கவிதை 22 / 77
அண்ணன் இருக்கின்றார்
Anna Is Here
அண்ணன் இருக்கின்றார்
2.9.1972 அன்று சென்னை கலைவாணர்அரங்கத்தில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரையில் சில பகுதிகள்.
சந்தனமே!தென் பொதிகை தவழ்ந்து வரும் இளங்காற்றே!நந்தாச் சுடர் விளக்கே!நறுமணத்துப் புதுமலரே!கண்ணியத்தைக் கடமையினைக் கட்டுப்பாடெனும்பண்பைக் கண்போலக் காத்திடற்குக்கற்பித்த பெருந்தகையே!சிங்கத் தமிழர்களின் சிந்தையெலாம் பறிகொண்டுவங்கக் கடலோரம் வாய்மூடிக் கண்மூடிமோனத் தவமிருக்கும் முத்தமிழே!குடிசையெலாம் மேலுயர்ந்துகோபுரமாய் விளங்கிடவும்மடமையிருள், கொல்வறுமைமடிந்தே மருகிடவும்எல்லாரும் நலனெல்லாம்எய்தி மகிழ்ந்திடவும்
நல்லதோராட்சியினைத்தோற்றுவித்த நாயகமே!எண்ணக் குறிப்பறிந்தேஈடேற்றும் தம்பியரின் அண்ணாவே!எனையிங்கே ஆளாக்கிக்காத்திட்ட ஆருயிரே!நும்கனவு அத்தனையும் நனவாக்கும்சீரியநற் பணியினையே செய்கின்றோம்நாள்தோறும்!செய்பணிகள் அனைத்திலுந்தான்அண்ணனே! நீ இருக்கின்றாய்!
தாயே!தாயின் குரலில்“தம்பி!” எனவழைத்த தருவே!தாய் அழைக்கும் போதெல்லாம்நீயழைக்கக் காண்கின்றேன்!தாயின் அழைப்பில்அண்ணனே! நீ இருக்கின்றாய்!
ஏழைமாந்தர்உன் தம்பி ஆட்சியிலே சிரிக்கின்றார்அச்சிரிப்பில் ஆண்டவனைக் காண்பார் பலர்ஆனால்....நாங்களோ உன்னைக் காணுகின்றோம்!ஏழையின் சிரிப்பில்அண்ணனே! நீ இருக்கின்றாய்!
அன்றொரு நாள் ஆரூரில்கண்பெற்ற மூதாட்டிஉன் தம்பியைக் ‘கடவுள்’ என்றாள்.அந்தக் ‘கடவுளோ’
உன்னைக் கைதூக்கித்தொழுதார் அங்கே!ஆம்; அண்ணா!கத்திமுனைபட்டு அந்த ஏழையரின்கண்ணெல்லாம் திறக்கும்போதுஅந்தக் கண்ணிலே-கண்பார்வையிலே-உன் சிரித்தமுகம் தோன்றுது ஐயா!காலையிலே மாலையிலேகடும்பணி ஆற்றுகையில்எப்பொழுதும் எந்நேரமும்எப்பொருளிலும் அண்ணனே! நீ இருக்கின்றாய்!அம்மட்டோ....எங்கள் பணி முடித்துஎன்றோ ஒருநாள்உன் மடியில் தூங்கவரும்போதும்...அண்ணனே! நீஅங்கேயும் இருக்கின்றாய்!அலைமேயும் கடலோரம் துயில்கின்ற எம் அண்ணனே-!அணையா விளக்கே! அன்பின் ஒளியே!நீ தந்த அணையா விளக்காம்தி.மு.கழகமென்னும் தீபச் சுடர் ஏந்திஇருட்டு மனிதர்களின்புரட்டுச் செயல் அனைத்தும்விரட்டி அடித்திடுவோம்வெற்றிக்கொடி பிடித்திடுவோம்!