கவிதை 17 / 77

வாழ்வெனும் பாதையில்

On the Path Called Life

X
வாழ்வெனும் பாதையில்
14.4.70 அன்று சென்னை வானொலியில்"வாழ்வெனும் பாதையில்" என்ற தலைப்பில்நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை
வணக்கம்வந்திருக்கும் அனைவர்க்கும் - கவிவடித்தளிக்கும் புலவர்க்கும் வணக்கம்நித்திரையில் ஆழ்ந்திருந்த நீள்வையம்நீலவிழி ஒளிகாட்டி நடைபோட்டுமுழுமூச்சாய் ஆண்டுபல உருண்டுருண்டுமுத்திரைகள் பலவற்றைப் பதிப்பதற்குசித்திரைத் திங்களிலே சிரிக்கின்றசெழுமை கண்டோம் - பெருமை கொண்டோம்சௌமியதான் சென்ற ஆண்டு நம்சௌமியனைத் தமிழர்க்குத் தந்த ஆண்டுசௌமியாவை அண்ணனுமே புனைப்பெயராய்ப் - பூண்டுசுவை சொட்டக் கதை குவித்துப் போனார் - மாண்டு!'சௌமியா' மறைந்து, 'சாதாரண' வந்தது போல்-அந்தச்
சௌமியன் மறைந்து இந்தச் சாதாரணன் வந்துள்ளேன்அரங்கின்றி வட்டாடுகின்றார் அரசியலில் பலபேர்.குரங்கின்றிச் சேட்டைகள் ஏராளம் காண்கின்றோம் சமூகத்தில்சிரங்கொன்றைச் சொறிந்து விட்டால் பலவாய் ஆகும்.தரங்குன்று மனிதரையும் கடிந்து கொண்டால் அவ்வாறேதான்!இந்நிலையில் இச்சாதாரணன்புவியாள வந்தாலே பொறுப்பதில்லையென்னும் போதுகவியாளவும் வந்து விட்டால் என் கதிதான் என்னே?அவிசொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வோன்அந்நாள் ஆள்வோன்.கவி தெரிந்து ஆயிரம் பாடல்கள் புனைவோன்இந்நாள் ஆள்வோன்.பொறுக்குமா மனம்?அடுக்குமா இது?தடுக்கலாம் இதை!அடக்கலாம் உடன்!தகர்க்கலாம்! கைமுறிக்கலாம்! கால்முடக்கலாம்! எனப்பலர்முனகலாம்! ஆனால்"இருள் விலகிப் பொழுது விடியுமா?ஏழைக்கின்னும் உதவிட முடியுமா?" என்று இந்தச்சாதாரணன் சிந்திக்கின்றான்.பூதாகாரப் பேயிருள் விலகிவிட்டால்தீதான தனியுடைமைப் பற்றற்றுச்சீரான பொதுவுடைமைத் தத்துவங்கள்ஏராளும் மனிதர் வாழ்வில்தாராளமாயெங்கும் தங்கிடுமே - எனச்சாதாரணன் சிந்திக்கின்றான்வாழ்வெனும் பாதையை வளப்படுத்த
வன்முறையால் ஆகாதெனல் எம் கொள்கைதாழ்வு உயர்வெனும் பேதம் நீங்கத்தண்ணொளி சேர் அமைதி தேவை.புரட்சியெலாம் மனப்புரட்சி!கிளர்ச்சியெலாம் உளக்கிளர்ச்சி!எழுச்சியெலாம் எழுத்தில் பேச்சில்!எண்ணமெலாம் சமதர்மம் செயல்படுத்த!இவையிருந்தால் என்றைக்கோ வந்திருக்கும்ஏற்றமிகு பொற்காலம் - புதுமைக்காலம்.வாழ்க்கையென்பது என்னவெனஉணர்ந்த மனிதன் இருக்கின்றானா?பறவையும் விலங்கும் ஊர்வன மற்றும்"உயிர் வாழ்கின்றன" என்போம்.பகுத்தறிவு மனிதன் வாழவில்லை; அவன்வாழ்க்கையை நடத்துகின்றான் என்போம்.நடத்துகின்றோம் நாம்தான் வாழ்க்கையை என்றநம்பிக்கையில்லான் மனிதனே அல்ல; ஏதோகடத்துகின்றோம் நாளை என்றுநகர்த்துகின்றனர் பல பேர் வாழ்வைஇருவர் தெருவில் சந்திக்கும்போது"என்னப்பா சுகமா?" எனக் கேட்பின்"ஆமாம் சுகந்தான்" என்ற பதில் வந்திடுமோ பகர்ந்திடுவீர்!"ஏதோ இருக்கின்றேன்" என்றிழுத்துஏக அலுப்பில் பதில் அளித்து நகர்கின்றார் நண்பரை விடுத்து!ஏனிந்தச் சோர்வு வாழ்க்கையிலே? இதழ்த்தேனீந்த மனைவி பொய் என்பார் அவட்குத்தானீந்த குழந்தை பொய் என்பார்'ஆ' நீந்த வேண்டுமே சம்சாரக் கடல் என்பார்எப்போது இதெல்லாம் எனக் கேட்டால்
