கவிதை 6 / 77
விடுதலை வீரர்கள்
Freedom Fighters
விடுதலைவீரர்கள்
15.8.67 அன்று திருச்சி வானொலியில்"விடுதலை வீரர்கள்"என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதை முன்னுரை.
★
இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்றஎன்னுயிர் அண்ணன் அன்னையர் தந்தையர்பொன்னொளிச் சோதரர் புகழ்மிகு பாவலர்கண்மணித் தமிழின் காவலர் யாவரும்இற்றைத் திருநாள் ஏற்பீர் வணக்கம்.
ஆகா...சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே?வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது?சோழர் உலவிய சோர்விலா நாட்டில்கோழைக் கொள்கை குவிந்த தெவ்விதம்?வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில்.குடித்திடுவோம் உயிர் கொடுத்திடுக நாட்டை!
விடுதலை வேண்டாம் எனும் வெறும் உபதேசம்நரிகளின் ஊளை.நாட்டு வெறிபிடித்த காளைகளேகிலிபிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்புலிவாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம்என்று சிலிர்த்துப் பொங்கி எழுந்ததமிழகம் தந்த விடுதலை மறவர்கமழ் மணப் பாவில் மீண்டும் பிறந்திடவானொலி நிலையம் வழங்கிய அழைப்பால்வந்துளர் தாய்கள்: தலைவன் நானாம்!
விழிகளில் வீரம் சிரித்திடும் தமிழர்விடுதலை கீதம் பாடிய கதையைக்கவிகளின் மொழியில் கேட்டிட எழுவோம்கண்களில் ஒத்திக் கால்மலர் தொழுவோம்.முதலில் ....முடக்கடா விடுதலை ஆர்வம் என்றார்அடக்கடா சுதந்திர அனலை என்றார்அவரை எதிர்த்து,முழக்கடா முரசமென்று அதிர்ந்திட்ட சிங்க ஏறுசழக்கரால் சாவில் வீழ்ந்த சரித்திரம் கேட்டிடுவோம்;வானம் பொழியுது பூமி விளையுதுமன்னவன் காணிக்கை ஏதுக்கடா?ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகைமாண்டிடும் புழுவே மகுடம் கழற்று!இப்படிக் கனல் கொட்டும் பெருமூச்சுகட்டபொம்மன் உயிர்மூச்சு - முழக்கயிற்றினிலே ஆறியதால்
கயத்தாறுத் தலம் என்போம்.அத்தலத்து வரலாற்றைத் தருகின்றார்அள்ளி உண்போம்.
(திருச்சிற்றம்பலக் கவிராயர் கட்டபொம்மன்வரலாற்றுக் கவிதை பாடி முடிக்கிறார்.)
தலைவர் கலைஞர்:
செத்துவிட்டான் கட்டபொம்மன் என்றிருந்தோம்; மீண்டும்பெற்றுவிட்டார் இந்தச் சிற்றம்பலம்; வாழ்க நன்று.அவ்வழியில்அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெறுவதற்கு அன்னையர்கள்இருக்கின்றார்எடுத்தணைத்து மகிழ்ந்திடவே ஆவலுடன் நிற்கின்றோம்.கெடுதலையைத் தருகின்ற அடிமை நீங்கிவிடுதலையைப் பெறுவதற்கு, என்மகனேகொடு தலையை எனச்சொன்னாள் அன்னையென்றுகொடுத்து விட்ட புலிமக்கள் மருதிருவர்தொடுத்துவிட்ட சுதந்திரப் பூமாலையிலே மணமானார்;விடுத்துவிட்ட அம்புபோல் வேகம் காட்டித்தணலில்பழுத்துவிட்ட சொல் எடுத்துப் பாப்புனைந்துநடமாட விடுகின்றார் மருதிரு சோதரரைநடராசக் கவிராயர் மிக நன்றாய்:
(கவிஞர் தி.கு.நடராசன் மருதுபாண்டியர்வரலாற்றுக் கவிதை பாடி முடிக்கிறார்).
தலைவர் கலைஞர்:
இருமருதை இங்கழைத்து வீரத்திருமலியும் வரலாற்றைத் தந்திட்டார் நம் நண்பர்
இருமருதும் ஒரு மருதாய்ப் பிறந்திட்டபெரும்புலவன் பாரதியைக் காட்டுதற்குத் திருமுருகுசுந்தரக் கவிவாணர் முனைகின்றார் கேட்போம்.
"பழைய நடை, பழங்கவிதை, பழந்தமிழ் நூல்பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தாரில்லை.அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னைஅறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்கனிந்தபடித் தோலுரித்துச் சுளைத் தமிழால்கவியளித்த சுப்ரமண்ய பாரதியார்-நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலாகாடு மணக்க வந்த கற்பூரச் சொற்கோ"
என்றெல்லாம்ஆடும் மயில் தமிழ் என்முன் எனஆடவைத்த பாரதிதாசன் பாடுகின்றார்;இவரென்ன பாடுகின்றார். பார்ப்போம்.
