கவிதை 11 / 77

புதிய பாதை

New Path

X

புதிய பாதை

(13.8.1968 அன்று கும்பகோணம் மூர்த்தி கலை அரங்கில்"புதிய பாதை" என்ற தலைப்பில் நடைபெற்றவேளாண்மைக் கவியரங்கில்கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்தலைமைக் கவிதையுரை)
தாளாண்மை கொண்டிங்கு தமிழரசைச் சிறப்பாக்கும்வேளாண்மைத் துறையமைச்ச!கவிதை வாளாண்மை கொண்டிங்கு உழவுப் பேராண்மை காட்ட வந்தபுலவர்களே!தன்சேய் விளைக்கின்ற மரகத மணிகள் கண்டு இதுநன்சேய் என மகிழ்கின்றாள் நிலமடந்தை.தஞ்சை விளைக்கின்ற மரகத நெல்மணிகள் கண்டு இதுநஞ்சை என மகிழ்கின்றாள் நிலமடந்தை.புகார் இருக்கும் தஞ்சைக் கடைமடையில்பூம் புகார் இருக்கும் தஞ்சைக் கடலோரம்மிகார் என் சொல்லை இங்குளார் அதனால்புகார் தீய நினைவுடனேமுன் புகார்த் திகைத் திருநாள்முன்பு கார்த்திகைத் திரு நாள்
முன்பு-கார்-திகைத்துஇருநாள் ஒருநாள் அல்ல பல நாள்பருவ மழையின்றிப் போனாலும்துருவ மீன் போல ஒளி காட்டித் தஞ்சையின் வெற்றிப்புருவம் தூக்கி நின்றீர் வாழ்க நன்று!வானின்று உலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் மழையன்றோ?துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழையன்றோ?கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழையன்றோ?நீர் இன்றி அமையாது உலகெனினும் அதனை வகைப்படுத்தஆறின்றி இயலாது என உணர்ந்தார்ஆறு கண்டார் அதனாலே சோறு கண்டார்எத்தனை ஆறுஇத்தரை மீதுசித்திர நெல்லைச்சிரிக்கச் செய்தது;பச்சைப்பட்டுவிரிக்கச் செய்தது;வறுமைப் பேயைஎரிக்கச் செய்ததுவீட்டோரம் காட்டோரம் தேர்தல்ஓட்டோரம் இருக்கும் நல்லீர் - சிறிதுஆற்றோரம் வாரீர்! இன்று என்பாட்டோரம் வாரீர்! நன்று!
குடமுருட்டிக் காவிரிப் பெண் ஆடுகின்ற காட்சி கண்டு காதல்கொள் இடம் இதுதான் என்று; காதல்கொள்ளிடம் இதுதான் என்றுவீர சோழன் வருகின்றன் ஓடம் போக்கி - என்மேல்,
வை கை என்று வளைக்கின்றான்வைகை என்று வளைக்கின்றான்உன் பல் மணிமுத்தா என நெளிகின்றான்.காவிரியோ கண் சிமிட்டி,என் மன்னியார் வருகின்றாள்:மறைந்திடுக அத்தான் என்கின்றாள்;அவனோ வரட்டுமே மன்னியார்,நம் காதலுக்கு அவளென்ன கல்லணையா?காமினி பாமினி நாமினி காதலர்கள்ஆம் இனி திருமணமென்று பிறருக்குச் சொல்லிவிடு.காதல் அக்கினியாறுமோ கண்ணே அருகில் வந்துவிடுகாதல் அக்கினி ஆறுமோ கண்ணே?அருகில் வந்துவிடு!அவளோ யாரும் நம்மீது தப் பெண்ணார்நம் காதல் பிரிக்க வெண்ணார்பிறர் வெட்டார் நம் உறவெனினும் அத்தான்வெட்கம் என்னைத் தடுக்குதென்றாள்வீரசோழன் விரைந்தணைத்துக் கொண்டவாறுபாலாறு முன்னே பருகிடுவோம் வா என்றான்.மஞ்சளார் முகவதியும் அவன் மடிமீது சாய்ந்தபடிமணமெப்போது அத்தான் என்றாள்பெரியாறு தலைமையிலே பெரிதாக நடக்குமென்றான்.
