கவிதை 23 / 77

அண்ணன் ஒரு கவியரங்கம்

Anna, a Poetry Assembly

X
அண்ணன் ஒரு கவியரங்கம்
4.2.1973 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில்நடைபெற்ற அண்ணா நினைவுநாள்கவியரங்கத்திற்கு தலைமை வகித்துகலைஞர் மு.கருணாநிதி அவர்கள்பாடிய தலைமைக் கவிதையுரை.
வங்கக் கடலோரம் உறங்குகின்ற நம் அண்ணன்அடிதொழுது தொடங்குகின்றேன் தலைமையுரைஎட்டுக் கவிஞர் என் தலைமை யேற்றுப்பட்டுக் கவிதைகள் நெய்திட வந்துளார்வசவாளர் சிலர் உலவும் தமிழகத்தில் - கவிநெசவாளர் இவர்களையே வாழ்த்திடுவோம்....ஆயிற்று ஆண்டொன்றுக்குமேல் அரங்கேறிக் கவிபாடிஅதனாலே அறிவழகன், வீராசாமி அழைத்தவுடன்ஆகட்டும் பார்ப்போமெனச் சொல்லாமல்அப்படியா வருகின்றேன் என ஒப்பிவிட்டேன்
எப்படியும் என்பாட்டை நீங்கள் கேட்க வேண்டும்என்பதற்கு வரவில்லைசெப்பரிய சிறப்புமிகு கவிஞர்களின்சீர்கவிதை கேட்பதற்கே நான் வந்தேன்கவி எழுத நேரமில்லை எனினும்கலைஉள்ளம் எனை விடுவதில்லைகாலை முதல் பார்வையாளர் சந்திப்பு - அதற்கடுத்துகவின்மிகு கூவத்தில் படகு வெள்ளோட்டத்தொடக்கவிழாநாலு மணிக்கெல்லாம் நமது பாரதி பேராலேதுறைமுகத்தில் ஒரு நிகழ்ச்சி!இதற்கிடையே அடிக்கின்றதொலைபேசி மணிக்கெல்லாம் பதிலைச் சொல்லிஏதோ கிறுக்கி வந்தேன் கவிதையெனும் ஒருகத்தை!அண்ணனுக்குக் கவியரங்கம் நடத்துகின்றோம்-அறிவீரோ நண்பர்களே! அண்ணனே ஒரு கவியரங்கம்!புவியரங்கின் மீது பூவரங்கம் அமைத்துக் கொண்டுதிருவரங்கத் துயில் கொள்ளும் தெய்வம் அவர்!அந்தத் தெய்வத்தை வணங்குகின்றேன்!அந்தத் திசை நோக்கிப் பாடுகின்றேன்!
அண்ணன் பூஜைக்கு என்ன பொருள்கொண்டுசென்றாய் எனக் கேட்பீர்!மண்ணில் புழுப்போல நெளிந்தவர்க்குக் குடிசை மாற்றிமாடியுடன் வீடு கட்டித் தந்த செய்திஅண்ணன் காலுக்குக் காணிக்கை மலரன்றோ!இலட்சம் பேருக்கு இந்த ஆண்டு - கண்ணில்பார்வை தரல் இலட்சியமாய்க் கொண்ட செயல்அண்ணன் சந்நிதியில் வைக்கின்ற வாழைக்கனியன்றோ!தொழு நோய்ப் பிச்சைக்காரர்க்குத்
தூய்மைசேர் இல்லங்கள் ஏற்படுத்தல் அண்ணனைத்தொழுவதற்கேற்ற தூபதீபப் பொருள் அன்றோ!சிற்றுார்க்கும் பேரூர்க்கும் பட்டி தொட்டிக்கும்மின் இணைப்பு இல்லா நிலை இனி இல்லையென்றுஅண்ணனிடம் கூறுவது கற்பூர ஜோதியன்றோ!வெற்றிலை பாக்கென்றால் அண்ணனுக்கு வெகு விருப்பம்விவசாயத் தொழிலாளர் வீட்டுமனைச் சட்டத்தைச்சொன்னாலே வாய் சிவக்கும் அண்ணனுக்குவெற்றிலை படைத்தது போல்!கூவம் மணப்பதற்குத் திட்டம் கண்டோம் அண்ணா...உன் வாசல்கோலமிட்டு யாம் வைத்த குங்குமம் அதுதான் அண்ணா!என மொழிந்து-நேற்றுக் காலையிலே நாமெல்லாம் நடந்து சென்றுகாற்றுத் தாலாட்டும் அண்ணன் கல்லறையை வணங்கி வந்தோம்ஆற்றுப் பெருக்கெனவே ஆயிரம் லட்சமென்றுஅண்ணனுக்கு... தமிழ்ஊற்றுப் பெருக்காலே பண்பாடிக் கண் எல்லாம் குளமாகத்திரும்பி வந்தோம்.தேற்றும்மொழிக் கரசன், தென்பாங்கின் பெருவேந்தன்ஏற்றும் விளக்கெல்லாம் ஏழைக்கே ஒளிகாட்ட வேண்டுமென்றுசேற்றில் தாமரைபோல் கருத்தவிழ்த்த நம் அண்ணன்“என்னைப்போற்றிப் புகழ்ந்ததெலாம் போதுமடா என் தம்பி!தூற்றித் திரிகின்றார் சிலபேர் நம்கழகத்தை! எண்ணெய்ஊற்றி விஷத்திரியை எரியவிட்ட குற்றமன்றோ! இன்றுசோற்றுத் துருத்தியெலாம் சுழற்றுகின்றார் அட்டைக் கத்திகூற்று வந்து என் உயிரைக்கேட்டுப் பெற்ற காலம்வரைஎன் வீட்டுக்கூடம் வரைதான் அனுமதித்தேன் கூடிக்கெடுப்பவரை! நீயோ
