கவிதை 19 / 77

நேரு கண்ட ஜனநாயகம்

Democracy as Nehru Saw It

X
நேரு கண்ட ஜனநாயகம்
14.11.1970 அன்று சென்னையில் ‘நேரு கண்டஜனநாயகம்’ என்ற தலைப்பில்நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை
தங்கக் குணம் படைத்த நாவலரேதகைமைசால் அமைச்சர்களேசங்கத் தமிழ் எடுத்துக் கவி பாட வந்திட்ட புலவர்களேசான்றோரேவணக்கம் ஏற்றிடுக!வங்கக் கடலருகே உறங்குகின்ற நம் அண்ணன்அடிதொழுது தொடங்குகின்றேன் தலைமையுரை;புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்அன்னை மடி சுகம் அளிக்கசென்னை நகர் ஒளி தெளிக்கமுன்னை இருள் விலக்குதற்குமுயல்கின்ற தமிழ் அரசுமுதுபெரியோன் காந்தியாரின்மூத்த பிள்ளை நேருவுக்குமுத்தமிழால் கவி தொடுக்கும்;
புவியரங்கில் புகழ்குவித்த பண்டிதர்க்குக்கவியரங்கில் மாலை சூட்டும்.பூத்திருக்கும் தோட்டத்தில் புகுந்துவிட்ட என்றனுக்குக்காத்திருந்த காட்சியொன்றைக் கவியாக்கித் தருகின்றேன்;சிரிக்கின்ற மல்லிகையின் காதுகளில் செண்பகம்தான்ஏதோ சேதி தனைச் சொல்ல;சேர்ந்திருவர் சாமந்தியிடம் ஓடிஅவள் செவியில் வாய் வைத்தார்; பின்னர்மூவருமே முல்லையிடம் முனகிவிட்டு அவளோடுநால்வருமே நந்தவனம் முழுவதும்நடைபோடத் தொடங்கி விட்டார்.யாரைத்தான் தேடுகின்றார் பூப்பெண்கள்? கட்டுதற்குநாரைத்தான் தேடியலைகின்றாரோ - என எண்ணி நான்வியந்தேன்.தென்றலிலே மணம் பரப்பித் தேடுகின்றார் தேடுகின்றார்தெரியவில்லை யாரை என்று!“முழங்காலை வலிக்குதடி” என்றாள் முல்லை.“சிவந்ததடி என் பாதம்” எனச் செண்பகம் இளித்தாள் பல்லை.சாமந்தி மல்லிகை இருவர்க்கும் பெருந்தொல்லைபூங்காவின் மூலையொன்றில் புலம்பல் ஒலி கேட்டவுடன்பூப்பெண்கள் “அதோ அதோ!” எனச் சொல்லிஅந்த இடம் பறந்திட்டார்“பூமானே! புகழ்க்குன்றே! போனாயோ என் தலைவா?கோமானே! கொள்கை வேந்தே! உன்னைக்கொள்ளையிட்ட கூற்றெங்கே?எனையெடுத்து முத்தமீந்து இதயத்தில் ஏற்றிக் கொண்டாய் -இன்றுஎனைவிடுத்து நீ மட்டும் நெடுந்தெலைவு போய் விட்டாய்என்ன நியாயம்?இதழுக்குத் தேன் தருவாய் - பதிலுக்கு
நான் தருவேன் மறந்தா விட்டாய்?மார்பகத்தில் அணைத்திருப்பாய்மகிழ்ச்சி வெள்ளம் கரை புரளும்மங்கையென்னைப் பிரிவதற்கு உன் மனம்தான் கல்லோ?”எனக் கதறும் ஒலி கேட்டுஇனிய நறும் பூப்பெண்கள் அருகே சென்றார்மடைதிறந்த வெள்ளம் போல் கண்ணீர் கொட்டிமயங்கிவிழும் நிலைமையிலே ரோஜா நின்றாள்மல்லிகை முல்லை அருகே சென்று“என்னடி ரோஜா இன்னமும் அழுகை?நல்லவர் இருந்தார் நானிலம் வாழவல்லவர் இருந்தார் வாரி அணைக்கபோனது வருமோ? புலம்பலை நிறுத்து!பூக்களின் ராணி! புன்னகை காட்டு!”ஆறுதல் கூறினார்; அழகு ரோஜாதேறுதல் பெறாமல் தேம்பியழுதாள்.“இரவு உமிழும் எச்சில் என்பேன் பனித்துளியை - என்இறைவனது முத்தம் அமுதம் என்பேன்அன்றமுதம் தந்தெனுக்கு ஆசை காட்டிஇன்றென்னை எச்சில் பனித்துளியில்நனைத்து விட்டார்; என் செய்வேன்?முடிசூடா மன்னரவர் இனி என்னைச் சூடார்என நினைக்கும் போதெல்லாம்முள்ளாக குத்துதடி மேனியெல்லாம்!வாழ்வில் சிரிப்பில்லா எனக்கு இந்தச் சிவப்பெதற்கு?மனத்தில் மகிழ்வில்லா எனக்கு நறுமணந்தான் எதற்கு?இந்தியச் சிம்மாசனத்தில் அவர் இருந்தார் - அவர்இதயச் சிம்மாசனத்தில் நானிருந்தேன்உறங்குகின்றார் விழித்தெழுவார்; படிஇறங்கி வந்து பாவையெனை அழைப்பதற்குள்அவர்நெஞ்ச
