உண்டுபல் உயிரில் சில உயிர்கள் போகின்றநல் உலகம் அவ்வுலகம் என மொழிவாரை நாமறிவோம்.கல் உரித்த நாரென்றால் நம்புவதா?சொல் உரித்தார் சொர்க்கமென்று நரகமென்றுஎள் உதிர்த்து ஏகலாம் அங்கே என்றார்முள் உதித்த ரோஜா போல் முழு உண்மை மலரட்டும்.அறிவெங்கே? விளைவெங்கே? அனைத்தும் பாழாம்!ஏட்டில் எழுத்தில் இருக்கும் சொர்க்கம்ஏழைக்குதவுதல் இங்கே சொர்க்கம்எளிமை பழகுதல் இனிய சொர்க்கம்இனியவை கூறல் இங்கே சொர்க்கம்இறந்தும் வாழ்தல் இறவா சொர்க்கம்இவ்வுலகம் அடைவதற்கே அருளுடைமை வேண்டுமென்றார்இனிய கவி தூரனாரும் இதை விளக்க வந்துவிட்டார்:
(கவிஞர் தூரன் “அருளுடைமை” பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
மலர் குவிப்பார் - கவிமலர் குவிப்பார் என்றிருந்தேன் ஏமாந்தேன்; இவர்மலர் குவித்தால் மாலையாகத் தொடுத்திடத்தான்காத்திருந்தேன்!
இவரோஆளுக்கொரு மாலை அழகாகக் கட்டிவிட்டார்.தமிழ்த்தாயின் தாளுக்கொரு மாலை:வள்ளுவரின் தோளுக்கொரு மாலை:அறம் பொருள் இன்பமெனும் ஒவ்வொருபாலுக்கும் ஒரு மாலை; மிச்சம் ஒரு மாலை இருப்பதாலேஅதனைப் போட எந்தப் பெரும் ஆளைத் தேடுவது!ஆண்டுத் திருநாளில் அனைவருமே அணிந்து கொள்வோம்ஒரு நாளில் உலகத்தைத் திருத்துவது இயலாதுபல நாளும் முயன்றிடுவோம் - முதலில்நாம் திருந்தி நாடு திருத்த முனைந்திடுவோம்காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லன் எனில்ஆட்சிக்கிவன்தான் சரியோ என்றுசாட்சிக் கூண்டு ஏறவும் தயங்கார்காட்சிக் கெளியன் காந்தியின் சீடன்கடுஞ்சொல் கூறான் புத்தரின் தொண்டன்ஆட்சிக்கிவனே அமைதலும் நன்று;குறள் மாட்சிக் கிவனே தகுந்த சான்று.
இனியவை கூறுவான்.இன்னா செய்யான்அடக்கம் காப்பான்அருளை வணங்குவான்.பொறையில் குறியான்சினம் பொங்கி அறியான். இந்த
“அன்பு நெறியினில் அமைதி நிலவிடும்ஆகா நெறியினில் அமளி பிறந்திடும்கத்தி தூக்கல் கலகம் விளைத்தல்கடுகைப் போய் மலையாக்கல்; அன்புக்கடல் அமைதி கெடுக்கின்ற புயற் காற்று; அதைத்தென்றலாய் மாற்றுதற்குத் தெளிவு வேண்டும்; மிகுந்தஅறிவு வேண்டும்; அதனைத் தான்குறள் மூலம் பரப்புகின்றோம்நம் கொள்கையிலே வெற்றி காண்போம்.
வணக்கம்.

மூலமும் சான்றும்