கவிதை 16 / 77

பொங்கல் திருநாள்

Pongal Festival Day

X

பொங்கல் திருநாள்

12.1.1970 அன்று சென்னை வானொலியில்பொங்கல் திருநாள் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமைக் கவிதையுரை
வாவி, குளம் வாய்க்கால்கள் நீரெல்லாம்ஆவியாகி வறட்சிப் புயல் வந்துற்றுப் பயிரெல்லாம்சாவியாகப் போன நிலை கண்டுவிட்டுத் தமிழ் அரசுதாவியோடித் திடுதிடென வெப்பத்துயர் தணித்ததாலும்ஓவிய முகில் அனைத்தும் கருக்கொண்டு புவிமேவிட மழைக் குழந்தை ஈன்றதாலும்உணவுக் கட்டுப்பாடென்று முன்புஏவிய அரசாணை திரும்பப் பெற்று இன்பக்காவியத் திருநாளாம் பொங்கலன்று - அன்றைக்குக்கூவிய குயில்கள் எல்லாம் மீண்டும் கூவ - மக்கள்தூவிய மலர்மலைமேல் மாத்தமிழாள் நடந்துவர - நம்மாநிலத்து மாந்தரெல்லாம்மா, பலா, வாழையெனும் முக்கனியின் சுவையினுாடேதித்திப்புப் பொங்கல் தின்றிடவே வேண்டுமென்று எம்சக்திக்கு ஏற்றவாறு உழைக்கின்றோம்; சற்று,
புத்திக்கும் கூர்மை தீட்டக் 'கவியரங்கச்சாணைக்கல் பக்கம்வா;' என்றார் வானொலியார்இருப்பதாலே வந்துற்றேன்
புத்தி இருப்பதாலே வந்துற்றேன் புதியகூர் ஏற்றிக் கொள்வதற்கு!சீர் ஏத்திப் பாடுகின்ற செந்தமிழர்வேர் ஒற்றிக் கிடக்கின்ற பலாக் கருத்தைச்சுளை சுளையாய் எடுத்து வைக்கச் சுற்றுமுள்ளார்தளை தொடையாம் யாப்பெல்லாம் கற்றிலன் நான்வளை அணியாப் பெண் கரம் போல் வடித்தளிப்பேன்சில பாடல்
பொறுத்தருள்வீர் புலவர் ஏறேஅழகு தமிழ்ப் பொங்கல் நாளில்அன்புப் போர் முரசமெனும் தலைப்பினிலேஅறுவர் இதோ பாடவந்தீர் அய்யன்மீர்!குகனொடும் ஐவரானோம் என்றதுபோல் இந்தத் தமிழ்மகனொடும் எழுவரென எண்ணிக் கொள்க.எழுவர் நாம் இவ்வரங்கில்'எழுவாய் தமிழா' என்றேஉழவர் நாள் கொடி ஏற்றிடுவோம்!மழவர் நிலம் காப்பதற்குமார் தட்டிச் சூள் உரைத்திடுவோம்!பொங்குக பால் என்று முழங்குகின்றோம் இந்நாளில்; அதுபசும்பாலா? அல்ல; அல்ல!பைந்தமிழ்த் தேர்ப்பாகன் தந்த பால்அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்அதற்கும் அப்பால்வேறென்ன பால் பொங்க வேண்டும்?
"கன்னல் கொண்டு வா' என்றேன் சுவைப்பதற்கு—அவளோ பிள்ளைக்
கனியமுதைத் தூக்கித் தருகின்றாள்; அதுதான் இன்பம்.''வாங்கி வருக மஞ்சள்" என்றாள்! "எதற்காக? அதனைவழித்திடலாம் உன் முகத்தில்!" என்றேன்.
என் வீட்டு மகிழ்ச்சி கண்டுஎதிர் வீட்டார் இஞ்சி தின்னல் ஆகாதென்று அதனைவேரோடு பிடுங்கிப் பொங்கல்வேகின்ற பானையிலே கட்டுதலே இந்நாட் சிறப்பாம்!முட்டுகின்ற மாட்டுக்கும் பொங்கல் உண்டுமாடு பிடிக்கத் தோள்தட்டுகின்ற வீரர்க்கும் பொங்கல் உண்டு.
காளைதனை வென்றவனே எனக்கேற்ற காளை எனப்பாளை நகைப் பாவையவள் பகர்ந்ததெலாம் பழையநாளை நினைப்பூட்டும் இலக்கியமாம்.
ஒளி வரவால் இருள் மறையும்உளி வரைந்த சிற்பங்கள் பளபளக்கும்களி நடன மயில்களெலாம் கலாபம் காட்டும்தெளிதேன் தருக என இழுத்திடுவான் குஞ்சி;துளி தேன் தந்துவிட்டுப் பறந்திடுவாள் வஞ்சி!