தப்பாது வயது சொல்வேன்; எழுபதுக்கு மேல்தான்!பாவம்இருபதுக்கும் முப்பதுக்குமிடையில் கூடஇன்பமெனில் பேரின்பந்தான் என நவிலும்இளந்துறவி உண்டே என்பீர்இதில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே எனக்கு ஐயம்!இவரெல்லாம் பஞ்ச புலன் அடக்கவில்லைஇவர்க்குப் புலன்தான் ஒன்றிரண்டு பஞ்சமென்பேன்இன்னும் சிலரோ;அனைத்தும் பொய் என்று பகலில் கூறிஅனைத்தும் உண்மையென இரவில் சொல்வார்வாழப்பிறந்தவன் தான்மட்டுமென்று.தாழப்பறந்து மீன்கொத்தும் பறவை போல்-வலியோர் சிலர் எளியோர் தமைவதையே செய்தல் வாடிக்கையாம்;திருந்திச் செயல்படுதல் அவர்க்கு நன்று! அல்லால்திருத்துகின்ற சட்டங்கள் திருத்திவிடும்;தீயர் கொட்டம் நிறுத்திவிடும்.குட்டக் குட்டக் குனிகின்ற குப்பனுக்கோகுலதெய்வம் துணையென்ற நினைப்பினிலேகுனிந்து குனிந்து கூன் மேவும்;கூனன் நிமிர்வதற்கே மருந்துகள்கூடிய விரைவில் வரும். அவன்,குலதெய்வம் விளக்கேற்றும் புதுவீட்டில்!இனிக்கின்ற சர்க்கரையைக் குழந்தைக் கூட்டம்அள்ளி அள்ளி வாயில்நிறைக்கின்ற காட்சிதனைக் கண்டிருப்போம்.சுவைக்கின்ற இன்பத்தை அளவறிந்துநுகராமல்... மாடுமிதிக்கின்ற சேறுபோல் ஆக்குகின்றார்சிலபேர் தம் வாழ்வை!
வேண்டிய மட்டுமே உணவருந்தி மகிழும் வேங்கை -பசிதாண்டிய பின்னும் மான்களை விழுங்கி மயங்கும் பாம்பு!காடகத்தில் இரு காட்சி கண்ட பின்னும் - வாழ்வுநாடகத்தில் நடிக்கின்றோர் கற்கவில்லை - என்ன செய்ய?ஆறிலும் சாவு நூறிலும் சாவுஆனது ஆகட்டுமென்றுஅறப்போர் புரிவோன் அரிமா வீரன்;ஆறிலும் சாவு நூறிலும் சாவுஆனது ஆகட்டுமென்றுஅயராதின்பம் அனைத்தும் துய்ப்போன்.வீரனே அல்ல; விலங்கினும் கீழோன்!தன் வீடு-தன் மனைவி-தன் பிள்ளை-தன் சுற்றம்என்றிருப்போன் நடத்துவதும் வாழ்வல்லஎம்நாடு -எம்உரிமை - எம்மொழியாம்-அனைத்தும் காக்கஎன்னாலே இயன்றதெலாம் செய்திடுவேன்என்போன்தான் பொதுமனிதன்!ஆதலால்மதுவுண்ட வண்டுபோல் தேன் குடத்தில் மிதந்திடாதீர்எதுவேண்டும் எனக்கென்று துறவி மொழி' புகன்றிடாதீர்எல்லாமே எனக்கென்று ஏழைகளைப் பிழிந்திடாதீர்!வாழ்வென்னும் பாதையிலே வழிகாட்டும் பலகைகளாம்கலையும் கல்வியும் கவிஞர்கள் காட்டுவர்பதவியும் பக்தியும் பாவலர் விளக்குவர்புகழும் செல்வமும் புலவர்கள் பொழிவர்முதலில் கல்வி;கற்றது கைம்மண் அளவென்பர்கற்றவர்க்குக் கையில் மண்கல்லாதார்க்கோ தலையில் என்பேன்!கைமண்ணால் பானை வனைவர்
தலைமண்ணோ சூளைக்கும் ஆகாதே!'இளமையிற் கல்' என்றால்இளமையிலே கல் எடுத்து எறிதல் என்றுஏன்தான் சிலபேர் பொருள் கொண்டார்?கல்விசிறந்தவர் கம்பர் என்பர்கல்வியிற் சிறந்தவர் வம்பராதல் தீதன்றோ?
முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதோர் எனில்-கற்றவரோமுப்பத்திரண்டு புண்ணுடையராய் விளங்கல் ஏனோ;சிந்தித்தீரா!கல்லூரி கண்டவன் நானல்ல எனினும் என் கையில்கல் ஊறியதில்லை எப்போதும்!கவியூறும் நெஞ்சில்கலையூறும் கொஞ்சம்புவியேறப் புகழேறும்தமிழூரை ஆள்வதற்குத் தமிழில்கற்றது போதுமென்றுஉற்றவர் சொன்னதாலேஒப்பினேன் உளமின்றி - இன்றுதப்பினேன் உம் தயவால்!வாழ்வெனும் பாதையிலேவறட்டுக் கதைபேச நேரமில்லை:வளமான 'கல்வி' பற்றிவந்திருக்கும் புவியரசு பாடக் கேட்போம்.
(கவிஞர் புவியரசு 'கல்வி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து பதவி;அடவியிலே ஆயுள் வரை இருப்பதுவும் பெரிதல்லகுளவி நுனிக் கொடுக்கினிலே இதழ் பொருத்திவலிபொறுப்பதுவும் பெரிதல்ல - இந்தப்
பதவியிலே இருப்பதுதான் பெருந்தொல்லை கச்சியேகம்பனே!கோபுரத்தின் உச்சியிலே இருக்கின்றேன் என எண்ணிக்குடல் கருகும் பேர்வழிகள்கோபுரத்து மாடத்தில் கூடு கட்டி வாழ்கின்ற புறாக்கூட்டம்கொண்டிருக்கும் மகிழ்வுகூட எனக்கில்லை என அறிந்துகூறிடுக அனுதாபம்! கொண்டிடுக நட்புணர்வு!பதவியெனும் கொடுங்கத்தி சிலபேரின் கழுத்தறுக்கும்; பிறர்க்குஉதவி புரிவதற்கே பதவியெனப் பொறுப்பேற்றால்உயிர் பறிக்கும் கத்தியாலே பல உயிர்கள்காத்திடவும் கூடுமன்றோ?பழமறுக்கும் கத்திதான் பதவியென்போம்பழிவாங்கும் வாளாக இருத்தல் கேடு!சிரஞ்சீவியாய்ப் பதவியில் இருப்போமென்றுசெருக்குமிகக் கொண்டலைந்த லூயி மன்னன்சிரம் சீவிப் போட்டுவிட்டுப் புத்தாட்சி கண்ட கதைமறக்க மாட்டோம்.அறங்கூறும் வள்ளுவர்க்கு வாய்த்த நல் தொண்டர்களால்புறங்கூறல் புறக்கணித்துப் புவியாண்டால் - நம்திறங் கூறப் புலவர் கூட்டம் திரண்டு வரும்தேசம் வாழ்த்தும்உடும்பு போல் பதவியிலே ஒட்டிக் கொள்வோன்உடும்பு வேண்டாம் கை விட்டால் போதுமென்பான்கரும்பு போல் இனிக்குதென்று கடிக்கத் தொடங்கிக்கரிக்குதப்பா உப்பாகஎனக் கழன்றோர் உண்டு!பதவி பற்றிப் பாடுதற்குப் பாவலராம் ரகுமான் இருக்கையிலேபலவரிகள் நானேதான் படிவிட்டேன் - இதுபதவியிலே உள்ள மோகமல்ல;பாட்டினிலே உள்ள மோகமென்பேன்நாட்டினிலே நற்கவிகள் பெய்துவரும்
நம் நண்பர் ரகுமானின் நாவெல்லாம்பதவித்தேன் சொட்டுவதைப் பார்த்திடுவோம்பதவிதனைப் பதம் பிரித்தால்"ப" கரம் நீங்கி - தவி! தவி!! என்று சொல்லும்;தவிக்கின்றோம் அதனாலே பதவி என்றால்!பாடட்டும் அவர் பாட்டை;பிறகு பார்ப்போம்:
(கவிஞர் அப்துர் ரகுமான் 'பதவி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து செல்வம்;"செல்வோம் செல்வோம்" என்று உருண்டுசெல்லுவதால் 'செல்வம்' என்பார், பண்டிதர்கள்சீமான்கள் இரும்புப் பேழையிலே'செல்' அரித்துப் போகுமட்டும் இருப்பதாலேசெல்வம் எனச் செப்புதலும் பொருத்தம்தானே!இலக்குமிதான் செல்வத்தின் தெய்வம் என்பார்இலக்குமிகள் ஒருகோடி வறுமையிலே உழல்கின்றார்செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் என்றவர்தான்பொருளிலார்க்கு இவ்வுலகமில்லையெனப் புரிய வைத்தார்செவிச்செல்வம் போதுமென்று நிறைவு கொண்டால்செவியார நாலு 'வாழ்க!' போட்டுச்சென்று வருக என்றிடுவார் வழிச்செலவு வழங்காமல்வானொலியார்!செல்வமுடையார் சீதக்காதி போல் இருத்தல் வேண்டும்செழுந்தமிழன் குமணன் போல், பாரிபோல்செகமதிலே சிரிக்க வேண்டும்செல்வமுடையார்க்கு அவர் இலக்கணம்!செல்வ 'முடையார்'க்கு
"ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல்"என்ற குறள்தான் இலக்கணம்!செந்நாப் புலவர்க்கெல்லாம் செல்வ மழை கொட்டுதற்குசிறப்புறு தமிழண்ணல் இருக்கும்போதுசெல்வமைனைத்தும் நானே தட்டிக்கொள்ளல் முறையே அல்ல!செல்வம் தருக என அழைக்கின்றேன்; தந்திடுக தமிழண்ணால்:
(கவிஞர் தமிழண்ணல் 'செல்வம்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து கலை;.........கவியரங்கம் முடிந்த பின்னர் செய்யும் வேலைகலை அரங்கை! என்பார் நன்றி கூறி!கலைத் திலகம் என்றாலோ பட்டமாகும்!கலை - திலகம்! என்றாலோ மங்கை பட்ட மரமாவாள்!கலை பிணைக்கும் அரசியலை இக்காலத்து!கலை பிணைக்கு - அரசியல் ஏது எக்காலத்தும்!கலை, பிணைக்குத் தன் நிழலை அளித்த செயல்கலித்தொகையில் காதல் காட்சிதன் நிழலைத் தானே கண்டஞ்சும் காட்சிகலையுலகில் நாள்தோறும் காணும் மாட்சிகலை குறைந்தால் மதி குறையும்காண்கின்றோம் நாள்தோறும் வானவெளியில்!கலை நிறைந்தோர் உள்ளத்தில் கருணை உண்டுகவலைகளை உணர்கின்றற பண்பும் உண்டுகண்ணீர் விடுகின்ற ஏழைதனைக் காணும்போதுகலைஞன் தான் படைத்த பாத்திரத்தைக் காணுகின்றான்கற்பனை ஓட்டத்தில் அவன் நிலையை அறிகின்றான்
கவலைதனைத் தீர்ப்பதற்குக் கடமைதனைச் செய்கின்றான்கலை கலைக்காக எனக் கதைத்தோர் ஓய்ந்து விட்டார்கவின் ஒளி வீட்டுக்காக; விளக்குக்காக அல்ல எனவிளக்கம் பெற்றார்!கலைகளிலே எத்தனையோ வகையுண்டு - தொகையுண்டுகவின்கலைநுண்கலைஆடற்கலைபாடற்கலைஆயகலை அறுபத்து நான்கு கலைவட கலை, தென் கலை தவிர!இத்தனை கலைகளையும் முத்தனைய தமிழ் எடுத்துஇவண் வழங்க வந்துள்ளார் என் நண்பர் வாலி என்பார்வாலுடையவான் வாலி என்று சொல்வது தவறென்றுகாட்டுதற்கேவாலில்லா வாலியவர் வந்துள்ளார்வாலுடையோன் வாலி என்றால்காலுடையோரெல்லாம் காலிகளோ! இல்லை இல்லை!வண்ண மணித் தமிழால்எண்ணச் சரம் தொடுக்கவந்திடுக வாலியாரே:
(கவிஞர் வாலி 'கலை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து புகழ்;கடற்கரையில் தலைநீட்டும் நண்டுகளைக் கை நீட்டிப்பிடிக்க ஓடஉடனவைகள் போன இடம் தெரியாமல் பதுங்கி விடும்;புகழும் அதுதான்!