அரங்குதனில் ஆடுதற்குச் சிவப்பாடைபுனைந்து நின்றேன்அதற்குள் காலக்குரங்கின் கை ‘மாலை’யாக ஆகிவிட்டார்;என் வாழ்வை இரவாக ஆக்கிவிட்டு!போய்விடுங்கள் எனை விடுத்துத் தனியாகபுனிதனவன் பிறந்தநாளில் கண்புனலை அவன்காலடிக்குக் காணிக்கையாக்குதலேஎன் கடமை”ரோஜாவின் சொற்கேட்டுச் சோர்ந்து போனேன்; தன்ராஜாவின் பிரிவாலே வாடுகின்ற அவளையெண்ணிப்பேசாமல் திரும்பி விட்டேன்; இன்றென்மனைவி கூந்தல் மணம் வீசாமல் போகட்டுமென்றுமலர் எதுவும் பறிக்காமல் வந்துவிட்டேன் - இன்றுமலர் பறித்தால்; அது மாவீரன் நேருவுக்குமாலை தொடுத்திடவே! நம்மடி பறித்துச் சுதந்திரத்தை அபகரித்த வெள்ளையரின்கொடி பறித்து விடுதலைக் கொடி பிடித்த கொள்கை வீரன்அடி கொடுத்தால் வாங்கிக் கொண்டுஅடக்குமுறை தாங்கிக்கொள்ளஅண்ணல் வகுத்த வழிஅயராதுழைத்த சிங்கம்!இளமையின் எழிலை இருட்டுச் சிறையில்கழித்த தியாகி!எண்ணையிட்ட கடுகாய் வெடிக்கும் கோபம் எனினும்எண்ணையிட்டார் விடுதலை வேள்விக்கென்போம்!பணமலைக்கிடையே பிறந்தார் எனினும் ஏழையை அணைக்கும்குணமலையாகத் திகழ்ந்தார் என்போம்!பணியின் விரைவைப் பம்பரம் என்பர்பண்டிதர் பணியோ பம்பரம் தோற்கும்
இடி இடிக்கும் பேச்சில் - இளமைத்துடி துடிக்கும் எழுத்தில் - தேன் ஒருபடி இனிக்கும் பண்பில் - அதிர்வெடி முழக்கும் செயலில் - விடாப்பிடியிருக்கும் குணத்தில் - விடுதலைக்கொடியிருக்கும் கையில் - கொஞ்சம்முடியிருக்கும் தலையில் -(இங்கென்ன வாழ்கிறதோ? எனக் கேட்காதீர் எனைப் பார்த்து)நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்நேர் நின்று எதிர்த்ததாலே நேரு வானார்.... இந்தியநீள் எல்லைக் கோடு தன்னைப் பெரும்பகைவர் கடந்த போதுஎன்னநேருமோ என்றேங்கி இருந்த மக்கள்நெஞ்சின் துயர் துடைத்து, எதுவும்நேராது நான் இருக்குமட்டும் எனச் சொல்லி நேருவானார்.துணிவிருந்தால் உள்ளத் தூய்மையிருந்தால்துன்பம் நேருமா? எனக் கேட்டார் குழந்தையிடம்இன்பமே நேரும் மாமா என்றது பிஞ்சும் பூவும்-இதனால் நேரு மாமா’வானார்.மதம் கடவுள் நம்பிக்கை இவைகளிலேஅவர் கொள்கை தனி எனினும் பிறர்மனம் புண்படாமல் நல்வழியில் ஆட்சி செய்தார் தன்மரணத்தின் பின்னாலே மதச் சடங்கு வேண்டாமெனத் தக்கதருணத்தில் உயிலெழுதி உலகிற்கு ஒளி செய்தார்நடுநிலைத் தன்மை நலமெனக் கொண்டுநானிலம் போற்ற நமது பூங்குன்றனார் நவின்ற“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மொழிக்குத்தோதாய்க் கொள்கை தொகுத்தே சொன்னார்.
