கவிதை 21 / 77

வெள்ளி விழா

Silver Jubilee

X
வெள்ளி விழா
(அகில இந்திய வானொலி சென்னை நிலையத்தின்சார்பில், இந்தியா விடுதலை பெற்ற 25-வது ஆண்டுவெள்ளி விழாவையொட்டி 15.8.72 அன்றுராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதை உரையில் சில பகுதிகள்)
அவை கூடி வந்திருக்கும் அனைவர்க்கும்அழகு தமிழ்ப் பாவலர்க்கும், நாவலர்க்கும் அமைச்சர்க்கும்என்புருவம் எனினும் அன்புருவம் சிலம்புக்கும்என் தலைதாழ்ந்த வணக்கங்கள்அன்னைத் திரு நாட்டோரேஎன்னை உங்கள் ஊழியனாய் ஏற்றுள்ளீர்,சொன்ன சொல் தவறாமல் செயல்படுவேன்எனக்கூறி இற்றை நாளில் வணங்குகின்றேன்...அள்ளிமுடித்த கூந்தலிலே பூவோடும் - கீழேதுள்ளி விழாக் கெண்டை மீன் விழியோடும்புள்ளி மேவும் புதுக்கோலச் சித்திரத்தில்-விடுதலைக்குவெள்ளிவிழா என எழுதிக் காட்டுகின்றஇந்தியத்துப் பெண்ணே - இளம்மாதே! எழுச்சிக்குத் தாயே!
விந்தியத்துக்கப்பாலே வீரத் தமிழகத்தில்பந்தயத்துக் குதிரைபோல் பாய்ந்தோடித்தியாகத்தீயில்முந்திக் கொண்டு குதித்திட்ட மறவர்க்கு வாழ்த்துக்கூறிநான் வணக்கம் செய்வேன்....!இருபத்தைந்தாண்டுகளாய் எரிகின்ற விளக்கைக் கண்டோம்.அவ்விளக்கில்இரத்தத்தை எண்ணெய் எனப் பெய்து ஏற்றி வைத்தஎம்மனோர் பாட்டன்மாரைத் தொழுது நின்றோம்!குயில் கூட்டம் பாடுகின்ற கோலச் சோலையிலேகோட்டான்கள் காட்டுக்கூச்சல் கேட்டிடவோ?மானாடும் பொழில் - மயிலாடும் பூங்கா-மந்திகளின் ஒய்யார மண்டபமாய் மாறுவதோ?தென்றல் நுழைய வீடு கட்டி - அதில்தீ புகவே விட்டிடவோ?எங்கள் நாடு - எங்கள் மக்கள் - எங்கள் ஆட்சிதிங்கள் முகமெனச் சிறு குறையிருப்பினும்எங்கள் நாடு - எங்கள் மக்கள் - எங்கள் ஆட்சிசிங்கமறவர் - தங்க மங்கையர் - காப்பார் என்றுபொங்கு தமிழில் புவியினுக்குணர்த்துவோம்!அத்தனை பேரையும் இயம்பிடல் இன்றுஇயலாதென்றே எண்ணிச் சிலரைக்கணக்காய் வகுத்துக் கவிதை புனைந்திடவானொலி நண்பர் விடுத்த அழைப்பும்தேனொலியாய் என்செவியில் விழுந்திடப்பேரொலி முழங்கும் சூழல் விடுத்துப் - புலவர்கள்சீரொலி கேட்க ஓடி நான் வந்தேன்.பாரதிபற்றிப் பாடுதற்கோர் பாரதி வந்துள்ளார்.சுப்பிரமணிய பாரதியின் சுவையான தமிழ்ப்பாட்டைச்
சுத்தானந்த பாரதியின் புதுப்பாட்டில் கேட்டிடலாம்....அதனாலே; இவர் முற்றும் துறந்தவர் என்றாலும்-பற்றுத் துறக்காதவர் - தமிழப்பற்றுத் துறக்காதவர் - பலமொழிகற்றும் மறக்காதவர் - தாய்மொழியைமறக்காதவர் - இங்கேசிறக்காதவர் - இங்கேசிறக்காது அவர் பாரதி பற்றிப்பாடாவிட்டால் - எனவே அவர் பாடுகிறார் இப்போது:
(பாரதியார் பற்றிக் கவிஞர் யோகி சுத்தானந்தபாரதியார் பாடி முடிக்கிறார்)
அடுத்து,தூத்துக்குடியில் சுதேசிக் கப்பலைப்பார்த்த வெள்ளையர் பதைத்திடும் வண்ணம்ஓட்டிக் காட்டி ஓட்டாண்டியாகிக்கோவைச் சிறையினில் கொள்கை காத்திடச்செக்கிழுத்த நம் செம்மல் வ.உ.சி.சிறப்பினை விளக்கிட சென்னையில் ஒரு சிலைமுன்னரே வைத்துப் புகழ்பெற்றோம் எனினும்அடுத்த திங்கள் ஐந்தாம் நாளினில்இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார்சிந்தை உவந்து மேலுமோர் சிலையினைத்தூத்துக்குடியில் திறந்திட இசைந்துள்ளார்விஞ்சு புகழார்க்கு நம் அஞ்சல் துறையினர்நினைவுத் தலையும் நிகழ்த்தலை நினைத்தனர்சிறை சென்ற தியாகி சிதம்பரனார் போல்சிறை சென்று தியாகம் செய்த நம் நண்பர்செந்தமிழ்க் கவிபுனை சிந்தை படைத்திட்டசுந்தரம் வந்துள்ளார் கவிதை தந்திட:
(வ.உ.சி. பற்றிக் கவிஞர் எஸ்.டி. சுந்தரம்பாடி முடிக்கிறார்)
அடுத்து,வ.வே.சு. அய்யரெனும்வாய்மைகொள் செயல்மறவர்ஆவேச நீர்ச்சுழலில் சிக்கிஅன்றொரு நாள் மாய்ந்து விட்டார்இன்றந்தச் சுதந்திர வீரரை நம்முன்எழுந்து நடமாடச் செய்ய வந்துள்ள இக்சொழுந்து யார்?இக்கால ஒளவை போலத் தக்கபடித் தமிழ்பாடும்மிக்க திறனுடைய சௌந்தரா கைலாசம்அம்மையார் கவிதையைத் தம்மகள் மூலமாய்நம்மவர்க்கிங்கே நயமாய் அனுப்பினார்;பாடுக செல்விநீ கேட்ட தாலாட்டை:
(வ.வே.சு. அய்யர் பற்றிக் கவிஞர் திருமதிசௌந்தரா கைலாசம் சார்பில் அவர் மகள்பாடி முடிக்கிறார்)
அடுத்து,சிம்மக் குரலோன் சிவா எனத் திகைத்துநம்மை ஆண்டவர் நடுநடுங்கி அஞ்சுமாறுநோயின் கொடுமையுடன் நாளெல்லாம் கால்நடையாய்த்தாயின் விலங்கொடிக்கத் தாயகத்தைச் சுற்றிவந்துதிருச்சி சிறைக்கோட்டம் சிறக்கக் கைதாகிஇருட்படலம் நீக்கும் எழுஞாயிறு போன்றசுப்பிரமணிய சிவா என்னும் ஒப்பற்ற தியாகியினைப்பாடுதற்கு வல்லார் யார்?உப்பில்லா உணவு உருப்படுமா? கொத்தமங்கலம்சுப்பில்லாக் கவியரங்கம் சுவைதருமா? கொத்தமல்லிக்கொப்பு கறியினிலே மணக்கும்! என் நண்பர்கொத்தமங்கலம் சுப்பு
கவிதையெலாம் மணக்கும் - கேட்ட தமிழர்நெஞ்சமெலாம் இனிக்கும்.சிவசிவா என்று சும்மா இருக்காமல் இவ்வயதில்சிவாபற்றிக் கவிபாட அவாவுற்று வந்தவரேஅவை ஏறாது போம் - நீர் இந்தஅவையேறாது போம் என்று சொல்லிவிட்டால் இங்கே நல்லசுவை ஏறாது போகுமன்றோ?சப்பென்று போகாமல் அவைக்குச் சுவைதருகசுப்பு அவர்களே!
