கவிதை 7 / 77

ஐம்புலன்

The Five Senses

X
ஐம்புலன்
24.3.68 அன்றுவாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் “ஐம்புலன்”என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில்கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதை முன்னுரை
பகைவர்க்குத் தாழாமல் படைகண்டு வீழாமல்பல்லூழி வாழ்கின்ற தமிழ் எடுத்துப் பாடவந்தகல்லூரிப் பெருமன்றில் இருக்கின்ற பெரியோரேபேரன்பு கொண்டோரே நல்இளஞ் சிங்கங்காள்தாயன்பு தழைக்கின்ற நெஞ்சோடு ஏற்றிடுவீர் என் வணக்கம்!
மெய் வாய் கண் மூக்குச் செவியென்று ஐம்புலன் பற்றிக்கவியரங் கொன்று அமைக்கின்றோம்ஐய நீ வருக என்று அன்பர் ரகுமான் அழைத்திட்டார்....வாயால் சொன்னார் கவியரங் கென்றுஎனைக் கவியெனக் கொண்டாரே யென்றுமெய்யெலாம் சிலிர்க்க, மெய்யா என்றேன்.கண்சிமிட்டி ஆமென்றார். கேலியோ என்னவோ?பின்னர் அவர் போட்ட கடிதமொன்றுபீடித்துப் பார்த்தேன். கண்ணால்தான்!பாடுதற்கு வா என்றே மீண்டும் அழைப்பு
கார் விபத்தில் அடிபட்ட மூக்கினிலே சிறுசிகிச்சை;போவதற்கு ஆமோ என்று பேசாதிருந்தேன்....விடவில்லை என் தோழர்.விடுவிடெனத் தொலைபேசி மணி அடிக்கச்செவியினிலே ரகுமானின் குரல் கேட்டேன்.வாயால் அழைத்து மெய்சிலிர்க்க வைத்துக்கண் பார்க்கக் கடிதம் அனுப்பிகலைஞரின் மூக்கினிலே நோய் எனினும்முக்காலும் விடமாட்டேன் எனச்செலவு நோக்காமல்செவிகுளிரத் தொலைபேசிக் கூப்பாடு போட்ட பின்னர்நான் வராவிட்டால்தாக்காமல் இருப்பீரோ நீவிர் எனப்பயந்துபூக்காமல் இருக்கின்ற கவியரும்பு கட்டிக்கொண்டுகாலை யரும்பு என் கவியரும்பு ஓடிவந்தேன்மாலைவந்தால் மலருமென்றே நம்பி வந்தேன் மாலையிலே!
அழகுநிலா ஒன்றிருந்தால் அல்லிமொட்டு மலருமென்பர்;இங்கு ஐந்தாறு நிலா அழகுக் கவிகள் நிலா இருப்பதாலேநான் அள்ளிவந்த அரும்புகூட மலருமன்றோ?மலராவிட்டால் நிலவின் குற்றம்எனைக் கவியென்று நினைத்தோர் குற்றம்வண்ணமிகு குன்றங்கள் இருக்கின்ற வடார்க்காட்டில - என்எண்ணமெலாம் இனிக்கின்ற நட்புக்காட்டும் முல்லைக் கொம்மைஇன்னலொன்று எனக்கென்றால் துடித்திட்ட தோழருண்டு:அந்தக் கன்னல்நிகர் ‘முல்லை’க்கு!வருவதென்றால் அடங்காத அதனாலே அருகில் வந்தேன்.
ஆடி அடங்கிடும் மெய்யென்பார்பாடி அடங்கிடும் வாய் என்பார்
தேடி அடங்கிடும் கண் என்பார்வாடி அடங்கிடும் மூக்கென்பார்நாடி அடங்கிடும் செவியென்பார்இந்த ஐம்புலன் அடக்குதல் நன்றென்பார்!அஃதெங்ஙனம் முடியும்?பைம்புள் பாட்டை மறுக்குமோ செவியும்?பைங்கிளித் தழுவலை மறுக்குமோ மெய்யும்?பழந்தமிழ் பேச மறுக்குமோ வாயும்?பலாச்சுளை நிலவை மறுக்குமோ கண்ணும்?பனிமலர் நறுமணம் மறுக்குமோ மூக்கும்?