பொங்கல் நாளில் புதுப்புது இன்பம்எங்கணும் தோன்ற எழுந்தான் கதிரோன்!எதையும் அன்பால் அணுகி வென்றிடஉதய சூரியன் உயர்ந்தான் இன்று!
பார்த்தீரோ பசுமை வெள்ளம்பச்சைப் பாய் விரித்தது போல் காட்சி என்னே!சிந்துபாடும் சிறுநதியின் சிரிப்பொலி கேள்!சீறிவரும் வனவேங்கைக் காட்டாற்றுத் தண்ணீர்மீறி வரவொண்ணுமோ அணைகள் தாண்டி!கடன் பெற்று வேளாண்மை புரிகின்ற முயற்சிக்கெல்லாம்உடன்பட்டு உறுதுணையாய் நிற்கின்ற அரசு காண்க!உரம் மலிவாய் வழங்குதற்கும் ஈகைக்
கரம் வேண்டுமன்றோ! அதனைத்தரமறிந்து அண்ணன் தந்துவிட்டே போயுள்ளார்சிரம் ஆட்டி எமை ஏற்காமல் சிலர்ஓட்டைகளைக் காட்டுகின்றார். நாதசுரம் காட்டும் ஓட்டையெலாம் நல்லிசைக்கே என்றிடுவேன்அசையும் விரலாக நீர் இருந்தால்இசையும், தென்றலாய் மாறிவிடும் இற்றை நாளில்!வான் முட்ட எழுந்து நிற்கும் ஆலையிலேதான் மட்டும் வாழுதற்குச் சிலர் இருந்தால்பேன் பிடித்த தலையாகும் நமது நாடுநான் படித்த மருந்ததற்குச் சமதர்மந்தான்அந்நிலைதான் வருதல் மட்டும்இந்நிலையில் உழைப்போர் வாழ வகைகாணல் மிகவும் நன்று!வாய் திறந்து சூளுரைப்போம் இன்றுஅதற்குபூட்டுப் போடவில்லை பொதுவுடைமைக் கொள்கைதனைப்புறக்கணித்தும் பேசவில்லை.ஏட்டுக்குள் இருக்கின்ற அக்குறிக்கோள்நாட்டுக்குள் மெல்ல மெல்ல வந்தேதான் தீர வேண்டும்.பாட்டுக்குள் பொதிந்துள்ள கருத்தெல்லாம்சமதர்மப்பரவுமுன்னே பாங்காகத் தொழில் அமைய நம் நாட்டில்கூட்டான அமைப்புகள் பெருகிடவேபொங்கல் நாளில் புதிய பாதை ஏற்றிடுவோம்!இனிய பாதையிதை இடைக்கால பாதையென்போம்; பின்னர்கனிய வைப்போம் கற்களையேஉழவரது வியர்வையினால் சூல் கொண்டகழனித்தாயின் வயிற்றில் மகளாய் வந்துஅனைவரது சீராட்டும் பெற்றுக் கொண்ட கதிராம் மங்கைமணவறையில் பெண்போலத் தலைகுனிந்துநிற்கின்றாள் பொங்கல் நாளில்
தமிழர் என்போர் மகிழ்கின்றார்;தைதை என்றே குதிக்கின்றார்!தண்ணொளி சேர்ப்பது தையன்றோ?தையல் என்றால் பெண்ணன்றோ?தைப்பதும் ஒருவகைத் தொழிலன்றோ?முள்ளாய்த் தைப்பார் சிலபேர்கள், நமக்குக்குல்லாய் தைப்பார் சிலபேர்கள்!தமிழர் என்போர் மகிழ்கின்றார்;தைதை என்றே குதிக்கின்றார்! என்னைக்கவி, தையென்றே அழைக்கின்றார்தைத்தல் எனது தொழில் அல்லபுதைத்தல் எனது தொழில் என்பேன்.தீமையைப் புதைத்தல் தீதறு செயலாம் - இயலாமையைப் புதைத்தல் இனிப்புறு தொழிலாம் - அறியாமையைப் புதைத்தல் அறிவார் தொழிலாம்ஊமைகள் வாழ உயிரைக் கொடுத்தஉத்தமன் காலில் முகத்தைப் புதைத்தல் என்றன் தொழிலாம்.பட்டா இரு லட்சம் பெற்றவர்கள் வாழ்த்துகிறார்தட்டாமல் தண்ணீர் தருவதற்கும் திட்டமிட்டுஎட்டாத பழமென்று இருந்தோர்க்கும் வளவங்கிமுட்டாது கடன் தரவே தனி முயற்சி!கிட்டாதோ அதிகாரி பார்வையென அலைந்த துயர்வெட்டாமல் வெட்டியின்று மாதமோர் நாள்கட்டாயம் சிற்றுார் சென்று மனுநீதி வழங்குகின்றோம்!பொன்சாரம் இட்டழைக்கும் பூமான்கள் வீட்டுக்கேமின்சாரம் போகுமென்ற நிலைமாற்றிஎழுபத்திரண்டுக்குள் எங்கணுமே மின் இணைப்புஎன் தமிழ்த் திருநாட்டில் ஏற்படவே உழைக்கின்றோம்!இவையெல்லாம் புகழ்ந்துரைத்துப் பொங்கல் நாளில்தொகை தொகையாய் மாலை வேண்டாம்; பரிசு வேண்டாம்:அவைப் புலவீர்; அழகுறவே ஓர்பாட்டு நீர்பாடின்