தேடி அணைத்தால் ஓடி விலகும்கோடி கொடுத்தால் வாடி வதங்கும்மாடிகள் கண்டு மயங்காதுமூடி மறைத்தால் தயங்காதுநாணயமுள்ளவனை நத்திக்கிடக்கும்ஆணவமுள்ளவனை எட்டி உதைக்கும்தியாகியின் கால்களில் மலர்கள் கொட்டும்தீரனின் சேவடி தொழுது வணங்கும்அரியதாம் புகழின் பெருமைகள் பற்றிமரியதாசெனும் மாண்புறு கவிஞர்இனிய தாம் மொழியில்இயற்றுவார் கவிதை:
(கவிஞர் மரியதாசு 'புகழ்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து பக்தி;கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிவைத்துப் படைத்தல் பக்தி எனிலோசற்றும் ஒப்பார் ஆண்டவன் என்போர்திருத்தலம் கோயில் திருக்குளமெல்லாம்தீர்த்த யாத்திரை செய்வதும் பக்திதிருத்தலம் கோயில் திருக்குளமெல்லாம்திருமுடன் மனத்தில் நிறுத்தலும் பக்திகாலொற்றிக் கடவுள் மீது கண் எடுத்துக்கண்ணப்பன் வைத்ததுவும் ஒரு பக்திகல் எறிந்து சாக்கியரும் கடவுளையேகண் மூடிப் பூசித்ததும் மற்றொரு பக்திஎம்பெரும! சிவனே! என்று இறையைப் போற்றிஏழைகளை ஏறெடுத்தும் பார்க்காவிட்டால் எங்கே பக்தி?
ஏகலைவன் கட்டைவிரல் காணிக்கை தந்ததிலே குருவின் பக்திஏகுருவே! உன் கையைக் காணிக்கை தா! என்பதுதான் புதியபக்தி.பாவையவள் கணவனையே தெய்வமெனல் பழைய பக்தி;பாவம் அவன்; பாவையிடம் மண்டியிடல் பதியின் பக்தி;பக்தியிலே பல உண்டு அதையெல்லாம்சக்தி மிகு வார்த்தைகளால்சர வரிசை விடுதற்குமுடியரசு வருகின்றார்விரைவில் முடி! அரசு!எனச் சொல்லாமல் அழைக்கின்றேன் - வந்திடுக!
(கவிஞர் முடியரசு 'பக்தி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
வாழ்வெனும் பாதைக்கு வந்தவரேவழிகள் பல கண்டவரேகல்வி பெறுக; அதனைக் கசடறப் பெறுக!பதவி பெறுக; அதனைப் பண்புடன் பெறுக!செல்வம் பெறுக; அதனைச் சீலமுடன் பெறுக!கலை மணக்கட்டும் நும் வாழவில்புகழ் குவியட்டும் நீர் தேடிப் போகாமல்பக்தி வெள்ளம் நாடு, மொழி, மக்கள்மீது பாய்ந்தாலேஇறைவன் அருள் கிட்டி விடும்.ஏழையின் சிரிப்பில்தான் அவன் இருக்கின்றான்இதை மறவாதீர்!
வணக்கம்வாழ்க!

மூலமும் சான்றும்