கவிதை 12 / 77

உடைமைகள் பத்து

Ten Possessions

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: உடன்பிறப்பின் பற்று

X

உடைமைகள் பத்து

16.9.68 அன்று சென்னை சிறுவர் அரங்கில்(கலைவாணர் அரங்கம்)திருவள்ளுவர் திருநாளை ஒட்டி 'உடைமைகள் பத்து'என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை
வணக்கம்
வள்ளுவர்க்கு விழா எடுக்கும் வாகான திருநாளில்வந்திருக்கும் அனைவர்க்கும் வணக்கம்வரவேற்புக் குழுவுக்கும் வணக்கம்கொத்தான மீசைமுத்தான பேச்சுசத்தான கருத்துஎழுச்சிக்கு வித்தான தமிழர்வண்டாடும் சோலைகண்டாடும் மயில் போலத் தமிழ்உண்டாடும் செல்வர்க்கு வணக்கம்;சிலம்புச் செல்வர்க்கு வணக்கம்;
உடைமைகள் பத்தென்று உரைத்திட்ட வள்ளுவனைஉரித்த சுளைத் தமிழால் நான் காட்ட வேண்டுமென்றுபலமுறையும் தலை சொறிந்தேன் கற்பனையே வரவில்லைகலங்கிவிட்டேன்ஏடெடுத்தேன் எழுதிமுடித்தேன் என்றே என் வழக்கம்இதுவரையில்; ஆனால் திருஓடெடுத்த பரதேசி பல வீட்டுத்தும் பயனின்றி நிற்பது போல் நிற்கின்றேன்கவி வராக் காரணந்தான் கேட்கின்றீர் என்சொல்வேன்கண்ணீர் முந்தும் சொல்வதற்குள், ஆனாலும் சொல்கின்றேன்தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்றுமுன்னொரு நாள் பட்டினத்தார் ஒரு வீடு கொளுத்தியதாய்க் கதையுண்டுஇன்றோ சில பட்டினத்தார் - சென்னைப் பட்டினத்தார்பல வீடு கொளுத்துகின்றார்எரிவதெல்லாம் வீடென்றா கருதுகின்றீர்?ஏழைகளின் வயிறன்றோ?எங்கள் மஞ்சமும் மாளிகையும் இந்த மண் வீடு தானென்றுபிஞ்சுகளாம் பிள்ளை குட்டியுடன் வாழ்கின்றார்.....கொஞ்சமும் இரக்கமிலாக் கொடியவர்கள்நஞ்சு நிறை பாம்பனையோர்வெறிகொண்ட பேயனையோர்நமனும் அஞ்சுகின்ற காரியத்தைச் செய்கின்றார்அவரெல்லாம் பஞ்சு பஞ்சாய்ப் போவதற்குச் சாபமிடுசாபமிடு அவர்க்குத் தூபமிடும் துரோகிகளும்தூள் தூளாய்ச் சிதறிடவே சாபமிடு தமிழ் நாடே!நீ சாபமிடு!இப்படி எண்ணித் துடிக்கின்ற போது
எப்படி வரும் கவிதைக்குத் தூது?அடங்காச் சினத்தாலேஅடபாவி அழிந்திடுக என்கின்றேன்''அறிவறிந்து ஆற்றின் அடங்கப்பெறின்செறிவறிந்து சீர்மை பயக்கும்"என்று அன்புருவாய் வள்ளுவரும் அடக்குகின்றார்அடக்கமுடைமை அது; என் செய்வேன்?மாடிழந்து கன்றிழந்து ஒண்டும்வீடிழந்து உழல்கின்றார் நடுத்தெருவில்இந்நிலைக்கு வித்திட்ட இழிதகையோர் வீழ்க என்றுஇருதயத்தை அமுக்கிக் கொண்டு சுத்துகின்றேன்.'இருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை' என்றுஅருளுடைமை அருள்கின்றார் குறள் அறிஞர் - மற்றும்;அன்புடைமைஅறிவுடைமைஆள்வினையுடைமைபண்புடைமைநாணுடைமைபொறையுடைமைஒழுக்கமுடைமைஊக்கமுடைமைஇப்படிப் பத்துடைமை இயற்றிக் காட்டிஎனைத் தேற்ற முயல்கின்றார் வள்ளுவரும்!ஆனால் சொத்துடைமை இல்லாத மக்கள்சொறி நாய் போல் எரிநெருப்பின் பெருநாக்கில் சிக்கி விட்டசீரழிவை ஒரு நாக்கில் சொல்வதற்கோ முடியுமய்யா?கருநாக்கு படைத்தவரே.....சபித்திடுவீர் கயவர்களை எனச் சொன்னால்வள்ளுவரின் திருவாக்கும் உடன் சேரும் - அவ்வாக்கு
அந்த 'என்பிலதனை வெயில் போலக் காயுமேஅன்பிலதனை அறம்!'அறம்பாடி அநியாய மனிதர்களை அழித்திடுவோம்புறம்பாடி வாழ்ந்திருந்த தமிழகத்தில் பொல்லாங்கைஒழித்திட்டோம் என்று புதிய திறம்பாடி மகிழ்ந்திருப்போம் -தீமைகளைச் சாய்த்திடுவோம்தீ வைக்கும் பிராணிகளை மாய்த்திடுவோம்இங்கு நாலாறு கவிகள் வந்துபாலாறு தென்பெண்ணை காவிரிபோல் பாட்டாறு பெருக்கெடுக்கச் செய்யும்போதுசென்னைக் கோளாறு பற்றி நான் கூறியதைப் பொறுத்தருள்வீர் ...பொறுக்கவில்லை என் நெஞ்சம்!அதனாலே புலம்பி விட்டேன்!