பகைப் புலம் ஒழித்த பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்பேன்.குகைப் புலியை முறத்தாலே எதிர்த்த நாட்டில்திகைப்புற்று நிற்போமோ வன்முறையை வீழ்த்திக் காட்ட!புகைக் கருத்துப் போக்கிவிட்டுப் புதுக்கருத்துப் போற்றிடுவோம்பொங்கல் நாளில்! கிழங்களின்சிகை கருத்தால் சாயப் பூச்சென்று சொல்வோம்; - பொய்யர்தம்மிகைக் கருத்தை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளல் தீதேயன்றோஇலக்கியங்கள் பயின்ற நல்லோர் இன்தமிழ் செய்கவிதை வல்லோர்இருமூன்று தலைப்புகளில் கவிகள் பாடிதரும் ஊன்று கோலாகத் தந்திடுவார் தமிழர் வாழ!தன்னலப் பேராசைதான் உட்பகைக்கு ஆணிவேராம்;வன்முறையும் வளர்ந்துவிடும் கிளைகளாக!ஒற்றுமையின்மையினால்உதயமாவது தான் ஏற்றத் தாழ்வாகும்!இத்தனைக்கும் அறிவின் வறுமைதான் காரணமாம்; எனப்புத்தரது எண்ணங்கள் தந்திடுவார் சத்தனைய நற்கவிஞர்!வறுமைதனை விரட்டிடவே இயக்கம் காணஅருமைமிகு நேரமென்பார் சிலபெரியோர்எருமையன்றோ வேகத்தில் வறுமைப் பேயும்?எட்டடி கொடுத்தால் எடுத்தடியும் வைத்திடாதே!விரட்டினால் திரும்பி வரும்மிரட்டினால் மீண்டும் வரும்வாய்மைக்குறட்டினால் பல்பிடுங்கி வீழ்த்திவிட்டால்புரட்டினாலும் எழுந்திடாத உடலாகும் உயிரற்று;வறுமையிலே கற்பனைகள் செழிக்குமென்பார்;முத்து முத்தாய்க் கவி பிறக்கும் என நவில்வார்;சத்தி முத்தப் புலவரையும்சாத்தக் கவிராயரையும்நித்த நித்தம் அலைகின்ற பாணரையும்
கொத்துக் கொத்தாய் உதாரணங்கள் தந்திடுவார்செழிப்பினிலே கவிபிறந்த கதையுந்தான் மெத்தவுண்டு.மன்னன் அதிவீரராமன் என்ன;தென்னவனாம் பாண்டிய வேந்தன் என்ன;கன்னல் மொழிக் கவிப்புலவச் சிங்கமன்றோ?வறுமையினால் கவிபெருகும் என்று சொல்வோர்வளமையினை ஏழைக்குஅனுமதியாப் பெருஞ்செல்வர்இதனையெலாம்புலமையினால் புலப்படுத்தத்திறமைமிகு கி.வா.ஜ. வந்திடுக!
(கவிஞர் கி.வா.ஜகந்நாதன் 'வறுமை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
வறுமை அகன்றது வாட்டம் தீர்ந்ததுஅருமை அருமை அன்பரின் கவியெனக்கருமை விழிகள் விரிந்திடப் புகழ்வோம்! அதற்குள்கொடுமை யொன்று புகுந்திடக் கண்டோம்அடிமை கொண்டிடும் தன்னல மாயைபேராசையுடனே வருவதை எதிர்த்துப்போராசையுடனே கணைகள் தொடுக்கச்சீரார் புலவர் அப்துல் கபூரும்.கூராய்த் தமிழைக் கொண்டே வருவார்.நெஞ்சை
(கவிஞர் அபதுல் கபூர் 'தன்னலப் பேராசை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
சென்று சென்று மீண்டுவரும் தன்னலத்தைச்செந்தமிழால் சாடியதுநன்று நன்று நன்றேயென்போம்! அடுத்து
உட்பகையை ஒருகை பார்ப்போம்கட்புலனில் எட்டாது காய் இலையில் மறைதல்போல்நட்பிடையே தோன்றுமிதுநாளும் ஒரு வடிவெடுக்கும்;தேளும் வெட்க விஷம் கலக்கும்!வாளும் வாளும் உரசுவது வெளிப்பகையாம்தோளும் தோளும் இணைந்திருக்கத்துரோகச் செயல் புரிவதுதான் உட்பகையாம்அப்பகையைத் தேடுதற்கும்அதைக் கண்டவுடன் சாய்ப்பதற்கும்தீரனுண்டு கவியரங்கில்தூரன் என்பார் அவர் பேர்தான்ஈரமுள்ள நெஞ்சத்தார் - துள்ளும்வீரமுள்ள கவியுரைப்பார்.
