கவிதை 18 / 77
கணக்கு
Arithmetic
கணக்கு
2.8.1970 அன்று சேலம் தமிழ்ச் சங்கத்தின்ஆதரவில் 'கணக்கு' என்ற தலைப்பில்நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை
★
ஏலம் போல் மணக்கின்ற இன்தமிழைச் சுவைப்பதற்குச்சேலம் நகர்தனிலே மொய்த்திருக்கும் வண்டுகளே!ஆலம் விழுதுபோல் ஆசுகவி பாரதிக்கும் பாரதிதாசனுக்கும்சீலமுடன் அமைந்துவிட்ட செங்கரும்புக் கவிஞர்களே!கோலம் செய் துங்கத் திருமுகத்துத் தூமணியாம் நண்பர் கணபதியார்ஞாலம் பெய் தமிழ் மழைக்குச் சங்கம் கண்டுஓலமிடு கடலலைபோல் ஓயாமல் தமிழகத்தில்காலமெலாம் பணியாற்றச் சூளுரைத்துச் சுற்றுகின்றபம்பரமாம் என்றனையும் பிடித்திழுத்து- என் கவியாற்றல்அம்பலமாய் ஆக்கிவிடத் துணிந்து விட்டார்.கம்பனும் கூத்தனும் இருந்த காலத்தில் கண்டவர் எல்லாம்கவிகள் எனத் திரிவதற்கு இடமேயில்லை - இந்தக்கருணாநிதி முதலமைச்சாய் இருக்கின்ற காரணத்தால்ஒரு நாளும் என் கவிதை இடித்துரைக்க யாருமேதுணியவில்லை அதுவரையில் லாபம்தான்
அடியேனும் அதனாலே துணிந்து விட்டேன்கணக்காக ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்திடுகதாமதமாய் வந்துவிட்டுப் பின்தளுக்காகப் பேசிடுதல் தவிர்த்திடுகஎனச் சொல்லாமற் சொல்லி எனை அழைத்திட்டார்கணக்குப்பற்றிப் பாட்டரங்கு என்றதனால் எதிலும்கணக்காக இருக்கின்ற நானும்எனக்காக மட்டுமின்றி என் கவிக் குடும்பம்தனக்காகவும் வாங்கிடுவேன் வழிச் செலவுகணக்காக! கவலற்க; கவிஞர்களே!கணக்குதான் முன் காலம்கல்வியிலேயே முதலிடம் பெற்றதனால்கணக்காயர் என்றே கழறினார் ஆசிரியரை.கணக்குகள் பலவிதம்கணக்குப் பார்ப்பவரும் பலவிதம்பாட்டாளியின் வியர்வையிலேமுதலாளி பார்ப்பதுதான் பணக்கணக்குகூட்டாளி தன் அன்புக்குக்கூலியொன்று கேட்பதுதான் பதவிக் கணக்குபாவையவள் பாக்கி விழும் கடனுக்குஅடுக்களையில் கரிக் கோட்டால் கிழிப்பதுதான்பால் கணக்கு; தயிர் கணக்குபாவம் - பிள்ளை; பள்ளியிலே தப்பிக்க வேண்டுமென்றுபெற்றோர் போட்டுத் தருவதுதான் வீட்டுக் கணக்குபாவபுண்ணியம் பாராத அரசியல் மேதையெலாம்பாமர மக்களிடம் போடுவதோ ஓட்டுக் கணக்கு!மந்தையிலே மாட்டுக் கணக்கு -ஆட்டுக் கணக்கு -மொந்தையிலே மட்டும் போடாதே கணக்கு!ஆடிக்குத் தை ஒரு வருடம்; ஆக மாசம் பதின்மூன்றுக்குநூற்றுக்கு வட்டி நூற்று மூணு
ஆகமொத்தம் ஐநூற்று மூணு!அட்டியின்றிக் கொடுத்திடுக நம்ப கடனை!'செட்டிமார் சீமையிலே வட்டிக் கணக்கு!பைந்தமிழ்ச் செல்வமாகும்-பதினெண் கீழ்க் கணக்கு!கணக்குப் பிள்ளை செய்வதும் கணக்கு - ஒரு பெண்ணைமணக்கப், பிள்ளை செய்வதும் கணக்கு!இந்தக் கணக்கில்இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லல் மணக்கணக்குஇருபது பதினெட்டைக் கூட்டிச் செல்லல் காதல் கணக்குஇரண்டுக்கு மேல் இப்போது வேண்டாம் குடும்பக் கணக்குஇதில் குசேலனுடன் போட்டியிடல் கொடுமைக் கணக்கு!