கவிதை 15 / 77

பாரதியார்

Bharathiyar

X

பாரதியார்

12.9.69 அன்று சென்னை வாணி மகாலில் நடைபெற்ற பாரதி விழாக் கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமைக் கவிதை உரை
வணக்கம்.வரவேற்புக் கவிதை தந்த நாரண துரைக்கண்ணன் நல்லதோர் எழுத்துச் சிற்பி.கடுஞ்சொல்லைக் குறைத்துக்கொண்ட கருணாநிதி என்று கவின் தமிழால் இங்கு சொன்னார்;அல்ல அல்ல - கடிதோச்சி மெல்ல எறியக் கற்றுக்கொண்டேன்; அவ்வளவே!அவைநடுவே வீற்றிருக்கும் ஆன்றோரே!.அறிவுசால் பெரியோரே! அன்புத் தாய்மாரே!அருங்கவியாம் பாரதியின் உருவங்காட்டத் தமிழ்த்திருமலியும் கவிதையுடன் வந்திருக்கும் பெருமைமிகு புலவர்களே! வணங்குகின்றேன்ஆறிரண்டு திங்கள் அதற்குமேல் பதினெட்டுத் திங்கள்ஆயிற்று முப்பதாம் திங்கள் - நான் அமைச்சனாகப் பதவிஏற்று!சினக்கேள்வி எழுப்புகின்ற சிங்கம் இங்கில்லை எனினும்சிலையுருவாய்க் கடற்கரையில் நிற்கின்றார்.அவர் புகழைப் பாடுதற்கு ஒளவை என்னை அழைத்திட்டாள்.
ஆகாகா! பதினெட்டு ஒளவை உண்டேஅதில் எந்த ஔவை? என்பீர்; அறிந்திடுவீர்!முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினமாம்பத்தொன்பதாம் ஒளவைதான் எனை அழைத்தாள்!
(அடுத்து கவியரங்கத் தலைவரான கலைஞர் அவர்கள் பாரதியார் சிறப்பு பற்றிப் பாடித் தம் முன்னுரையை முடித்து, கவியரங்கில் பாட வந்திருக்கும் கவிஞர்களை முறைப்படி அழைத்து அவையோருக்கு அறிமுகப்படுத்துகிறார்.)
முதலில் பாரதி கண்ட தமிழுணர்வைப் பாட்டாலே விளக்குகின்றார் வா.மு.சேதுராமன்.வா.மு.சேதுராமன் வந்திடுக! தமிழ் தந்திடுக:
(கவிஞர் வா.மு.சேதுராமன் 'பாரதி கண்ட தமிழுணர்வு' பற்றிப் பாடி முடிக்கிறார்.)
தலைவர் கலைஞர்:
சோலைக் குயில் காதல் சொன்ன கதை அத்தனையும்மாலை அழகின் மயக்கத்தால் உள்ளத்தே தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டார் பாரதியார்;'கற்பனையே ஆனாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?'என அழைத்தார் பாரதியார்.அவர் அழைப்பை ஏற்று அன்பர் தூரனும் வந்துவிட்டார்.ஆசைக்குயில் அருகே தூரனை நாம் விடுத்துச் சற்றுத் தூரமாய் நின்றிடுவோம்;தமிழ் ஒலிக்கும்போது மட்டும் நெருங்கிடுவோம்.
(கவிஞர் பெரியசாமித் தூரன் 'பாரதி கண்ட குயில்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
நான் கண்ட பராசக்தி நீர் கண்டீர்!ஏன் கண்டோம் எனக்கேட்டுப் பழமை வாதிதான்கண்ட சேதிமட்டும் மறைத்து விட்டார்தேன்கொண்ட தமிழெடுத்துப் பக்திமான்கண்ட பராசக்தி பெயராலேவான்கொண்ட மட்டும் வீரம் வழங்குகின்றார் பாரதியார்- அதனைவிசுவபாரதியும் விளக்குகின்றார்:
(கவிஞர் விசுவபாரதி 'பாரதி கண்ட பராசக்தி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
தாயாகத் - தமிழாகத் - தாயகத்தில்மூத்த சேயாகத்-தடைபடா அன்புருவாக அண்ணன் கண்டவன் நான்.கண்ணன் கண்டவன் பாரதி!கிருட்டிணனும் கண்ணனும் ஒன்றென்பார் சிலர்இல்லையென்பார் சிலர்-இருட்டினிலே ஆராய்ச்சி விளக்கேற்றிக் குழம்பாமல் உரைத்திடுவார் கு.சா.கி.
(கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி 'பாரதி கண்ட கண்ணன்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
பார்த்தன் மனைவி பாஞ்ச யை நேரில் பார்த்ததில்லை பாரதியும்பார்த்தவர் ஒருவர் உண்டிங்கே;பார்ப்பீர் அவர்தான் பீஷ்மராம்!
கணைமழை தன்னில் படுத்தவரேகவிமழை பொழிய வந்திடுவீர்!
(கவிஞர் பீஷ்மர் 'பாரதி கண்ட பாஞ்சாலி' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
சேலாடும் விழிகள் மேற் செயற்கைப் புருவம்சிவப்பாக இதழ்களிலே வண்ணப்பூச்சுகாலாடை அரையாடை அணிவதிலே கடும்போட்டிகல்ரதங்கள் அஜந்தாக்கள் அத்தனையும் தலையில் ஏற்றிக்கண்காட்சிப் பொருளாக நடக்கின்றாளே, அவளல்ல புதுமைப் பெண்!பின் யார் என்று கேட்கின்றீரோ?அறிவிக்க அம்மையார் இருக்கின்றார்கள்!புதுமைப் பெண் பார்க்க இடம்மாறி உட்காராமல்இருந்த இடத்தில் இருந்திடுவீர்:
(கவிஞர் இரா இராசலக்குமி 'பாரதி கண்ட புதுமைப் பெண்' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞரின் முடிவுரை:
புதுவை சுப்ரமணிய பாரதிக்கு விழா எடுக்கும் வேளையிலேபோட்டியாக வருதல் கூடாதெனப் புத்தனேரி சுப்ரமணியக் கவிராயர் வரவில்லைஅதனாலே முடிவுரைக்குப் போகின்றேன் பொறுத்தருள்க!பெண்ணைப் பெருமை செய்தான்மண்ணைப் போல் மிதிபடும் மானிடரைப் பார்த்துஉன்னை விற்காதே என்றான்.
விரோதிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேனெனவிடுதலைக் குரல் கொடுத்தான்.காரிருள் அடிமை நீக்க நல்ல கதிரொளியாய் நின்றான்.தொண்டு செய்யாது கிடப்பவன் 'ஆமை' யென்றான்:தொகை தொகையாய்க் கவிக்கு விளக்கு ஏற்றி வைத்தான்அந்தப் பாரதிக்கு வாரிசாய்ப் பாரதிதாசன் வந்தான்.தலைவர்க்கும், கவிஞர்க்கும், பிற தகைமைசால் மேதைக்கும்.தமக்குப் பின் இருக்கின்ற பரம்பரையே தகுதியாகும்பார்க்கின்ற இடமெல்லாம் பாரதி பரம்பரையைப்பாரதிதாசன் வழித்தோன்றல்களைப் பார்க்கின்றோம்பாரதிரச் சிரித்து மகிழ்கின்றோம்!
வணக்கம்வாழ்க!

மூலமும் சான்றும்