(சுப்பிரமணிய சிவா பற்றிக் கவிஞர் கொத்தமங்கலம் சுப்புபாடி முடிக்கிறார்)
அடுத்து,பற்று வைத்தல் தவறன்று; பாவமன்று - ஆனால்பற்று, கொஞ்சம் முற்றிப் போய் வெறியாக மாறுமாகில்-விபரீதம் பலவாய் விளைவதுண்டு நாட்டினின்றுஏகாதிபத்தியத்தை இந்திய நாட்டில்,போகச் செய்யாவிட்டால் வேகாது இந்தவுடல்அந்நியரை விரட்ட வேறோர் அந்நியரைத்துணைகோடல் நன்றென்னும் துணிவுகொண்ட ஓரிளைஞர்நேத்தாஜி போசுக்கும் மூத்த வழிகாட்டியாய்செருமானியர் படையுதவி பெறுவதற்கும் முயன்றவராம்நாஞ்சில் தமிழ்மண்ணில் நல்ல பழங்குடியில்தோன்றிப் புகழோடு மாய்ந்த சண்பகராமன்வெளிநாட்டிற் செத்தாலும் வெந்தபின் தன் சாம்பல்தமிழ்நாட்டில் தெளிக்கப்பட வேண்டுமென்றமானம் படைத்தவொரு மறத்தமிழன் வீரத்தைக்கானம்பாடி நமைக் களிப்பிக்க வருபவரோவானம்பாடியாம்-பூவிரியுஞ்சோலைக்
காவிரிக் கரைதோன்றிப்பாவிரிக்கும்-பண்பாளர்பண்டைநாள்நண்பர்தான் - நற்கவிதை விருந்தொன்றைஉண்பதற்குத் தருவார் உவந்து:
(சண்பகராமன் பிள்ளை பற்றிக் கவிஞர் வானம்பாடிபாடி முடிக்கிறார்)
அடுத்து,வன்முறை, தீவிரவாதம் இவையெலாம்நன்முறையாகா; நாட்டுக்குத் தீமைதான்!அண்ணலும் அண்ணனும் அமைத்த நற்பாதைஅகிம்சைதான்; எனினும் அன்று நம் முன்னோர்அன்னியர் ஆட்சியை அகற்றிநம் அடிமைத்தளையினை அறுத்திடத் தகாவழி நாடுதல்பிழையிலை என்றும் சிற்சிலர் பேசினர்தவறுதான் இலையென அவருள் ஒருவனாய்வாஞ்சிநாதன் வளர்ந்தான் புயலாய்!ஆங்கில ஆட்சியின் பிரதிநிதியாக அன்றுஆஷ்துரை என்பான் நெல்லையில் இருந்தான்மணியாச்சி நிலையம் வண்டிவந் தடையவும்கணித்து வைத்தவாறு வாஞ்சிநாதன் குழுவினர்வளைத்தனர் வண்டியை; கைத்துப்பாக்கிக் குதிரையைஇழுத்தனன் வாஞ்சி; இறந்தான் வெள்ளையன்தன்மான உணர்வால் தன்னையும் சுட்டுத்தற்கொலையுண்டான் வாஞ்சி-தவித்தது அவனது குடும்பம்!காஞ்சித் திணையெனில் காத்தலே யன்றோ?வாஞ்சியும் சுதந்திரம் காத்த வரலாற்றினை இந்தத்
தருணம் மறவாது தரவருகின்றார்அருணாசலம் - இனி அவர் கவி கேட்போம்:
(வாஞ்சிநாதன் பற்றிக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம்பாடி முடிக்கிறார்)