தான் போட்ட கணக்குத் தவறியதால்தற்கொலையை முத்தமிட்டான் இட்லர் என்போன்!மான் போட்ட கணக்குகளை வேங்கை அழித்துவிடும்ஏன் போட்டாய் தப்புக் கணக்கென்றுவேங்கையினை வேடன் வீழ்த்திடுவான்இதுதான் உலகு!சாண் போட்டால் எட்டிருக்கும் இவ்வுடலில் கணக்கின்றிநாண் போட்டுக் கட்டியதால் நகருகின்றோம்தேன்போட்டுப் பேசுகின்ற நாக்கொன்று கணக்காகஇருந்தாலும்திறமையினால் இரண்டாக ஆக்கிக் கொண்டு திரிகின்றோம்இரு கரத்தைக் கணக்காக நமக்கெல்லாம் வழங்கிவிட்டுஇறைவன் மட்டும் பலகரத்தை பாரமாய்ச் சுமப்பதேனோ?நல்லவேளைகணக்கின்றிக் கரங்கள்தமை மனிதர்க்குப் படைத்திருந்தால்கள்ளநோட்டு அடிக்கும் ஓர் கைகலப்படம் செய்யும் ஓர் கைகன்னியரை இழுக்கும் ஓர் கை
காட்டிக் கொடுக்கும் ஓர் கைகளவுதனை நடத்தும் ஓர் கைகத்திதனை ஏந்தும் ஓர் கைகழுத்தறுக்கத் துணியும் ஓர் கைஇன்றைக்கு தனித்தனியாய்இவ்வேலை நிகழ்வதாலேஇருக்கின்ற காவல் துறையாரும்இவரையெல்லாம் அடக்குகின்றார்:இல்லையேல்-வகை வகையாய் முளைத்திருக்கும் கைகள் எல்லாம்கொலை கெலையாய்ச் செய்து விட்டுக்கூத்தடிக்கும்! நாடு கொந்தளிக்கும்!கணக்காக வாழவேண்டும் மனிதர் என்றேஆற்றிலே போடினும் அளந்து போடென்றார்.கணக்கின்றி ஏதுமில்லை!கால் வைத்தார் நிலவில் என்று கம்பீரமாய்க் குரலெழுப்பக்கணக்காகச் செலவு எத்தனைக் கோடி; விஞ்ஞானக்கணக்கினிலே சிறு தவறு விளைந்திட்டாலும்கால் வைத்தா திரும்பிடுவர்? விண்வெளியில்கால் வேறு தலைவேறாய்ச் சிதறியன்றோ போயிருப்பார்!கணக்கின்றி என் கணவர் முத்தமீந்தார் என ஒருத்திகட்டிலோரம் ஒலிப்பதிவு செய்திருந்தால்அதற்கும் ஓர் கணக்கு உண்டன்றோ?அதனாலே; கணக்கின்றி ஏதுமில்லை!நானும்.... காலக் கணக்கின்றிக்மொழிந்திட்டாலும்கவிதை வரி கூறிக்கொண்டே இருந்துவிட்டால்கணக்குப் பற்றிப் பாடவந்த கவிஞருக்குக் கோபம்
கணக்கின்றி வந்தாலும் வந்துவிடும்!அதனாலே அழைக்கின்றேன் அவர்களையே;முதலில் பெருக்கல்;காற்றின் பெருக்கல் புயலாகும்நாற்றின் பெருக்கல் பயிராகும் இனியசாற்றின் பெருக்கல் சுவையாகும்ஆற்றின் பெருக்கல் புனலாகும் முருகுபாட்டின் பெருக்கல் என்னாகும்?பொன்னாகும் பூவாகும்புதிய கவியாகும்!சேலமாநகர் தனக்கு எத்தனையோ சிறப்புக்கள்!சேலமா? நகர்! என்றார் இரும்புத் தொழிற்சாலை கேட்டபோது!இன்றுசேலம் மாநகராய் ஆவதற்கு இரும்புக் கனி தந்துவிட்டார்சேர்வராயன் மலைக் கனியும்சேலத்து மாங்கனியும்செந்தமிழர் பெற்று மகிழ்ந்தாலும் என்செம்மாதுளைக் கவிக்கிணையோ எனக்கேட்கும் என் நண்பர்முரகு சுந்தரனார்பருகிடவே தமிழ் தருவார்!உருகும் திருவாசகத்திற்கு நெஞ்சென்பார்இவர் வாசகமும் அவ்வாறேஅன்பரே முருகு!ஆடிப் பெருக்கு நாளைக்கு; இப்போது நீர்பாடிப் பெருக்குமய்யா:
(கவிஞர் முருகுசுந்தரம் ‘பெருக்கல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கழித்தல்;விழித்திருக்கும்போதே வீட்டினுள் புகுந்து விட்டுப் பின்விழித்திடுவான் கள்வன் திருதிருவென்றே! விளையாட்டெனவேமொழிந்திடுவான் அகப்பட்டுக் கொண்டால்!இவன் போன்றார் செயலையெல்லாம் முழுமூச்சாய்ஒழித்திடவும், தீமைகளை அழித்திடவும் தீவிரமாய்ப்பழித்திடவும், வாழ்நாளைப் பயனுறவேகழித்திருக்கும் என் நண்பர் தமிழண்ணல்‘கழித்தல்’ பற்றி, இன்பங் கொழித்திருக்கும் செந்தமிழில் தேன்குழைத்துக் கூட்டிச் சுவைபெருக்கி நலம்வகுத்திடுவார்; காலத்தை வீணேகழித்திடாமல் அன்னார்க்கு வழித்தடத்தை ஒதுக்குகின்றேன்!வருக, வழங்கிடுக:
(கவிஞர் தமிழண்ணல் ‘கழித்தல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து வகுத்தல்;வகுத்தல் எனும் கவியமுதம்தொகுத்தளிக்க வரும் புலவர் - நபிகள்வகுத்த நெறிவாழ் கவிஞர் - விஜயன்வில்லிலே விளையாடுவதில் வீரன் என்பார் - இவரோசொல்லிலே விளையாடும் தமிழ் வீரர்வெற்றிபல கண்டு நான் விருதுபெற வரும்போதுவெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால், அப்துர்ரகுமானைத் தருக என்பேன்அவர் பாடுகின்றார் இப்போது:
(கவிஞர் அப்துல் ரகுமான் ‘வகுத்தல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கூட்டல்;கழித்தல் கணக்கில் இருந்த கண்ணதாசன் இன்றுகூட்டல் கணக்கில் இணைந்துவிட்டார் நம்மோடு;சேலத்தில் சேர்ந்த நண்பர் நாங்கள்! மீண்டும்சேலத்தில் சேர்வதற்கு யார் தயவு வேண்டும்?கவியரசென்று என் தோழர்தம்மை அழைக்கின்றார்!எனக்குக் கோபம்யான் அமைச்சுதானே; இவர் அரசன்றோ?அரசராக இருந்தாலும் இவர் என் ஒற்றர் என்பேன்ஐயிரண்டு பத்தாண்டு ஐயா இவர் மாறுவேடம் பூண்டுமாற்றார் படை வீட்டைச் சுற்றி வந்தார்இன்று மறுபிறவி எடுத்து இங்கு வந்தார்குயில் என்று பறக்கவிட்டேன் பாடி வரகோட்டான்கள் கூட்டத்தில் குயில்பாட்டு எடுபடுமா?கூப்பிட்டுக்கொண்டேன் என் தோட்டத்திற்கே!தோட்டம் வந்த குயிலே! என்தோளில் தொத்தும் கிளியே!கூட்டல் கவிதை ஆர்த்துக்களிப்பில் எம்மை ஆழ்த்து:
(கவிஞர் கண்ணதாசன் ‘கூட்டல்’ பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
கூட்டலும் கழித்தலும்வகுத்தலும் பெருக்கலும்கூட்டணி அமைத்திடும்குலவிக் கொஞ்சிடும் எனவே நம்பிக்கொடுத்தோம் வாக்கை! ஆனால்
இந்தக் கூட்டணிவம்பில் கூட்டணி எனினும் தமிழில்தங்கக் கட்டணி, தளராசிங்கப் பாட்டணி!எது பெரிது? கூட்டலா? கழித்தலா? பெருக்கலா? வகுத்தலா?எனக் கேட்கும் கேள்விக்கு - திருக்குறளொன்றை மாற்றிப் போட்டுத்தெரிவிக்கின்றேன் புதுத் தீர்ப்பு:“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்தது ஒழித்து விடின்” இது திருக்குறள்.“வகுத்தலும் பெருக்கலும் வேண்டாவாம் கூட்டலும்கழித்தலும் ஒழித்து விடின்”இது என் தீர்ப்புக் குரல்!
வணக்கம்;வாழ்க!