(கவிஞர் பெரியசாமித்தூரன் 'உட்பகை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
ஓடிற்று உட்பகையும் - இடம்தேடிற்று நமக்குள்ளே நுழைந்துகொள்ள;வாடிற்று முடியாமல்;ஆடிற்று அடங்குதற்கே!கோடிட்டுக் காட்டுகிறேன்பாலிட்ட நஞ்சு போலப்பக்குவமாய் எட்டிப்பார்க்கும் பின்னர்ஆலிட்ட விழுதுபோல அங்கிங்கே பரவிவிடும்; அதனாலேதாழிட்டுத் தடுத்திடுவீர் உட்பகையை....தனிப்பண்பு காத்திடுவீர்! அடுத்து:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்ற கொள்கைதனைக்கொன்று போட்டுக் கொக்கரிப்பார் செயல்மறுக்க
அன்று பார்த்த இளமையுடன் இருக்கின்ற தமிழ் எடுத்துத்தின்று பார்த்தால் வெல்லமென இனிக்கின்றயார் அவர்?கவி தொடுக்க ஒருவர் உண்டு...உப்பின்றி அறுசுவை யுண்டோ? கவிசுப்பின்றி இந்த அரங்குண்டோ?கொத்தமங்கலத்தார் - ஒற்றுமையின்மையைக்கொத்திடவே வருகின்றார்.
(கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு 'ஒற்றுமையின்மை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
வேற்றுமையில் ஒற்றுமைதான் வேண்டுமென்றுவெகு காலம் விளக்குகின்றோம்விளங்காதார் துடிக்கின்றார்வெடிகுண்டாய் வெடிக்கின்றார்...விண்முட்டும் கமுகோடு போட்டி போடமண்விட்டு எழுந்திருக்கும் தென்னையுண்டுகண்பட்ட இடமெல்லாம் கேரளத்தில் நேற்றுத்தென்பட்ட காட்சிதனைச் சொல்கின்றேன்; அதுபோலேஏற்றமிகு நிலையோடு போட்டி போட்டுத்தோற்றதில்லை தாழ்வென்னும் நிலைகொண்டார் சோவியத்தில்!நாற்றமிகு உயர்வு தாழ்வு நலிந்து போகஆற்றல்மிகு கவிதருவார் தங்கராசன்:
(கவிஞர் தங்கராசன் 'ஏற்றத்தாழ்வு' பற்றிப் பாடி முடிக்கிறார்.)
தலைவர் கலைஞர்:
ஏற்றத் தாழ்வெல்லாம் எதற்கென்று குமுறிக் கேட்டு, அந்தநாற்றங்கால் தனையே தூர்த்துப் போடவன்முறைதான் ஆகாதென்போம் - அண்ணல் காந்தி சொன்ன
நன்முறைதான் வேண்டுமென்போம்!மென்முறையால் வீடு காக்கும் சவுந்தராதான்தன் முறை வந்ததென்று அறிந்திடுக; கவிபாட;
(கவிஞர் சவுந்தரா கைலாசம் 'வன்முறை' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
முடித்துவிட்டீர் கவியரங்கம்; அதற்குள்ளே - தேன்குடித்துவிட்ட வண்டுபோல் சுழல்கின்றேன்!நீவிர் எழுதியவை மீண்டும்படித்துவிட்டுப் பரிசளிக்க நான் என்ன கம்பனுக்குப் பொன்அவிழ்த்துவிட்ட சடையப்ப வள்ளல் தானோ? இல்லை.இல்லை...இடித்துவைத்த புளிபோல் இருப்பார் சில ரசிகர்;கடித்துவிட்ட செங்கரும்பை விடவா முடியும்?கவியரங்கில் தேனமுதைவடித்து வைத்த புலவர்களே!எளியோன் வாழ்த்து ஏற்றிடுகஎழிற் பொங்கல் திருநாளில்
வணக்கம்.வாழ்க!

மூலமும் சான்றும்