காலத்தின் கோலம் காட்டுக்கு ராஜாவாய்க் கர்த்தபம் ஆகும்ஏலத்தில் சில பேர் கோபுர உச்சியில் குந்திக் கொள்வர் இந்தியஞாலத்தின் தலைவராய் ஜவகர் ஆனது இவ்விதமல்ல! அவர்சேலத்து மாம்பழம் - சென்னைக் கடற்கரை-கொற்கை முத்து - கொள்ளேகால் பட்டு-தஞ்சைக் கோயில் - தண்புனல் காவிரி-தறியில் காஞ்சி - தடந்தோள் பாண்டியன்-கருத்தில் மாறுதல் இருந்த போதிலும்-காலமானார் நேரு என்றதும்கண்ணீர் உகுத்தார்கலங்கி அழுதார்காராக்கிரகம் கிடந்த அண்ணா!கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!படை துள்ளி வரும் - பகைஅள்ளி வரும் - எரிகொள்ளி வரும் - கரும்புள்ளி வரும் - சீனக்கள்ளி வரும் - எனச் சிலர்எள்ளி வரும் போது - விடிவெள்ளி வரும் எனப் - பகைகிள்ளி எறிந்தான் - இன்று திருப்பள்ளி அயர்ந்தான் - நேரு-திருப்பள்ளி அயர்ந்தான்!“வாய் மடித்துக் கிடந்த தலைமகனை நோக்கிமணியதரத் தேதேனும் வடுவுண்டாயோ?” எனத்தாய் அடித்து மோதி அழும் காட்சிகளைப்பேய் ஆட்டம் போடுகின்ற போர் முகத்தைநாய் நரிகள் தீனி தின்னும் கொடுமைக் கூத்தைக்காய், பழம், பூ, பிஞ்சு, சாய்ந்து விழும் சமர்க்களத்தை - நம்
கலிங்கத்துப் பரணி சொல்லும். அந்தக்கலிங்கத்தில் அமைதி பூண்ட அசோக மன்னனகண்டெடுத்த அறவழியில் உலகு காக்க நேரு பிரான்கழுகுகளின் இறக்கை வெட்டி வெண்புறாவைப்பறக்கவிட்டார் விண்ணின் மேலே!“தலையாகிய அறமே புரிசரி நீதி உதவுவாய்சமமே பொருள் ஜனநாயகம்எனவே முரசறைவாய்” இதுஅலை மோதிடும் புதுவையின்கலைமேவிய பாவலன் - நம்நிலை மாறிடப் பாடிய காவியம்!ஜனநாயகம் ஜனநாயகமென ஜவகரும் முழங்கிடச் - சிலர்தம்தனிநாயகம் சிறந்திடச் செயல்பட்டதை மறந்திடோம்!பணநாயகம் கணநாழியில் தகர்ந்திடக்குணநாயகர் நேருவும் உடன் முனைந்திடக்காலந்தான் போதவில்லைகாலமுமே பொறுக்கவில்லை!என் கவிதை இனிமேலும் நீண்டு விட்டால்காலம் பொறுக்காது கவிஞர்களும் பொறுக்கமாட்டார்அதனாலே முடிக்கின்றேன் முதற்கவியை அழைத்துவிட்டு!பெண்ணுரிமை பற்றிப் பாடுதற்குப்பெரிதும் விருப்பமுற்ற ஆண் கவிஞர்மண்ணுரிமை காக்கும போர்ப் படைக்குத்தெள்ளு தமிழ் எடுத்துத் திறன் கவிதைப்பள்ளு பல தந்திட்ட மறக் கவிஞர்படையல் உரிமை மட்டும் -பெற்றுள்ள பெண்ணுக்குப்படையில் உரிமை வேண்டுமென்க!