ஆறுகளை ஒன்றாக இணைத்துக் காதல் கதைபின்னியதாய்க் கருதாதீர்!ஆங்காங்கு வாய்ப்புக் கூறுகளைச் சீராக்கிவளம்பெருக்கும் நதிகளுக்குஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஉழன்றும் உழவேதலை எனநன்றிசொல்வோம் எழுவார் வள்ளுவரும் வாழ்த்துரைக்க!
சேற்றில் மலரும் அவன் வாழ்வு!உழவனோர் மன்னன்நாற்று முடியிருக்கும் அவன் தலையில்உழவனோர் வீரன்; என்றும்போர் இருக்கும் அவன் களத்தில் (வைக்கோற்போர்)உழவனோர் ஓவியன்வயல்கள் அனைத்தும் அவன் வரைந்த சித்திரம்!உழவனோர் தெய்வம்உயிர்களைக் காப்பதால்!குருவை முன் வைத்துத் தாளடியில் உழைக்கின்றதிருவைப் போற்றிடுவோம்.நிலம் பிறந்த நாளாகப் பாடுபட்டு வருகின்றீர்நலம் சிறக்க நாட்டுக்கு இன்னுயிரைக் கொடுக்கின்றீர்உடலில் பலம் இருக்கும் வரையினிலே வயல் வெளியில் கிடக்கின்றீர்கலம், மரக்கால், படியென்று பழங்கணக்கெழுதிப் பார்க்கின்றீர்உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கெதுவும் மிஞ்சாதென்றுஉதட்டையே பிதுக்குகின்றீர்ஏனிந்த நிலையென்று யோசித்ததாலேஏற்றமிகு முன்னேற்றப் பாதைக்கு வழி கண்டோம்.கண்ட வழி; ஏட்டோடு இருப்பது அழகுமல்ல;கவியரங்கப் பாட்டோடு முடிவதும் நல்லதல்ல.வீட்டோடு கிடப்பவர்கள் விழித்தெழுக தமிழ் நாட்டோரேவிடுதலை நாளின்று துடித்தெழுககாட்டோடு கழனியோடு உழல்கின்றீர்ஆட்டோடு மாட்டோடு சுழல்கின்றீர்பழைய முறை மாற்றிப் பயிர் செய்தால்நிறையப் பலன் கிடைக்க வழியுண்டுஉழக்குதான் மிச்சமென்ற இருட்டுநிலைகிழக்கு வெளுத்ததுபோல் மறைந்துவிடும்;
நந்தன் போல் ஓர் இரவில் பயிர் செய்யநான் உம்மை அழைக்கவில்லை.கந்தா கடம்பா கருப்பா முனியா என்றுகருவேல மரத்தடியில் ''மிராசுதார்" போடும் கூச்சல்;கால் நடையைக் கட்டிப்போட்டுசால் கொண்டு மனித முதுகொடிய அவை கருணையுடன் தந்த உரம்;இறைத்த தண்ணீர் - தார்க் கோல் கொண்டு குத்துவதால்சுற்றும் எருதுஇப்படிப் பரம்பரையாய் நடக்கின்ற உழவுத் தொழிலில்பம்பரத்தின் வேகந்தான் வேண்டுமென்று இணைக்கின்றோம்விஞ்ஞானத்தை!படித்தவர்கள் மேல்நாட்டில் விதைக்கின்றார் விளைக்கின்றார்விஞ்ஞானக் கருவியினால் உழுகின்றார்; இங்கோபடித்தவர்கள் அழுகின்றார் பயிர் விளைக்க!விழுகின்றார் வரிசையாக வேலைதேடி!உணவளிக்கும் வேலையிலும் உயர்ந்ததோ வேறோர் வேலை?ஒதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில் என்றால்பழைய பொருள் படித்தவர் தொழுதிடுவார் ஏர் பிடித்தவரை என்பதுதான்!