தன்பெண்டு தன்தாய் தன் குடும்பம் பாராமல்தாய்நாட்டின் மானம் தனைக்காத்தல் கடமையெனப்போராட்டக் களத்தில் புனித நெஞ்சத்தால் கலந்துதேரோட்டம் காணத் திரள்வதுபோல் அணி அணியாய்வருகின்ற தொண்டர்க்கு வாகான தலைவனாய்த் - தெம்புதருகின்ற வீரனாய் வள்ளலாய் உறுமுகின்றஅதிகாரம் ஆதிக்கம் கண்டும் அஞ்சாதுபிடித்த கொடியினைப் பிடிவாதம் தளராதுஅடித்தும் விடாமல் அங்கேயே உயிர்நீத்தசாகாத குமரன்; அவன் கொடிகாத்த குமரன் -மிதந்திடும் தியாக வானில் மின்னிடும் துருவ விண்மீன்சிதம்பர ரகுநாதன் இங்கேஇதம்பெறக் காட்டக் கேட்போம்:
(திருப்பூர் குமரன் பற்றிக் கவிஞர்தொ.மு.சிதம்பர ரகுநாதன் பாடி முடிக்கிறார்)
அடுத்து.எழுவரின் பெயரை ஈங்கே எழுதி நாம் காட்டிவிட்டோம்கழிபெரும் சுதந்திரத்தைக் கண்டவர் இவர்கள் தாமா?கோபுரக் கலசம் போலே குன்றின்மேல் விளக்குப்போலேமாபெரும் புகழ்பெற்றோர்கள் மற்றையோர் எத்தனைபேர்?மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆணிவேர் போலேகண்ணுக்குப் புலனாகாத தியாகிகள் எத்தனை பேர்?நாயுடு நாயக்கர் முதலியார் என்றுசெந்தமிழ் நாட்டின் முந்தைய தலைமுறைக்கு
விடுதலை வேட்கை வித்தூன்றியவர்கள் ஆனவரதராசலு, பெரியார் ஈ.வே.ரா. திரு.வி.க.,ஜீவா எல்லாம்பெயர் தெரியாதோர் பட்டியல்தானா?அயர்விலாதின்னும் முயல்வோமானால்ஏராளம் பேர் இருப்பரே தியாகிகள்?தாராளமாக அவர் புகழ் பாடிட-என் தனி நண்பர்தமிழ் அன்பர்-எங்கிருந்தாலும்பொங்கும் செந்தமிழால்ஆடிப்பெருக்கு போல் அழகு தமிழ்ப்பாக்கள்பாடிப் பெருக்கும் பாவரசென்னும்கண்ணதாசன் எண்ணம் உணர்ந்திடும்வண்ணம் பொறுமையாய் வந்துள்ளோம் அனைவரும்.சுதந்திரக் கிளியே! இதந்தருஞ் சொல்லில்மிதந்திடுங் குயிலே! மெல்லிசை கேட்போம்வருக வருக தருகநின் கவிதை:
(பெயர் தெரியாத் தியாகிகள் பற்றிக்கவிஞர் கண்ணதாசன் பாடி முடிக்கிறார்.)
“சித்திரச் சோலைகளே உமைநன்குதிருத்த இப்டாரினிலே - முன்னம்எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோஉங்கள் வேரினிலே?தாமரை பூத்த தடாகங்களே - உமைத்தந்தஅக் காலத்திலே - எங்கள்தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே.”என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள்
நன்றென எண்ணி நாட்டு விடுதலைவெள்ளி விழாவினை வெற்றியாய்க் கடந்துஉள்ளம் உவக்க ஒப்பிலாப் பொன்விழாவிரைவில் வருகென விழைகிறேன்பெறுகஎன் வாழ்த்தும் வணக்கமும் நன்றியும்!

மூலமும் சான்றும்