கவிதை 20 / 77

நன்றி, நன்றி!

Thank You, Thank You!

X
நன்றி, நன்றி!
(சேலம் பொருட்காட்சியில் 1.8.71 அன்று நடைபெற்ற‘கண்ணோட்டத்தில் கலைஞர்’ - கவியரங்கில்கலந்து கொண்டு தனக்களிக்கப்பட்ட பாராட்டுக்குநன்றியாக மேடையிலேயேஉடனே இதை எழுதிப் பாடினார்கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.)
என்னை இந்தக் கவியரங்கில் தந்தையென்றும்,தாய் என்றும், குழந்தையென்றும்,தலைவனென்றும், சேவகன் என்றும்,காதலி என்றும், காதலன் என்றும்குறிப்பிட்டுக் கவிஞர்கள் பாடினார்கள்.அவர்கட்கு இந்த நன்றிக் கவிதை வரிகளைக்காணிக்கையாக்குகிறேன்.விழாத் தலைவர் வேழவேந்தன்விழுமியதோர் பார்வையிலேகாலைமுதல் இங்கு விரித்து வைத்தார் கவிதைச் சந்தைகவிஞர் கண்ணப்பன் எடுத்துரைத்தார் பாட்டில் தந்தை.கத்து கடல் அலைபோல் கவியைத் தந்தாய்முத்துலிங்க இளம்புலவ என் தாயை மீண்டும் தந்தாய்.ஆரா அமுதன் வாயால் - நான்
தீரா விளையாட்டுக் குழந்தையானேன்!என்னையும் ஓர் தலைவன் என்று - கரும்பொன்னிகர் காமராசத் தலைவர் பெயர் கொண்டார்மின்னிடும் தமிழால் இங்கோர் காமராசன்ஏற்றுக் கொண்டார்சேவகப் பையனாக என் வீட்டில் பணிபுரிந்த அவிநாசி மணிக் கவிஞன்இன்று என்னையேசேவகன் என மாற்றிப் பாடிவிட்டான் -என்ன காலம்!அருகினில் என் துணைவியார் அமர்ந்திருக்கக் கண்ட பின்னும்முருகு சுந்தரிக்கு என்னதான் துணிவோஎன்னைக் காதலிக்க?பிரிந்து போய்ப் பல திசையில்திரிந்துழன்று மனம் திருந்தியேவிரைந்து வந்து வீடடைந்த - என்காதலன் எனும் கண்ணதாச! நீகோவலன் போல் சிலம்புவிற்கப் போகவேண்டாம்கழகக் கண்ணகி நான் என்று முனைக்காத்திடுவேன்.கலங்கற்க!
நன்றி! நன்றி! நன்றி!அனைவர்க்கும் என் நன்றி!

மூலமும் சான்றும்