அடுக்களைவரை அழைத்துச்சென்றாய்... அதன் பயனைஅனுபவிக்கின்றாய் இன்று!ஆனது ஆயிற்று தம்பி! ஆடிக்காற்றில் பஞ்சாகப்பறந்து போகும் பகையெல்லாம்!அலட்சியச் சிரிப்பாலே எதிர்ப்புகளைத் தூளாக்க... நான் தந்தஅறிவுரையை மறந்திடாமல் பணியாற்று! அவர்கள்ஓங்காரச் கூச்சலிடும் கோட்டானாய் அலறட்டும்ஆங்காரம் அவசரமெல்லாம் அவர்களுக்கே தீங்காக முடியட்டும்பாங்கான தமிழ்ப் பண்புடனே பொறுமைகாட்டி - என்னைநீங்காமல் நினைவில் வைத்த தம்பிகளை ஒருங்குகூட்டிமாங்குயில் போலக் கூவுவீர் நம் கொள்கைகளை-மறைந்திடுவர் ஆந்தையெல்லாம் தம் குரல் கேட்டுத்தாமே நாணி!”எனச்சொல்லி நம் அண்ணன் வாழ்த்துத் தந்தார்.மனக்கதிராய் ஒளிவீசம் மாமல்லன் ஊரில் பிறந்துபல்லவன் ஆனார்!தனக்கெதிராய் எழுந்திட்ட சூழ்ச்சிகளைப்புறங்காணும் சோழனானார்!குணக்குன்றாம் கொங்குநாடன் கொடுப்பதிலே குமணனானார்!வனப்புமிகு தமிழ்வளர்க்கும் பணியினிலே பாண்டியவேந்தனானார்!வாகை சூடிப் பகைப்புலத்தை வெல்வதிலே சேரனும்அவரேயானார்‘நமஸ்காரம்’ என்பதுதான் நல்ல தமிழ் என்றுசமத்காரமாய்ச் சொல்லி வந்த கூற்றினை எதிர்த்துவணக்கமெனும் தமிழை வழக்கத்தில் கொண்டுவந்தார்!விவாக சுபமுகூர்த்தமென்று விழி பிதுங்கச் சொல்வதுதான்விவேகிகளின் அழகென்று விவாதித்த காலம் மாற்றிவீணைத்தமிழ் குழைத்து ‘மணவிழா’ என்றொலித்தார்!வித்திட்டார் பொதுமக்கள் நெஞ்சகத்தில்புலவர்க்கே உரிய தமிழ்வளர!
அகராசனாதிபதியை அவைத்தலைவர் என்றதுவும்அண்ணாதானே! இல்லையேல்சனாதிபதிக்கும் மேல்பதவி அக்ராசனாதிபதிப்பதவிஆகுமன்றோ?ஏறுகின்றார் மேடையெனில் அது மகுடிநாதம்-எழுதுகின்றார் ஏட்டிலென்றால் அது தமிழர் வேதம்எதிரிகளின் தலையெல்லாம் நெற்கதிர்போல் தாழ்வதற்குஎம் அண்ணன் கற்றிருந்தார் சொல்லை ஆள்வதற்கு!வாதம் செய்வதிலே வழக்கறிஞர் சிங்கமெலாம் தோற்க நேரும்!பிடிவாதம் செய்வதிலே தேர்ச்சியில்லை அண்ணனுக்கு!கம்பன் தமிழுக்குச் சிரக்கம்பம் செய்கின்றேன்; ஆனால்கம்ப ராமாயணம் ஏலேன் என்றுதும்பை மலர் உள்ளத்தார்துணிவு நிறை இதயத்தார்தூயநற் சோமசுந்தர பாரதியை ஒப்பவைத்தார்.அண்ணன்நெடுஞ்செழியனைக் கண்டதில்லை,அன்பழகனைக் கண்டதில்லை.நிச்சயமாய்ச் சொல்லுகின்றேன்அவர்களை அண்ணன் கண்ட, தில்லை.ஆமாம்அவர்களை, அண்ணன் கண்டதில்லைநகர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்எல்லையில்லாப் புகழ் பெற்ற உரையொன்றை ஆற்றியுள்ளார்.“தாழ்ந்த தமிழகமே” என அழைத்து, நாம்வாழ்ந்த பெருமையெல்லாம் வகைப்படுத்திஆழ்ந்த கருத்துப் பேழையொன்றைத் தந்திட்டார்-கருத்துப் பேழையது! கறுத்த மனத்தினர்