ஐம்புலனை அடக்குதற்குத் தவம் புரிந்தஅண்டமா முனிவரெல்லாம் அப்பாடா; எப்பாடு பட்டு விட்டார்....அரசுகட்டில், மணிமகுடம் அனைத்தும் துறந்துஅடவியிலே துறவியாக இருந்திட்டார், விசுவாமித்திரர்;அவர் மேனகையின் விசுவாச மித்திரராய் ஆனகதை அறியீரோ?அதுபோலக்கண், செவி, மூக்கு, வாய், மெய் புலன் ஐந்தும்கடிவாளமில்லாத குதிரைகளாய்க்காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடக்கண்ணிருந்தும் குருடாய்க் - காதிருந்தும் செவிடாய்ப்-புண்பெற்ற மெய் - புலம்புகின்ற வாயோடுபோக்கற்று நின்றிருந்த அருணகிரி வரலாறும் அறிந்திடுவீர்.
எதுவும் ஒரு அளவாக இருத்தல் வேண்டும்அதுவும் மிக நிலையாக இருக்க வேண்டும்.என்பதற்கு இரண்டு கதை சொன்னேன்.கத்தியுளது கரத்தில் என்று;குத்திடவும் செய்யாதேபுத்தியுடன் அதனாலே பழமறுத்துத் தின்றிடவும் தயங்காதேமுத்தியடைவேன் என்றுஐம்புலனை இயக்காமல் இருப்பதுபோல் நடிப்பதும் சூது
ஐம்புலனை அவிழ்த்துவிட்டுக் கோயில்மாடாய்த் திரிவதுவும்ஐம்புலனில் ஆளுக் கொரு ‘புலன்’ எடுத்துஅரங்கேற வந்தவரே ஒரு வார்த்தை!தீது! அது கிடக்க
இந்தக் கல்லூரி அரங்கினில் கவியை ஏறவிடுவோர்அவர்தம் பொருளே பெரிதென்பீர்;கவிஞர்களே! நீங்கள் எடுத்த பொருளே பெரிதென்றுவாதிடும்போது ஓர் எச்சரிக்கை!மெய் பெரிதானால் ஊரார் யானை என்பர்கண் பெரிதானால் கோட்டான் என்பர்மூக்கு பெரிதானால் குடமிளகாய் அன்றோவாய் பெரிதானால் வாயாடிப் டமுண்டுசெவி பெரிதானால் முறம் என முனகிடுவர்அதனாலேஅளவறிந்து அவரவர் பொருளைப் பேசிடுவீர்
வம்பென்றால் விலக்கிடுவேன் - கவிஞரிடைவம்பென்றால் களித்திருப்பேன் - தமிழ்க்கம்பெடுத்துச் சொற்சிலம்பம் ஆடிடுவீர்;கவி அம்பெடுத்துத் தாக்கிக் கொள்வீர்:அதே நேரம் கனிந்த அன்பெடுத்துத் தாங்கிக் கொள்வீர்!
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்றுஐந்தின் வகை தெரிய விரித்துரைப்பீர்பகை பழி வெற்றி வீம்பு பாட்டினிலே வைத்துநகை நட்பு நாம் என்ற உணர்வு நெஞ்ச ஏட்டினிலே வைத்துஎழுந்திடுவீர் போருக்கு!சின்னச்சேவல் சண்டை: காசுக்குமன்னர் போடும் சண்டை; நாட்டுக்குநீங்கள் போடும் சண்டை; பாட்டுக்குநாங்கள் காணும் சண்டை: தமிழுக்கு
முதலில் மெய் எனும் பொருள் பற்றி
நெய்யொழுகும் கவியொன்று பெய்திடுவார் சாகுல் அமீதுஅவர் என்ன சொல்வார்?மெய்யின்றிக் கண்ணில்லை மூக்கில்லைவாயில்லை செவியில்லை.மெய்தானே அனைத்துக்கும் ஆதாரமென்பர்.அது மெய்தானே?அதாவது அவர் அப்படிச் சொல்லப்போவது மெய்தானே?அவர்க்குத் துணையாக வள்ளுவரும்“மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்” என்றார்.மெய்யா பொய்யா எனும் வாதத்திடையேகொய்யாக் கனி சுவைப்போம்.சற்றுக் காத்திருப்போம்.சாகுல் அமீதின் தமிழ் கேட்போம்:
(கவிஞர் சாகுல் அமீது ‘மெய்’ பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;முருகுசுந்தரம் சேலத்துக்காரர்-உருகாதோ அங்கிருக்கும் இரும்பென்றுஒருமாதம் இருமாதம் ஓராண்டு பத்தாண்டல்ல -கருவாகிக் காங்கிரசார் ஆட்சிசெய வந்தநாள் தொட்டுஉருகுகின்றோம் நாமெல்லாம்; அவர் மனமோ உருகவில்லை!தேனிரும்பு; உருகாவிடினும் தான்கற்ற தேன் தமிழால்நமதுள்ளம் உருகும் வண்ணம் பாடுதற்குமுருகுசுந்தரம் வருகின்றார்....வாயின்றிப் பாடுதல் முடியாதென்று வழக்குரைப்பார்-முடியுமா என்று என்னைத் தீர்ப்புக் கேட்பார்....நான் திகைப்பேன்;
தீர்ப்பையும் வாயால்தானே சொல்லவேண்டும் என்பார்!ஏன்; தீர்ப்பைக் கையாலும் எழுதிக் காட்டலாம் என்பேன்.
நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்எனும் வள்ளுவர் கருத்தை நண்பரின் வாய்க்குஅவலாய்த் தருவேன்.அவர் வாய் பற்றிப் பாடிடுவார்; நாம்வாய் பொத்திக் கேட்டிடுவோம்வாய்தானே உணவருந்தும் வாசல் என்று:
(கவிஞர் முருகுசுந்தரம் ‘வாய்’ பற்றிப்பாடி முடிக்கிறார்.)
தலைவர் கலைஞர்:
அடுத்து;கண்பற்றிப் பாட அரங்கின் கண் வருகின்றார் ராசேந்திரன் -என்கண் இவர் கவிதை கண்டதுண்டுஅவை, தேன் சீனி கற்கண்டுவாய்ச் சொற்கள் என்ன பயனுமிலகண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின்என வாதாடப் போகின்றார்...வள்ளுவரும் அவர் குறளில் ‘கண்’ என்ற சொல்லுக்கேமிகுந்த இடம் தந்துள்ளார்;கூற்றமோ? கண்ணோ? ஒரு குறளில்-கொடும்புருவம் எனத் தொடங்கி இவள்கண் எனமுடியும் ஒரு குறள்-இருநோக்கு இவளுண்கண் உள்ளது எனப் பறைசாற்றும் பிறிதோர் குறள் -மலரன்ன கண்ணாள் மற்றோர் குறள் -கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு
இப்படிப் பல்வேறு குறட்பாக்கள் இவர்பக்கம் இருப்பதால்எப்படித் தீர்ப்பு நான் கூறுவேன் என்று நினைக்காதீர்!இந்த ஐம்புலனிலும் சிக்காத மூளையாலேசிந்தித்துக் கண்திறந்து தீர்ப்பளிப்போம்அதுவரையில் கண்மூடி இவர் கவிதை இன்பத்தில் மயங்கி நிற்போம்.
(கவிஞர் ராசேந்திரன் ‘கண்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;தமிழன்பன் மூக்குடைக்கப் போகின்றார்இரு கண்ணுக்குத் தேவையுள்ள கண்ணாடியைஇடையிலுள்ள மூக்குதான் சுமந்தபோதும்மூக்காடி என்று பெயர் வேண்டாம்.கண்ணாடி என்றே இருக்கட்டும் என்று விட்டுத்தந்தபரந்த உள்ளம் ஆத்தாடி எப்படித்தான் வந்ததுவோமூக்கிற்கென்று முரசறைவார் போருக்கு!மோப்பத்தால் அனிச்சமலர் குழைய வைக்கும்மூக்கென்றார் வள்ளுவரும்மூக்கின்றி மூச்சில்லை; அதனாலேதன்பக்கம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று நண்பர் கேட்டால்நான் வாயாலே மூச்சுவிட்டுக் காட்டிடுவேன்...