(கவிஞர் முருகுசுந்தரம் பாரதி பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
நீர் வீழ்ச்சி போலன்றோ நிமிர்ந்த கவி பாரதிக்குப்பாவோச்சிப் பொழிந்துவிட்டார் - நன்று நன்று.ஒருநீர்விழ்ச்சி சேட்டையினால்பேரதிர்ச்சிப் பெரும்புயலைத் தமிழ்நாடு தாங்கிற்றந்தோ!வ.வே.சு. அய்யரெனும் வாய்மைகொள் செயல்மறவர்ஆவேச நீர்வீழ்ச்சிச் சுழலில் சிக்கிஅன்றொரு நாள் மாய்ந்துவிட்டார்இன்றொரு கவிஞர்அவர் எழுப்ப வந்துவிட்டார்.சுவர் எழுப்பிச் சுதந்திரத்தை அடைத்துப் போட்டுச்சுற்றி நின்று பாதுகாத்த அன்னியரின் படைகெடுக்கஇவர் எழுந்தார், இடையில் மறைந்தார்இதோ மீண்டும் வருகின்றார்.அழகொழுகும் அப்துர் ரகுமானின்அருமை மிகு செந்தமிழால் உயிர்பெற்று:
(கவிஞர் அப்துர் ரகுமான் வ.வே.சு. அய்யர் பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
மூத்த குடிப்பிறந்த மூதறிஞர் வாழுகின்ற தமிழகத்தில் புகழ்யாத்த குடிப்பிறந்த வ.வே.சு. அய்யர் கண்டோம்விடுதலை உறுதி
ஏற்ற குடித்தோன்றல் - எழில்தூத்துக்குடிக் கடல் மீது கப்பல்விட்ட ஏந்தல்
“திருவும் புகழும் சிறந்தன பிறவும்மருவற நிற்கும் என் மாசிலா மனைவியே!என்னரும் உயிரினும் என்னுயிர் உளத்தினும்மன்னுறப் பாதியை மகிழ்ந்துனக் களித்தேன்பின்னுறப் பாதியை பெரிய நம் தேயத்தின்தன்னடிக் களித்தேன் சத்தியம் இஃதே!”
இந்த அகவற் பாவால் அகத்தினைத் திறந்ததகவுடை மேலோன் தமிழர் தலைவன்வளஞ்செறியும் வ.உ.சி. பற்றிப் பாடஇளஞ்செழியக் கவி நண்பர்இனிய தமிழ்ச் சொல்லால் இங்கு வருகின்றார்;இதயம் உறை நல்லார்:
(கவிஞர் இளஞ்செழியன் வ.உ.சி. பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரைக் கவிதை:
சிறை வாழ்ந்தார் செக்கிழுத்தார் - இந்தத்தரையாண்ட வெள்ளையரை விரட்டுதற்குக்குறை ஆயுள் பெற்று பலர் கொலையும் உண்டார்.உறை மீறி வெளிவந்த கத்தி போலஉயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்;அவர் பெருமை கூறுதற்கு அணிவகுத்த இந்த நாளில்விடுதலைக்கு உயிரீந்த எவர் பெருமை கூறுதற்கும்இவர் போலக் கவி வளத்தைப் பெற்றேனில்லை;கவிதை பாடக் கற்றேனில்லை
தளையறுத்த வீரர் கதை பாடுவதால்தளையகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர்தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால்தொடை தட்டும் என் பாட்டும்!
என் கவிதை,யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - நம்நாடு,மொழி, மானம், உணர்வெல்லாம்.காப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்கை யொன்றால்வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்கக்காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல்நெஞ்சில் ஊறுகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக்கொள்கை மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று சொல்வேன்:
எத்தனை உயிர்கள் எத்தனை ரத்தம்நித்தமும் தந்து பெற்றது விடுதலை!இத்தரை குடைந்து மெத்தவும் உழன்றுபத்தரை மாற்றைப் பெற்றபின் அதனைக்கைத்திறம் காட்டி அணிநகை பூட்டிச்சித்திரப் பெண்டிர்க் களித்திடலன்றிக்குப்பைக் குழியில் போடுதல் நன்றோ?புட்கள் கூவிடும் சோலையின் நடுவேமுட்கள் கீறிடப் பறித்த நல் ரோஜாகட்கம் ஏந்திய வீரர் முடியில்வெட்கம் ஏந்திய மாதர் குழலில்இருந்திடல் மணமா? அதனைத்துட்டக் குரங்கின் குறுகிய கையில்கொடுத்திடல் நலமா?
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்;பெற்ற மறவர்க்குப் பெருமைகள் சேர்ப்போம்.உற்றார் சுற்றம் ஒருவர் இருவர்உயர்வுடன் வாழ்தல் சுதந்திரம் ஆமோ?
கற்றார் கல்லார் கழனியில் உழல்வோர்சிற்றாள் கொல்லர் சிறுதொழில் செய்வோர்மாதர் நல்லார் மாணவ மணிகள்தீதறு வாழ்வில் திளைத்தலே சுதந்திரம்.
இந்தக் கொள்கை இனிது விளங்கமந்தக் கொள்கை மாய்ந்து விலகசந்தத் தமிழில் ஒலிப்போம் இன்று.தங்கக்குன்றே தமிழே தாயே; உன்சிங்கப் புதல்வரின் சிறப்பினைச் சொன்னோம்எங்கும் தமிழகம் வெற்றி விளைத்திடஇங்கு நீ எமக்கே அருள்வாய் அம்மா!
வணக்கம்!வாழ்க!
✤