வள்ளுவர்க்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்யும் தமிழ்நாடுஅதை எதிர்த்துத் துள்ளுவார்க்கு மூக்கணாங்கயிறு மாட்டும் மறவர் வீடுஐந்தெழுத்தில் வள்ளுவர் அறிக என்போம்!அறியாதார் இரண்டெழுத்தில்..'வள்' என்று குரைப்பார்.'வள்'ளுக்கு இடையே கால்போட்டு மூன்றெழுத்தைக் குறைப்பார்.வாள் எடுப்போம் வஞ்சகத்தைப் பொடியாக்க!நாம் ஒரு வாள் எடுத்தால் - அவர் இரு வாள் எடுத்து 'வாள்வாள்' என்பார்!வள்ளுவரைப் பேருந்தில் இலவசமாய் நான் பயணம் செய்ய வைத்தேன் என்பார்இங்கிருக்கும் ம.பொ.சி. இல்லை இல்லை வள்ளுவர் படம் மாட்டியதால்விபத்துக்கள் மலிவாகப் போனதென்பார் சில நண்பர்!
சிந்தை அணு ஒவ்வொன்றும் உணர்வேற்றும்வள்ளுவரை இகழ்வதற்கும்விந்தை மனிதர் இருக்கின்றார்; நல்லவேளைவீழ்ந்து விட்டார் அறுபத்தேழில்!ஆட்சிமொழி தமிழென்றால் ஆகாதெனில்ஆதிக்கம் பிறமொழிக்கா எனக்கேட்டால்என்ன அறிவுடைமை?ஆம் எனல் என்ன தமிழ் அன்புடைமை?இவரெல்லாம் இருப்பதை நினைத்து விட்டால்சுவரில்லாச் சித்திரம்போல் தமிழ்நாடுஇருபதாண்டு இருந்ததென்ன விந்தையென்று எண்ணத் தோன்றும்இவர்க்கிடையே வள்ளுவனும் தப்பிப் பிழைத்த கதை வியப்பைத் தூண்டும்வாழ்ந்து கெட்ட நாட்டுக்கு மட்டுமா விடுதலைவீழ்ந்து விட்ட தமிழர்க்கு ஒளியளிக்க வள்ளுவப் பெரியார்க்கும் விடுதலை..வளமலியும் தமிழுக்கும் விடுதலை...விடுதலையின் வெளிச்சமெனும் சவுக்கடியால்கெடுதலையின் இருட்கூட்டம் விரட்டிடுவோம்கொடு ''தலையை'"! எனச் சொன்னாள் அன்னையென்றுகொடுத்திட்டார் தீக்குளித்துத் தமிழர் பல்லோர்சுடப்பட்டார் சுடலைசென்றார்அவர் மனைவி விடப்பட்டார் விதவையாகசிறைப்பட்டார் செக்கிழுத்தார்தரைப்பட்ட மீன்போலத் தமிழ் காக்கத் துடித்துச் செத்தார்அவரெல்லாம் கர்த்த கட்சிஅடக்குமுறை ஏற்ற கட்சிநேற்று ஆங்கில ஏடொன்று "போதாது தியாக" மென்றுஅரைகுறை எழுத்தொன்றை எரிச்சலால் கிறுக்கக் கண்டேன்
எங்கய்யா இந்தியாவில் எட்டுப்பேர் தீக்குளித்தார்?இங்குதான் தமிழகத்தில் மொழிக்காகத் தணல்வாய் வீழ்ந்தார்!பொங்குது எங்கள் உள்ளம் அந்த ஏட்டின் புலம்பல் கண்டு - இனித்தொங்கிடும் கடையில் ஏடு வாங்கிட ஆளே இன்றி!தமிழ்வாழத் தலைகொடுத்த தமிழர்களைத் தரக்குறைவாய் எழுதியதால் - இன்றையதலைப்பான வள்ளுவனை விட்டுவிட்டுத் தலைபோன மனிதர் பக்கம் சென்று வந்தேன்மன்னிப்பீர் என்னை!எதுகை மோனை இப்போது பத்துமாதம் இன்னும் பிறக்கவில்லை.சீர் தளைக்கு சீமந்தம் ஆகவில்லைவேர் தழைத்த பலாக்கனி போல் கவி வழங்கப்பேர் பொறித்த பாவாணர் இருக்கின்றார்மாலையிலே பூ மாலையிலே நார் போல நானிருந்து மணம் பெறுவேன்தமிழ்த் தார்வேந்தர் இன்றிருந்தால் இவர்க்கும் பார் புகழும் பரிசளிப்பார் -என் பரிசோ இவரை ஊர் அறிய மெச்சுவதேயாகும்.
வணக்கம்வாழ்க
(இந்தக் கவியரங்கில் கவிஞர்கள் ஆத்மநாதன், பொன்னிவளவன், குடியரசு, முருகுசுந்தரம், அப்துர் ரகுமான், பூங்குன்றன், தமிழப்பித்தன், ஆனந்தன், முத்துலிங்கம், புலமைப்பித்தன் ஆகியோர் முறையே அருளுடைமை, அடக்கமுடைமை. அன்புடைமை, அறிவுடைமை. ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை,நாணுடைமை, பொறையுடைமை என்ற பத்துத் தலைப்புகளில் பாடினர்.)

மூலமும் சான்றும்