உடையில் மட்டும் புது உரிமைஒப்போம் என்று கூறிடுக!சுதந்திரக் கவி வாணரே - என்சுந்தரக் கவி வாணரேசுவையான பாட்டப்பம் தந்திடுகஅவையோரும் வீட்டப்பம் போல் உண்டிடுக:
(கவிஞர் எஸ்.டி. சுந்தரம் ‘பெண்ணுரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;பேச்சுரிமை கேட்கின்றார்பாட்டுக்கிடையே அவர் எப்போதும்பேசுவது பழக்கம் தானே... அதனாலேகவியரங்கில் தனக்கு மட்டும்பேச்சுரிமை கேட்கின்றார்!ஏச்சுரிமை கேட்கின்றார் சில பேர் இன்றுஅதனாலே தமிழ்ப் பண்பாட்டின்மூச்சுரிமை போகுமென்று அஞ்சுகின்றேன். நேரம்ஆச்சு; உரிமை தருகின்றாயா இல்லையா எனஅன்பர் சுப்பு கேட்கும் வரை தராதிருந்தால்அது என்றன் தப்பு!கொத்தமல்லிக் கொப்பு குழம்பினிலே மணக்கும்-கொத்தமங்கலம் சுப்பு குழம்பாமலே மணக்கும்:
(கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு ‘பேச்சுரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;எழுத்துரிமை என்னிடத்தில் கோருகின்றார்என் நிலையை அவர் அறியார்பரப்பிரம்மம், தூக்குமேடை, கலைஒளி வழங்கும் உதயசூரியனாம் இப்படிப்பல எழுத்தைப் பறி கொடுத்து.... அதன்தலை எழுத்தால் தடை செய்யப்பட்ட கதை இவர் அறியார்ஆயினும்; எழுத்துரிமை என்னிடமே கேட்கின்றார்உரிமை தரும் இடத்திலே நான் இருக்கின்ற காரணத்தால்முருகு சுந்தரத்தைக் கவி எழுத முடுக்குகின்றேன்வந்திடுக - தமிழ்த்தேன் சிந்திடுக:
(கவிஞர் முருகுசுந்தரம் ‘எழுத்துரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;ஆக்கமுள்ள சொல் நயமும் காவிரி யாற்றுப்போக்கனைய நடை வளமும் தூயநோக்கமும் நுண்ணறிவும் கொண்டுபாக்களைக் கோக்கின்ற பாவலராம் ரகுமான்!அவர்வாக்குரிமை கேட்கின்றார் இப்போதுபெற்றுக் கொண்டு எனக்கேதான்அளிக்க வேண்டுமெனச் சொல்லமாட்டேன்சொன்னாலோ அதன் பெயர் வாக்குரிமை ஆகாதன்றோ?வந்திடுக நண்பரே!
வழங்கி விட்டேன் வாக்குரிமை; நீர் பாடும்பாட்டுக்கு வழிச் செலவு தந்திடுவோம்ஒட்டுக்கு மட்டும் ஒரு தொகையும் கேட்காதீர்:
(கவிஞர் அப்துர் ரகுமான் ‘வாக்குரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;அரசென்று சொன்னாலும்; ஆர்க்கின்றமுரசென்று சொன்னாலும் தவறல்ல! கவிவிரச நடைக்காரரிடைச்சரசமாடி வந்தாலும்உரசுகின்ற நட்பாலே ஒப்பரிய பாசமுடன்அரசுப் பொறுப்பேற்ற அடியேன்பால் மீண்டும்வந்தார் கவியரசுவந்தவுடன் சொத்துரிமை கேட்கின்றார் - பாவம்நொந்த மனம்! இவர்சொத்துரிமை கேட்பதிலும் நியாயம் உண்டு பிள்ளைகள்பத்துப் பன்னிரண்டுபோகட்டும் அளித்துவிட்டேன் சொத்துரிமைபெருக, வருக, தருக
(கவிஞர் கண்ணதாசன் ‘சொத்துரிமை’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
பாட்டரங்கில் பாவலர்கள்கேட்ட உரிமை வழங்கிவிட்டோம்
நாட்டுநிலை தொட்டறிந்துநல்லுரிமை பேணிக் காக்கஉறவுக்குக் கை கொடுப்போம் - நம்உரிமைக்குக் குரல் கொடுப்போம் - எனமுழங்கிக் கலைந்திடுவோம்-முழுமனிதன் நேருதனை வணங்கிடுவோம்.
வாழ்க!

மூலமும் சான்றும்