மூக்கு பற்றிப் பாடுகின்ற தோழருக்கு முன்னாலே நிற்காமல்அவர் கவிதைப் போக்குபற்றி எண்ணிடுவோம்-பாக்கு வைத்துத் திருமண அழைப்புத்தான் தந்திடுவர்;இங்குப் பாக்கு வைத்துத் தமிழ்மணம் பருகவன்றோ அழைத்துள்ளார்-பருகிடுவோம்:
(கவிஞர் ஈரோடு தமிழன்பன் ‘மூக்கு’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;அலைபாடுங் கடல் போலக்கலைபாடும் மாமல்லபுரம் போலக்கவிபாடும் பொன்னிவளவன் இருக்கின்றார்....காவிரியின் வளவன் கரிகால் வளவன்கரிமேனி வளவன் இவர்; ஆனால்கம்பீரத் திருமேனி வளவன்.....‘செவி’ பற்றிச் செப்பிடவே வருகின்றார்.
செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாம் தலைஎன்ற குறள் காட்டி வெற்றிப் பரிசு கேட்டிடுவார்உண்மையது; வாதத்துக்காக! ஆனால்....கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப,வாய் மொழிந்தால்தானே செவியேறி அது செல்வமாகும்என நான் கூறிப் பிழைத்துக் கொள்வேன்நடக்கட்டும் அவர் வாதம்நம் செவியேறி இனிக்கட்டும் செந்தமிழ் கீதம்!செவிமடுப்போம் உம் கவிதை வருவீர் ஐயா!வந்துவிட்டார் வளவன்நான் சொன்ன நிறம் காண்பீர் கவித்திறம் காண்பீர்எம் இருவரையும் இணைத்துப் பார்ப்பின்இருவண்ணக் கொடி காண்பீர்...
(கவிஞர் பொன்னிவளவன் ‘செவி’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர் முடிவுரைக் கவிதை:
பாவலர்க்குப் பட்டாடை போர்த்தும் நாட்டில்மெய் வாய் கண் மூக்குச் செவியென்று - தமிழ்
நெய்து நமக்கெல்லாம் பட்டாடை போர்த்திவிட்டார்ஒன்றையொன்று தாக்கி உறுமுகின்ற பாட்டெல்லாம் கேட்டிருந்தோம்;சண்டையிட்டால் கொன்றையணி செஞ்சடையில்சந்திரனும் கங்கையுமே சிவனார்க்குத் தலைவலிதான்ஆனால் என் தலை (மை)யில்கவிச்சண்டை களச்சண்டை:தமிழ்க் கற்கண்டை இணைத்த சண்டை!
மெய் பெரிது என்றவரோ வாயின்றி வாழ எண்ணார்வாய் பெரிது என்றவரோ செவிடாக இருக்க ஒண்ணார்கண்ணழகு என்றவரோ மூக்கழகு குறைக்கத் துணியார்மூக்கழகு என்றவரும் கண்ணின்றி முட்டிக்கொள்வேன் என்பாரா?
இவை அத்தனையும் அமைந்தவரே அவையேறிப் பாடி நின்றார்ஆகையினால் இது வீண்வம்பா என்றால்.இல்லை வீணைத் தமிழ் வம்பு;அறிவைச் சாணை பிடிக்கின்ற வம்புஇந்த வம்பு நாடெங்கும் நடைபெற்றால்புலமை மிகும்; புதுமை தோன்றும்;தமிழுக்குப் புதிய வாழ்வு வரும்;தொடர்ந்து செய்வீர் இந்தத் தூய பணி!மூக்கினிலே மூச்சு போகும் வரையினிலேமுத்தமிழ்க்குத் தொண்டு செய்வீர்!போனபின்னும் புகழாலே தமிழ் காப்பீர்கண்கொண்டு காண்பதனைத்தும் கவிதையாக்குவீர்எழுச்சிக் கவிதையாக்குவீர் அதனைச் செயல்படக்
கடமை தொடக்குவீர் கடமை தொடக்குவீர்!செவியில் நல்லது கேட்டு - அல்லது விடுத்துச்செந்தமிழர் நலம் பாட வாய் திறப்பீர்!ஒன்று சொல்வீராயினும் நன்று சொல்வீர்! நான்உரைத்திட்ட இவையின்றி இருப்பதற்கேஉடல் என்றால் அது மெய்யல்ல பொய்யே ஆகும்.
வணக்கம்.

மூலமும் சான்றும்