அதுமாற்றி நாம் அமைக்க வேண்டுமன்றோ?"ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்"படித்தவர் எல்லாம் உழுவார் தலைக்கடையில்! - அதாவதுதலைமடையில், கடைமடையில் உழுவார்!பின்னிலையில் இருந்திட்டோம் பலநாளாய்உணவில் தன்னிறைவு காண்பதற்கு ஊக்கம் கொள்வோம்அந்நிலை எய்திட முன்னிலை நிற்பது நம் அரசுநாட்டிலே உற்பத்தி பெருக்கென்றால் அதை விடுத்துவீட்டிலே உற்பத்தி பெருக்குகின்றார்
முத்தென்றும் மணியென்றும்சிட்டென்றும் சிமிழென்றும்கண்ணென்றும் மூக்கென்றும்கணக்கின்றிப் பெறுதல் விட்டுநெல் என்றும்.வரகென்றும்கம்பென்றும்கரும்பென்றும்உழுந்தென்றும்பருப்பென்றும்எள் என்றும்கொள் என்றும்உணவு பெருக்கிடுவீர்; உற்பத்தி செய்திடுவீர்!அதை உணர்த்த உருவான கவியரங்கில்உழவர்களாம் நண்பர் சிலர் கவியேர் உழுதுகாட்ட வந்துள்ளார்வரவேற்கின்றேன்.
கரும்பாயிரம் என்றொருவர் கரும்பு பற்றிப் பாடுவார் என எண்ணாதீர்கரும்பாகப் பாடுவார் நாம் எறும்பாகச் சுவைத்திடலாம்துரைத்தனம்தான் நடந்தது முன்னால்நாற்பத்தேழாம் ஆண்டுக்கு முன்னால்....வெள்ளைத் துரைத்தனம்தான் நடந்தது முன்னால்விடுதலைக்குப் பின் இருபதாண்டில் அண்ணா துரைத் தனம்தான் நடக்கிறது இந்நாள்;ஆடு துரைத்தனம் அந்நாள்... (1947-க்கு முன்)ஆடுதுறைத்தன ரகம் இந்நாள்பாடுகின்றார் அது பற்றி இக்கவிஞர்!
காடு கமழ்நீடு புகழ்பீடு மிகநாடு நிதம்பாடு படகைப் வீடுநிறை ஆடுதுறை இருபத்தேழு :
(கவிஞர் கரும்பாயிரம் "ஆடுதுறை 27 நெல்" பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
ஆடுதுறையில் பிறந்தும் இந்த இருபத்தேழுஆங்கில மோகங்கொண்டே எ.டி.ற்றி-27- ஆயிற்றய்யா?அதுபோல அய். ஆர். எட்டென்று ஒரு நெல்லும்அமோக விளைச்சலிலே பிறிதொன்றை வெல்லும்மூச்சுவிடு முன்னே முன்னுாறும் நானூறும்கவியெழுதும் புலவர் பற்றிக் கேள்வியுண்டு;இதோ கண்ணிமைக்கும் நேரத்தில் கவி கூற ஒருவருண்டுகண்ணிமைதான் அவர் பேராம்எண் எட்டாம் அய்.ஆர்.எனும் நெல் பற்றிப்பண் கொட்டி முழக்கிடுவார்:
(கவிஞர் கண்ணிமை 'அய்.ஆர். 8 நெல்" பற்றிப்பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து:மக்காச் சோளம் பற்றிமற்றொரு கவிஞர் பாடுகிறார்... பெயர்நஞ்சப்பா !
கொஞ்சப்பா தமிழினிலே எனக் கூறிப்பஞ்சப்பா போக்குதற்குநஞ்சப்பா பாட்டு கேட்போம்!