கழகத்தைக் கவிழ்ப்பதற்குக் கற்பனையில் தயாரித்தகாதறுந்த பேழையல்ல!கருத்துப் பேழையது....காஞ்சி அண்ணல் தந்த கற்பூரப் பேழையது!பெரியாரின் வலக்கரமாய் - அறிவில்வறியோரைக் கரையேற்றும் விசைப்படகாய்சிறியோரின் பிழைபொறுக்கும் செங்கதிராய்வெறியோரைப் பணியவைக்கும் வித்தகராய்நெறியோடு முறையோடு அரசியல் நடத்திச் சென்றுதிருவோடு ஒழிவதற்குத் திட்டம் சொன்னார் - இங்கேதிருவோடு இருந்திட்ட சிலபேர் இன்றுதெருவோடு போகின்றார் நம்மைத் திட்டி!பருவோடு சண்டை போட்டால் நம்முகம்தான் கெடும்பரவாயில்லை என்று புனுகு போட்டால் பரு உதிரும்...முக அழகு கெடுக்கவந்த பருவுக்குப்புனுகு மணம் ஒருகேடா? புலிபோலச் சீறிடுவர் என் நண்பர்!பொறுமையெனும் புனுகால்தான் பொல்லாப் பருக்கள்உதிருமெனில்மணமென்றதனைக் கருதாமல்மருந்தென்றதனைத் தடவிடுக!இருந்துழைத்து வளர்ந்திட்ட இயக்கத்திலேஈவெரா பெரியாருடன் கருத்துமாறி...இன்னொரு கழகம் காண்பேன் என்றுகண்ணீர் பெருக்கிப் பிரிந்தபோதும்இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் இருப்போமென்றுஎதிரிகட்கு இடித்துரைத்தார் எங்கள் அண்ணன்... இன்றோஉதிரிகளைச் சேர்த்துக் கொண்டுஉடைவாளால் தாய் வயிற்றைக் கிழிப்பதற்கும்எதிரிகளாம் பேய்மடியில் வீழ்வதற்கும்
இழிகுணத்தோர் ஓடுகின்றார்; விரைவில் முடமாவர்!அண்ணன்-ஆளுங்கட்சிக்கெதிராக அறப்போர் செய்தபோதெல்லாம்ஆழம் பார்க்கத் தொண்டர்களைஅனுப்பும் பழக்கம் என்றுமில்லைஅவரே முதலில் களம் புகுவார், அவரே முதலில்சிறைப்படுவார்!“மாநிலங்கள் மானினமாய் இருக்கவேண்டும்; அவைமீதுபாய்ந்து தாக்க மத்தியிலே புலியாக உறுமவேண்டும்-”இக்கொள்கைகுடியரசுக்கேலாதென்று உரிமைகேட்டார் நமது அண்ணன்,வேங்கைக்கழகு மானை வேட்டையாடல் எனத் தமக்கு வரும்தீங்கை உணராச் சிலபேர்கள் குதிக்கின்றார்.அண்ணன் கொள்கை அதுவல்ல,அதிகாரப் பரவல் முறை தேவையென்று முரசறைந்தார்-அவ்வழிதான் நல்வழியென்று அணிவகுப்போம்.ஆதிக்கப் பிணி தொலைப்போம்.பல்கலைக் கழகம்போல் திகழ்கின்ற அவர்பற்றிப்பல தலைப்பில் பாடுகின்றார் கவியரங்கில்...
பின் கண்ட தலைப்புகளில்கவிஞர் பலர் பாடி முடித்தனர்
அன்னை அண்ணா - கவிஞர் ஈரோடு தமிழன்பன்தலைவர் அண்ணா - கவிஞர் கா.வேழவேந்தன்காவலர் அண்ணா - பாவலர் மா. முத்துசாமி
நடிகர் அண்ணா - கவிஞர் முருகுசுந்தரம்திரையுலக அண்ணா - டாக்டர் ஒளவை நடராசன்முதல்வர் அண்ணா - கவிஞர் கொத்தமங்கலம் சுப்புஎழுத்தாளர் அண்ணா - கவியரசு பொன்னிவளவன்பேச்சாளர் அண்ணா - கவிஞர் அப்துர் ரகுமான்
கலைஞரின் முடிவுரை
அன்னையே! அருமைமிகு தலைவரே! அறக்காவலரே!உண்மை நடிகரே! ஒப்பற்ற முதல்வரே!எழுத்தால் பேச்சால் எம்முள்ளம் கவர்ந்தவரே!பழுத்தாய் நீ அறிவில் என்றுபறித்துக்கொண்டு ஓடியதோ காலக் குழந்தை?என்செய்வோம் அண்ணா? நீஎங்களோடு இருப்பதாக எண்ணிக் கொண்டு,வன்செயல்கள் சதித்திட்டம்வஞ்சவெறிக் கூத்து அனைத்தையும் வெற்றிகண்டுஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணஇன்றுபோல் என்றும் உழைப்போம் அண்ணா!அங்கே உன்னைக் காண்போம் அண்ணா!

மூலமும் சான்றும்