(கவிஞர் நஞ்சப்பா 'மக்காச் சோளம்'' பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;கம்பெடுத்து வருகின்றார் ஒரு கவிஞர்வம்படுத்து வருமென்று அஞ்சாதீர்கம்பு செய்முறை பற்றிக்கவியொன்று பொழிகின்றார்...இவர் பெயர் இராதாகிருட்டிணன்:
(கவிஞர் இராதாகிருட்டிணன் "கம்பு பயிரிடல்"பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;தாமரைக் குளத்தினிலே ராகி விளைக்கின்ற விந்தை கண்டீரோ!தாமரைக் குளம் சேர்ந்தார் செல்லபாண்டியன் எனும் கவிஞர்ராகி விளைப்பதற்குச் செயல் முறைகள் தருகின்றார்செவிமடுத்தின்புறவீர் செயல்படுவீர்:
(கவிஞர் செல்லபாண்டியன் "ராகி" பற்றிப் பாடி முடிக்கிறார்)
தலைவர் கலைஞர்:
அடுத்து;மூவேந்தர் எனும் பெயரில்பாவேந்தர் பரம்பரையில்
பாடுகின்றார் தமிழரசுஒட்டுச்சோளம் பற்றிப் பட்டுக்கவியொன்று நெய்கின்றார்:
தலைவர் கலைஞரின் முடிவுரை:
வேளாண்மைத் துறை அமைச்ச!நல் விவசாயப் பெருமக்காள்!அன்பு நிறை தமிழகத்து அருமை மிகு உழவர்களே!அமோக விளைச்சல் பற்றி ஆறுபேர் சொல்லக் கேட்டீர்அரசின் சார்பிலே அடியேனும் பாடக்கேட்டீர்ஆகஸ்டு 15-ல் அத்தனையும் கேட்டுவிட்டுஆகட்டும் பார்ப்போம் என அலட்சியமாய் இருந்திடாதீர்அமைந்திருக்கும் தமிழரசு வேளாண்மைத் துறையரசுவேகமாய்ப் பணியாற்றி விளைவினைப் பெருக்கிடவேவிரைந்திடும் புத்தரசுகடன் வழங்கல் கடிதாக நிறைவேறும்உரம் வழங்கல் ஒரு கணமும் நிற்காதுபயிர் அழிக்கும் பூச்சிகளின் உயிர் அழிக்ககடன் மருந்து.இந்தப் பாட்டுறவு மட்டுமல்லகூட்டுறவின் துணையுமுண்டுஇருபோக நஞ்சைக்குத் தஞ்சையிலே நீர்த் தீர்வைச் சலுகை தந்து-புஞ்சைக்கு வரிவிலக்கிஉழவர் புன்னகைக்கு மருந்தானோம்-இன்னும் எத்தனையோ செய்ய எண்ணம் - உங்கள்முத்தனையை ஒத்துழைப்பு இருந்தால் போதும்...நிலமுடையார் நெஞ்சத்தில் உழைப்போர்க்கு உதவுகின்றவளம் நிறைய இருத்தல் வேண்டும்
உழைப்போடும் ஒன்றுபட்டு உணவு நிலைதழைப்பதற்குத் துணைபுரிதல் மிகவும் வேண்டும்.கண்ணியனாம் காந்தியார் தலைமையிலேஅந்நியனை விரட்டிவிட்டோம்!நமக்குள்ளே அந்நியர்கள் இன்றில்லை;நம்மவரே அந்நியராய்த் திரிதல் தீது!பதுக்கலிலே கெட்டிக்காரன்பல உயிரைக் கொல்லுகின்றான்கடத்தலிலே கைகாரன்காலனையும் மிஞ்சுகின்றான்கொடுக்காதே நெல் என்பான்கொடியதோர் விலங்காவான்இன்று இவரிடத்தில் 'விடுதலை'யைவிவசாய மக்கள் பெற்றிடுவோம்இதற்கெனவே கண்டிடுவோம் புதிய பாதை...ஆகஸ்டு 15-ல் அறிவிப்போம் சூளுரையை!அமோக விளைச்சல் அண்ணா அரசின் இலட்சியமாம்-அதற்கென உறுதி அளிப்போம் நிச்சயமாய்!
வணக்கம்வாழ்க

மூலமும் சான்றும்